சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 20 December 2025

செந்தமிழ்ப் பாவை 4

தமிழுக்கு தீங்கு நினைப்போர் தமிழை அழிக்க துடிப்போர் களத்தில் நிற்கிறார்கள் எதிர்த்துப் போரிட தமிழ் பாவையரை அழைக்கிறார் பெருஞ்சித்திரனார்... 

காமத்தை உண்டாக்கும் வில் போன்ற புருவங்களின் மீது கரிய கண் மையைக் குழைத்து, நீண்ட கூந்தலுக்கு மலர் சூடி மாலை அணிந்து அழகாய் தோன்றுபவளே.விடியற்காலையில் ஊமை போல, செவிடு போல உறங்குகிறாயே!.தமிழுக்குத் தீமை செய்பவர்களின் வலிமை குலையட்டும்.அணிகலன்கள் பொடிந்திட, பொன்னிற மேனிக்கு வியர்வை பெருக்கெடுக்கும், அழகிய வயிற்றில், தமிழுக்காக சமர் புரிய இளையோரைப் பெற்றெடுக்கும் தாயே தாமரைப் பூ போன்ற கண்களைத் திறக்க மாட்டாயா? என்று பெண்ணை எழுப்புகிறார்....

தமிழின் பெருமையைக் காக்கவும், அதன் வளர்ச்சிக்குத் துணைபுரியவும், இளைய தலைமுறையைத் தூண்டி எழுப்பவும், பெண்ணே! தாமரைப் பூ போன்ற உன் கண்களைத் திற என, பாவலரேறு பெருஞ்சித்திரனார் உணர்ச்சிபூர்வமாகப் பாடுகிறார். 

********************

காமம் மதர்க்கும் கருவிழிமேல் வில்லிமைக்கே

யாமத் திருளைக் குழைத்திட்டு, நீள்குழற்கே

பூமுன்னாள் மாலை முடித்தாய்; புலர்பொழுதில்

ஊமைச் செவிடா உறங்குதியே! ஒண்டமிழ்க்குத்

தீமை புரிவார் திறங்கலங்க, பூண்பொடிய

மாமைப்பொற் றேமல் மலியும் மணிவயிற்றில்

ஏமம் புரிய இளையோரைப் பெற்றெடுக்குந்

தாமரைப் பூங்கண் திறவேலோ ரெம்பாவாய்! 4

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...