இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்பட்ட 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்குப் பிறகு மிகப்பெரிய ஆயுதமேந்திய எழுச்சி என்றால் அது 1946 ஆம் ஆண்டு கப்பற்படை எழுச்சியைத்தான் குறிக்கும்.
இந்திய துணை கண்டத்தில் இருக்கக்கூடிய பிரத்தியேகமான மத சாதிய முரண்பாடுகள், இன மொழி வேறுபாடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏராளமான தகிடு தந்திரங்கள், சூழ்ச்சிகளை பயன்படுத்தி இரு நூற்றாண்டு காலமாக இந்தியாவை ஆண்டு, ஆட்டி படைத்தது ஆங்கில ஏகாதிபத்தியம்.
சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, சிறு சிறு எதிர்ப்புகளைத் தவிர, நீண்ட காலமாக உறக்கத்திலிருந்த இந்திய மக்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் நடத்திய முயற்சிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் ஓரளவுக்கு வெற்றி கண்டது. பின்னர் உருவான முஸ்லிம் லீக் பொதுவுடைமைக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்திய பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டங்களால் இந்தியாவை சுதந்திரத்தின் நெருக்கத்திற்கு வந்து சேர்ந்தது.
இரு உலகப்போர்களுக்கு இடையே மக்கள் இயக்கங்கள் பெரிய அளவுக்கு வளர்ந்து வந்தது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக உலகில் பல காலணியாதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகள் விடுதலை அடைந்ததும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய படை மக்களிடையே உருவாக்கிய உத்வேகமும், ஆங்கிலேயர் இனியும் நேரடியாக இந்தியாவை ஆள முடியாது என்ற முடிவுக்கு வந்து கொண்டிருந்தனர்.
தங்களது சொந்த லாபத்திற்கு சிறிதும் குந்தகம் வந்துவிடாமல், கௌரவமாக இந்தியாவை விட்டு வெளியேறும் நாள் பார்க்க அஸ்திவாரமாக அமைந்தது இந்த கப்பற்படை எழுச்சி என்றால் மிகை ஆகாது.
1946-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ராயல் இந்திய கடற்படை நடத்திய “கப்பல் படை எழுச்சி” (Royal Indian Navy Mutiny) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய இடம் திருப்புமுனையாகும்.
பிப்ரவரி 18-ல் மும்பையில் உள்ள 'தல்வார்' கப்பலில் தொடங்கிய இந்த வேலைநிறுத்தம்,பிரிட்டிஷ் அதிகாரிகளின் பாகுபாடான அணுகுமுறை, இனவெறி, தரமற்ற உணவு மற்றும் இந்திய தேசிய ராணுவம் (INA) வீரர்களின் விசாரணை, ஆகியவற்றுக்கு எதிராக வெடித்தது,
பம்பாயில் (மும்பை) இருந்த 'HMIS தல்வார்' கப்பல் மாலுமிகள், கலகக்காரக் கப்பல்களில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்று கொடிகளையும் ஒன்றாக ஏற்றினர். இப்போராட்டமானது கரையில் இருந்த கடற்படைத் தளங்களுக்கு வேகமாகப் பரவியது.
கராச்சி, சென்னை என நாடு முழுவதும் பரவி பிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கடித்தது.
இந்த கிளர்ச்சி பம்பாயிலிருந்து தொடங்கி, கராச்சி, சென்னை, கல்கத்தா எனப் பிரிட்டிஷ் கடற்படையின் 78-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் கரையோர நிறுவனங்களில் 10,000 மாலுமிகள், மேலும் பரவலான கலவரம், பம்பாயில் நாள் பொது வேலைநிறுத்தம், மற்றும் ராயல் இந்திய விமானப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையில் சிறிய கலகங்கள் என போராட்டங்கள் பரவின.
இப்போராட்டங்களை பிரிட்டிஷ் துருப்புக்கள் மற்றும் ராயல் கடற்படை போர்க்கப்பல்களால் மூலம் கடுமையாக அடக்க முயற்சிகள் நடந்தன.
மாலுமிகளுக்கு ஆதரவாக மும்பையில் லட்சக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் ஊர்வலங்கள் மூலம் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
கப்பற்படை எழுச்சியை அடக்குவதற்காக கப்பலுக்கு செல்ல வேண்டிய உணவு, குடிநீர் ஆகியவற்றை பிரிட்டிஷ் ராணுவம் தடை செய்தது. போராடக்கூடிய மாலுமிகளுக்காக பெண்கள் சப்பாத்தி, மற்றும் இதர உணவுப்பொருட்களை கடற்கரைக்கு கொண்டு சேர்த்தனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரினை இளைஞர்களும் மீனவர்களும் படகுகள் மூலமாக கொண்டு போய் கொடுத்தனர். அதைப் பொறுத்துக் கொள்ளாத அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்த பெண்கள் பொது மக்களை கடுமையாக தாக்கி சுட்டுக் கொன்றனர். பொதுமக்கள் தாக்குப்படுவதை கண்டித்தும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கடையடைப்பு போராட்டங்கள் இந்தியா முழுக்க நடைபெற்றது.
