சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 21 December 2025

செந்தமிழ்ப் பாவை 5

 வஞ்சகர் வந்து அழித்திட நிற்கின்றார், எழுந்து வாருங்கள் என அழைக்கிறார் பாவலரேறு.. 

கொத்து கொத்தாக மலர்களை கொண்டையில் அணிந்து காட்சியளிக்கும் அழகான மங்கையரே, பாடி கூத்தாடி அயர்ந்து தூங்கினோம் என்று அயற்சியுடன் செந்தாமரை போன்ற முகத்தை பஞ்சனையில் சாய்த்து விட்டீரே... வஞ்சகர் தமிழ் அழிக்க களம் புகுந்தார், அறைகூவல் விடுக்கின்றார் சிவந்த தோள்களை உடைய வீர மறப்படையினரே செந்நீர் சிந்தி காத்திடுவோம் தமிழன்னையை.... எழுந்து முன்னேறி வாருங்கள்! அன்னை மொழிக்காக ஆர்ப்பரித்து, தாய்மையின் பெருமைக்காக இரத்தத்தைச் சிந்தத் தயாராகுங்கள்!என சமர் புரிய அழைக்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார் 

*****************'' 

கொந்தார் மலர்க்கொண்டைக் கோதையரீர்; பாடேமுக்

கிந்தா வெழுந்தேம்என் றென்னா தயர்வீர்போல்,

செந்தா மரைமுகத்தைப் பஞ்சணையிற் சேர்த்தீரால்!

வந்தார் தமிழழிக்க; வாயவிழ்ந்தார் வார்படைக்கே!

செந்தோள் மறவர் சிறுத்தாரென் றேயெழுந்து

முந்துவீர் அன்னை மொழிக்கென்றே ஆர்ப்பரிப்பீர்!

சிந்துவீர் செங்குருதி தாய்மைச் செருக்குலத்தீர்!

இந்த நொடியே எழுகேலோ ரெம்பாவாய்! 5

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...