ஒளிவிடும் வளையல்களை அணிந்த அழகு மங்கையே! அங்கே, அப்பொழுதே, அதாவது நம் தாய்மண்ணில் ஆரியம் புகுந்த போதே நம் தமிழ் மொழியின் மான்பினை குலைக்கும் செயலில் ஈடுபட்டார்கள்.ஆரிய மொழியால் காலம்காலமாக வளர்ந்து, செழித்த தாய்த்தமிழின், அழகும், பெருமையும், தனித்தன்மையும் கெடக்காரணமானார்கள். பின்னர் மொழி காணும் இடர் உணர்ந்து உழைக்கலாயினர். சங்கம் வளர்த்த தமிழ் பிழைபடும் காரணமாக இடம் கொடுத்தோமானால், பின் வரும் சந்ததிகள் தவித்திட நேரிடும். இதை உணராமல் உறங்கிடுதல் முறையோ? நெஞ்சம் துடிதுடித்தே வேங்கைப் புலிபோல் மொழிகாக்க சமர் புரிய வீறுகொண்டெழுந்திடுவாய் என பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்....
அங்கப் பொழுதே மொழியலைத்தார்; (அப்பொழுதே மொழியைத் தடுத்தார்கள் / குறைத்தார்கள்)
ஆரியத்தால் தேங்குந் தனிச்சீர்மை தீர எழில்குலைத்தார்; (ஆரிய மொழியால் தேங்கி நிற்கும் தனித்தன்மையும், அழகும் கெடக் காரணமானார்கள்).
ஒங்கப் பிறகுழைத்தார் உற்றுணர்ந்தார்; (பிறகு வளர்ச்சியைத் தேடி உழைத்தார்கள், உன்னிப்பாக உணர்ந்தார்கள்)
ஒண்டொடியே! சங்கப் பிழைக்கே இடந்தரநாம் ஒப்புவமேல் வாங்கப் படுங்காண், நம் வாழ்வுரிமை பின்வருவார் ஏங்கித் தவிப்பதோ? (அழகிய தலையுடைய பெண்ணே! சங்கப் பிழைகளுக்கு நாம் இடம் கொடுத்தால், நம் வாழ்வுரிமையைக் கேட்டுப் பெறுவோம், பின்வருவோர் ஏங்கித் தவிப்பார்கள்).
சுருக்கமாக வடமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழ் மொழியின் தனித்தன்மையும், அழகும் சிதைக்கப்படுகிறது; அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது; நம் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை இந்த பகுதி வெளிப்படுத்துகிறது.
********************
அங்கப் பொழுதே மொழியலைத்தார்; ஆரியத்தால்
தேங்குந் தனிச்சீர்மை தீர எழில்குலைத்தார்;
ஓங்கப் பிறகுழைத்தார் உற்றுணர்ந்தார்; ஒண்டொடியே!
ஈங்கப் பிழைக்கே இடந்தரநாம் ஒப்புவமேல்
வாங்கப் படுங்காண், நம் வாழ்வுரிமை பின்வருவார்
ஏங்கித் தவிப்பதோ? இக்கால் எழாமலே
தூங்கிக் கிடப்பதோ? நெஞ்சம் துடிதுடித்தே
வேங்கைப் புலிப்பிணையே! வீரேலோ ரெம்பாவாய்!
No comments:
Post a Comment