பிரிட்டிஷ் ஆட்சி தனது கடற்படையின் கட்டுப்பாட்டை 48 மணி நேரத்தில் இழந்தது. இந்த புரட்சி, இந்தியர்களின் ரத்தத்தில் சுதந்திர தாகம் இருப்பதை நிரூபித்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இறுதி அடியாக அமைந்தது.
இது ஒரு தனிப்பட்ட கலகமாகத் தொடங்கினாலும், விரைவிலேயே இந்திய சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு மாபெரும் புரட்சியாக மாறியது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்படைக் கலகத்தின் போது காங்கிரசு தலைவர்கள் ஆற்றிய பங்கு என்ன ?
சிவப்புக் கொடி, மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் கொடிகளை ஏற்றி கலகக்காரர்கள் போராட்டங்கள் நடத்திடினும், காங்கிரஸும் லீக்கும் அதிகாரப்பூர்வமாக கிளர்ச்சியைக் கண்டித்து, இறுதியில் வேலைநிறுத்தக்காரர்களை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்தன..
காங்கிரசு மற்றும் லீக் தலைவர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையில் பம்பாய் பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது. தொழிலாளர்களும், மாணவர்களும் கப்பல் படை எழுச்சிக்கு ஆதரவாக தெருமுனைப் போர்களில் இறங்கி போராடும் போது, காங்கிரசு மற்றும் லீக் தன்னார்வத் தொண்டர்களின் துணைகொண்டு ஆங்கிலேய இராணுவப் படைகள், ஆயுதந்தாங்கிய காவல் துறையினர் ஒடுக்க முனைந்தனர்.
பம்பாய் அரசாங்கத்தின் அனுமதி பெற்று பிப்ரவரி 26 அன்று பம்பாயில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நேரும், பட்டேலும் 'பம்பாயில் பரவலாக நடைபெற்ற மக்கள் போரை' அதாவது 'ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலகப் பதாகையை உயர்த்திப் பிடிக்கத் துணிந்த கடற்படை வீரர்கள், தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை' வன்மையாகக் கண்டித்தனர்.
அடுத்த நாள் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நேரு ”இது போன்ற வேண்டுகோள் (வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு பம்பாய் நகருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு) விடுப்பதற்கு ராயல் இந்தியன் கடற்படையின் மையப் போராட்டக்குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை.
நான் இது போன்ற செயல்களை அனுமதிக்கமாட்டேன். என்றார்..
சில இடங்களில் காவல் துறையினரும் கலகம் விளைவித்தனர். மார்ச் 1946-ல் காவல் துறையினர் அலகாபாத் மற்றும் டில்லியில் பட்டினிப் போர் நடத்தினர். ஏப்ரல் மாதத்தில் 10,000 காவலர்கள் வேலை நிறுத்தத்தில். செப்டம்பர் மாதம், பாட்னா மற்றும் பெகுசாரையில் இராணுவக் காவலர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.......
….வீரஞ்செறிந்த கடற்படை வீரர்கள் அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை . குண்டுவீசும் விமானங்களை அனுப்பிக் கடற்படையை அழிப்போம் என்று அட்மிரல் கோட்ப்ரீயின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்த வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து இந்திய தேசிய கடற்படை கடற்படையை மறுபெயரிடப்பட்டது.
காங்கிரசு, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஆங்கிலேயரின் தாளத்திற்கு வாத்தியம் இசைத்தது போதும், கருதினர். இந்தக் கிளர்ச்சியை ஆதரித்த ஒரே நாடு தழுவிய அரசியல் அமைப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே . பின்னர் பிரிட்டிஷ் அதிகாரிகள் கடற்படைக் கலகத்தை " பிரிட்டிஷ் மகுடத்திற்கு எதிராக மத்திய கிழக்கிலிருந்து தூர கிழக்கு வரை நடந்த ஒரு பெரிய கம்யூனிச சதி " என்று முத்திரை குத்தினர்.
அகிம்சையின் தூதுவர் காந்தி கண்மூடித்தனமான வன்முறைக் கோரதாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டதற்காகக் கலகக்காரர்களைக் கண்டித்தார்.
மக்களை உண்மையில் பலி வாங்கிய ஆங்கிலேய ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த உண்மையான வன்முறைக் கோரதாண்டவத்தை அவர் கண்டிக்கவில்லை.
அவரைப் பொறுத்தவரை, “வன்முறை நடவடிக்கைக்காக இந்துக்களும் முஸ்லிம்களும் பிறரும் ஒன்று சேர்வது பாவகரமான செயல்..” இந்தியாவிற்கு விடுதலை வழங்குவோம். என்ற ஆங்கிலேயரின் கூற்றுக்களை நம்ப மறுத்தவர்களையும் அவர் தொடர்ந்து கண்டித்தார்.
