அழகான வடிவு கொண்ட திருத்தமான, குறையற்ற செந்தமிழைக் கெடுக்க, தீய மொழியைக் கொண்ட கொடிய படைகள் அழிக்கப் புறப்பட்டு விட்டார்கள்.
பொன்னொளி வீசும் காதுகளை உடைய பிறை போன்ற நெற்றியை உடைய மகளிரே, நீங்கள் விழித்தெழுந்துவிட்டீர்களா?இது நம்ம கடமையல்ல எண்ணாதீர்கள்! இங்கே எழுந்த அறியாமையின் மாந்தர் கூட்டம் பின்வாங்கி அடங்க வேண்டுமானால்...வெஞ்சங்கூதுங்கள்! வெற்றிப் பாலை ஊட்டுங்கள்! மாதர் குலமே, குன்றேறி நில்லுங்கள் எழுச்சி காண எழுந்திரீர் எம்பாவாய்!
என தாய்த்தமிழை அழிக்க நடைபோட்டு வந்து நிற்கும் அழிவு சக்திகளுக்கு எதிர்த்து சமர் புரிய துயிலெழ அழைக்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்....
***********
போதார் திருவைப் புரைவில்லாச் செந்தமிழைத்
தீதார் பிழைநாவின் வல்படையோர் சீரழிக்கப்
போதரு கின்றார்; புறப்பட்டார்; பொன்னொளிர்கல்
காதர் பிறைநுதலீர்; கண்பாடுங் கொண்டீர்காண்!
ஈதார் கடனோவென் றெண்ணாதீர்! ஈண்டெழுந்த
பேதைப் பெருங்கூட்டம் பின்னிட் டடங்கிடவே
ஊதுமினோ வெண்சங்கம்! வெற்றிப்பால் ஊட்டுமினோ!
மாதர் குலமே, மலையேலோ ரெம்பாவாய்! 3
No comments:
Post a Comment