சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 1 February 2026

சொர்க்கத்திலிருந்து ஒரு ஆப்பிள்

சொர்க்கத்திலிருந்து ஒரு ஆப்பிள்( An apple from Paradise.) ஈரானிய திரைப்படம். 2010.

யாகூப் எனும் பக்தியுள்ள முதியவர், புனிதப் போருக்குப் பிறகு கிராமத்தில் இருந்து தனது ஒரே மகன் யூசுப்பை பார்க்க காபூலுக்கு வருகிறார். அவரது மூன்று மகன்களில் இருவர் தமது நாட்டில் புகுந்த சோவியத் யூனியனை எதிர்த்து போரிட்டதில் மரணம் அடைந்து விட்டனர். தனது எஞ்சிய ஒரே மகனை காபுலில் உள்ள ஒரு மதப் பள்ளியில் "குரானைப் படித்து முல்லாவாக கிராமத்திற்குத் திரும்புவதற்காக" சேர்த்திருந்தார். தன் மகன் படிக்கும் மதப் பள்ளியில் தேடி வந்த போது அவன் தன் தந்தைக்கு உடல் நலம் இல்லை என்று கூறி மூன்று நாளுக்கு முன்னரே சென்று விட்டதாக  கூறுகின்றனர் . வேறு மதப்பள்ளியில் சேர போவதாக தகவல் உள்ளதாகவும் கூறுகின்றனர். மகனைத் தேடி அலைந்து ஆகா என்பவரை சந்திக்கிறார்.

ஆகா அவரிடம் யூசுப் சொர்க்கத்திற்கான பாதையில் இருக்கிறான், அவனது தியாகப் பயணம் தொடங்கிவிட்டது என்று கூறி இனிப்பு வழங்குகிறார். தனது மகனை மதத்திற்கும் அவருக்கும் பணிபுரிய தானே அனுப்பினேன் அவனை மீட்டுக் கொடுங்கள் என்று ஆகாவிடம் கெஞ்சுகிறார். ஆகா சினம் கொண்டு உயிர் தியாகம் செய்து மத சேவை செய்திட யூசுப் போயிருக்கையில் மத நம்பிக்கை இழந்து சைத்தானின் பிடியில் இருக்கிறாய் என் முகத்தை முழிக்காதே என விரட்டி விடுகிறார். 

 காபூலில் தனது மகன் சொர்க்கத்திற்குச் செல்வதற்காக ஒரு தெய்வீக தற்கொலை குண்டுதாரியாக மாறியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

தனது மகனை மீட்க எங்கெங்கோ தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் ஒரு விடுதியில் தங்க நேர்ந்த போது அவரது மகனை ஒத்த வயதுடைய ஒருவனைப் பார்த்து, பணிவுடன் நெற்றியைத் தொட, அவர் தவறான நோக்கத்தில் தொட்டுவிட்டதாக அடித்து துரத்தி விடுகிறார்கள். 

மீண்டும் ஆகாவைத் தேடி வருகிறார். அந்த மடம் கேளிக்கை விடுதியாக மாறி இருப்பதைக் காண்கிறார். எங்கெங்கோ தேடி அலையும் அவர் ஒரு தற்கொலை தாக்குதல் நடைபெறும் போது எல்லோரும் தப்பி ஓடுகையில், இவர் தாக்குதல் நடைபெறும் இடத்தை நோக்கி ஓடினர் வருகிறார். இவரை காவல்துறை கைது செய்து விசாரணைக்கு வைக்கிறது. இவர் கைது செய்யப்பட்ட இடங்களில் தனது மகனை தேடி பார்க்கிறார். அப்போது விசாரணை அதிகாரி இவரை விசாரிக்கும் போது உன்னைப் போன்ற உன் மகனைப் போன்ற படிக்காத அறிவிலிகளால் தான் இவ்வளவு பிரச்சினையும் வருகிறது என்று குற்றம் சாட்டுகிறார்

இவர் வெளிநாட்டு சக்திகளின் எடுபிடிகளாக உங்கள் துரோகச் செயலாளர் தான் இவ்வளவு மென பதில் குற்றம் சாட்டுகிறார். தர்க்கம் நீண்டு கொண்டே போகிறது ஒரு கட்டத்தில் நமது தலைவியை தீர்மானிப்பது நாம் அல்ல வெளியில் இருக்கும் சக்திகள் தான் என கூறிவிட்டு இவரை விடுவிக்கிறார் இதன் பிறகு குறி சொல்லும் மாந்திரீகவாதி பள்ளிவாசல் அதிகார வர்க்கம் என படை எடுக்கிறார் இறுதியில் மகனை கண்டுபிடித்தாரா என்பதை விவரிக்கிறது இந்த திரைப்படம். 

 இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தந்தையின் உள் மனது இரண்டு வெவ்வேறு சக்திகளை முன்வைக்கிறது: தந்தைவழி உணர்வுகள் மற்றும் புனித மத சித்தாந்தம். பார்வையாளர் தனது ஒரே மகனையும் புனித நம்பிக்கையையும் எவ்வாறு இழக்கிறார். குழப்பமான மற்றும் அழுக்கு காபூலில் படமாக்கப்பட்ட இந்தப் படம், மதத்தின் தவறான விளக்கத்தையும் தலைமுறைகளின் மாதிரியையும் சித்தரிக்கிறது. 

மத தீவிரவாதத்தின் கையில் சிக்கினால் ஒரு நாடு எவ்வளவு சின்ன பின்னமாகும் என்பதை மிகச் சிறப்பாக இத்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது. 




 85 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படத்தை ஹோமாயுன் மொரோவத் எழுதி இயக்கியுள்ளார்.

ஹஷ்மத் ஃபனேயி, ரஜப் குசைனோவ், வாலி தல்ஷ், மொஹயுதீன் சஃபா. ஆகியோர் மிக சிறப்பாக நடித்துள்ளனர். 

மத நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு விரும்பும் அனைவரும் காண வேண்டிய, காலத்துக்கேற்ப படம் இது. 

2 comments:

  1. கதை நன்றாக சொல்லப்பட்டுள்ளது..விறு..விறுவென போகிறது..கடைசியில் சஸ்பென்சாக முடிக்கப்பட்டுள்ளது...படம் பார்க்க வேண்டும் போலொரு உணர்வை விமர்சனம் வெளிப்படுத்துகிறது...நன்று

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...