இப்பூவுலகில் நாம் பிறந்ததற்கான காரணத்தை நாம் முழுமையாக அறிந்திடோம். அதாவது பிறப்பின் பயனை அறிந்திடாமல் இருக்கிறோம்.
ஆழி சூழ் கடலில் அழிந்திட்ட தென்குமரி கண்டமதில் அழிந்து போன நூல்களை அறிந்திடோம்.
அதனால் அழிந்து போன தொன்மை மிக்க நமது பன்னு தமிழ் நூல்களின் அருமையான கருத்துக்களை அறிந்திடோம்.
இன்று நல்ல முடிவுகளை எடுத்திட்டோம் என்ற என்ற செய்தி அறியாமல் இன்னும் உறங்குகிறீர்களே. தமிழர்களே!
நாம் பிறப்பின் மேன்மையையும், கடலால் அழிந்த பல நூல்களின் சிறப்பையும் மறந்துவிட்டோம். நமது மொழிக்கே முன்னோடியான தொன்மையான நூல்கள் இருந்தும், அவற்றின் பெருமையைப் புரிந்துகொள்ளாமல் தூங்குகிறீர்களே, இப்பொழுதேனும் விழித்தெழுந்து தமிழுக்காய் பாடுங்கள் என அழைக்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
**************
மன்னும் பிறவி மடுக்குந்
முன்னம் பிறப்பறியோம்! முந்துகடல் வாங்கியுண்ட
பன்னூல் சிறப்பறியோம்! பாவையரீர்! பாழ்பட்ட
இன்னூல் கணக்கிங் கெடுத்தறியோம்; எந்தமிழ்க்கே
தொன்னூல் தோற்றுவன யாம்கண்டோம்;
நன்னர் முடிவெடுத்தோம்; நாணாமே,
என்னெமக்கே வந்துற்ற தென்றே இமைதிறவாது
இன்னும் துயில்வீர்! எழுகேலோ ரெம்பாவாய்! 2
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment