சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 9 December 2025

அகிலம் போற்றிடும் அழகு தமிழ்...

 

அறம் பொருள் இன்பமென

அத்தனையும் கண்டதமிழ்

அகம் புறமென வாழ்வியல்

அற்புதம் கண்ட தமிழ்

ஐவகை நிலம் கண்டு

ஆட்சி செய்த தமிழ்..


இயல் இசை நாடகமென

இலக்கியம் கண்ட தமிழ்.

எத்தனை ஆண்டுகளாயினும்

இளமையோடு உள்ள தமிழ்.

ஆயிரமாயிரம் பெண்பாற்புலவரை

அகிலத்துக்கு தந்த தமிழ்...


இவளோடு பிறந்த மொழி

எத்தனையோ மரித்திடினும்

இன்னமும் உலவிடும் தமிழ்... ..

அன்னியர் தாக்குதல்கள்

அடக்குமுறை கண்டும்

அகிலத்தில் நின்ற தமிழ்..


சனாதான சாக்கடைகள்

சாதி மதம் என பிரித்தாலும்

சாகா வரம் பெற்ற

சங்கம் வளர்த்த தமிழ்..

தொன்மையும் இளமையும்

இனிமையும் இணைந்த தமிழ் ...


உருவமும் உளளடக்கமாய்

உயரத்தே நின்ற தமிழ்..

உவமையும் அனியுமாய

அழகுகவிகள் அள்ளி தந்த தமிழ்

உலகத்தார் உய்வுற வேண்டி

உலகப்பொதுமுறை தந்த தமிழ்..


கருத்தும் கவின்மிகு

கற்பனையும் கலந்த தமிழ்

ஆளவந்தாரையும் அன்பராக்கி

அழகு பார்த்த தமிழ் 

கான்ஸ்டாண்டைனை வீரமாமுனிவராக்கி

கால்டுவெல்லை திராவிடம் பேச வைத்த தமிழ் 


போப்பை குறள் பரப்ப வைத்த தமிழ்

அன்றாடம் வளரும் அறிவியலை

அகிலத்தோடு கற்ற தமிழ்..

ஆயிரம் தடைகள் வரினும்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் 

ஆட்சி புரியும் தமிழ்.. 


அகிலம் போற்றிடும் 

அழகுமிகு தமிழை 

அடக்க நினைத்தவர் 

அடங்கிப் போவார், 

அடக்க நினைத்தாலோ

அடக்கிடுவான் தமிழ் மறவர்... 




No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...