சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 15 December 2025

தெய்வ தரிசனம்

ஆலயத்திற்குள் வர

அனுமதி மறுக்கப்பட்டவனை

தக்க வைத்திட

சொல்லி வைப்போம்,

கோபுர தரிசனம்

கோடி புண்ணியமென....


வாசலில் தட்டேந்தி

வழியற்றவனின் யாசகம்..

உள்ளே ஆண்டவனிடம்

பக்தனின் யாசகம்...

இவர்களுக்கு நடுவில்

தட்டேந்தி யாசகம்....


பணம் படைத்தவனுக்கு

பக்கத்தில் தரிசனம்.. 

இல்லாவனுக்கு எட்டியே

இலவச தரிசனம்.. 

நாதியற்றவனுக்கோ

நடுவீதி உற்சவர் தரிசனம்... 


வள்ளுவம் தந்ததோ

வையத்தார் வாழ்ந்திட

வழிகாட்டும்தத்துவம்...

சனாதனம் காட்டிடும்

சமுத்தை கூறு போடும்

சாக்கடை தத்துவம்... 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...