ஒன்றுபட்ட மக்களின் வன்முறைப் போராட்டம் பாவகரமானது எனினும், அகிம்சையின் இறைத்தூதர் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வாக சில இலட்சம் மக்கள் கொல்லப்படக்கூடிய நிகழ்வுகளான இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையிலான வகுப்புக் கலவரங்களையும் ”சகோதர யுத்தத்தையும்” எதிர்நோக்கி இருந்தார்.
சர்தார் பட்டேல், அபுல் கலாம் ஆசாத், எஸ். கே. பாட்டீல் (பம்பாய் மத்திய மாகாணக் காங்கிரசு கமிட்டிச் செயலாளராகவும் பின்னர் அரசின் அமைச்சராகவும் இருந்தவர்) போன்ற காங்கிரசு தலைவர்களும், முஸ்லீம் லீக்கைச் சார்ந்த ஜின்னா மற்றும் சுந்தரிகரும் கடற்படை மையப் போராட்டக் குழு விடுத்திருந்த பிப்ரவரி 22 வேலைநிறுத்தத்தை வெளிப்படையாக எதிர்த்துக் கடற்படை வீரர்களை ஆங்கிலேயரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தினர்.
பம்பாய் ஆளுநருடன் பாட்டீல் இரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார். காங்கிரசும், மக்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு காவல்துறைக்கும், ஆங்கிலேய இராணுவப் படைகளுக்கும் உதவுவதற்காக ஆங்கிலேய அரசுக்கு “தன்னார்வத் தொண்டர்களை” அனுப்பின்.
பிப்ரவரி 22 அன்று வேவெலுக்கு எழுதிய கடிதத்தில் கோல்வில்லே கூறும்போது, தான் “பல தன்னார்வத் தொண்டர்களைக் கண்டதாகவும் அவர்களுடைய பணி குறிப்பிட்டது. எல்லைக்குட்பட்டவாறு இருந்தது… எனினும் பயனுள்ளதாக இருந்தது” என்று எழுதினார்
மும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள். முஸ்லீம் லீக் அதற்கு ஒத்து வந்தது.
இந்நிலையில் தனது இன்னுயிரை பணயம் வைத்து போராடிய வீரர்கள் என்ன செய்வார்கள்?
அப்பாவிகளின் கலகம்" ஆசிரியரின் பெயர் பி.சி. தத் எழுதியதாவது "அறுதிப் பெரும்பான்மையினர் மரணம் வரை போரிடவே விரும்பினரே தவிர சரணடைவதற்காக அல்ல."
இறுதியாகக் கடற்படை மையப் போராட்டக் குழுவானது காங்கிரசு மற்றும் லீக்கிடம் சரணடைகிறோமே தவிர ஆங்கிலேய ஆட்சியிடம் அல்லவென கூறிச் சரணடைய முடிவெடுத்தது. மக்களுக்கு விடுத்த கடைசி அறிக்கை அவர்கள் அறிவித்தது: ”முதன்முறையாக படைவீரர்களின் கருதியும், மக்களின் குருதியும் ஒரே நோக்கத்திற்காக இரண்டறக் கலந்துகொண்டு ஆறாக ஓடியது. படைகளில் அங்கம் வசிக்கும் நாங்கள் இதை மறக்கவே இயலாது. எங்களுடைய சகோதரர்களும், சகோதரிகளுமாகிய நீங்கள் மறக்க மாட்டீர்கள் நாங்கள் அறிவோம். நமது மாபெரும் மக்கள் வாழ்க. ஜெய்ஹிந்த்.”
சரணடைந்த வீரர்களை பிரிட்டிஷ் இந்திய அரசு செய்தது என்ன?
சரணடைந்ததற்கு பின்பு மனிதவேட்டை தொடங்கிற்று. 2000க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் தளைப்படுத்தப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய 500 பேருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டு சாதாரணக் குற்றவாளிகளாக நடத்தப்பட்டன. “எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது” என உறுதியளித்த மூத்த காங்கிரசு தலைவர்கள் அவ்வாக்குறுதியை காப்பாற்ற ஒன்றுமே செய்யவில்லை.
கடற்படைக் கலகத்தின் போது துரோகவேலை பார்த்த காங்கிரசு தலைவர்களின் பங்கை சுனிதி குமார் கோஷ் ஆணவப்படுத்துகிறார். இந்தியா முழுவதும் இப்படி படையணிகளில் ஏற்பட்ட கலகம்தான் ஆங்கிலேயரை ஆட்சி மாற்றம் குறித்து உடன் முடிவெடுக்குமாறு நிர்பந்தித்தது. சுடுவதற்கு படை இல்லாதபோது ஒரு ஏகாதிபத்தியம் எப்படி ஆள முடியும்.
அதிகாரிகள் பின்னர் கலகக்காரர்களைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கத் தொடங்கினர்,
இறுதியில் 476 மாலுமிகளை பணிநீக்கம் செய்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு அவர்களில் யாரும் இந்திய அல்லது பாகிஸ்தான் கடற்படைகளில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.
பிப்ரவரி 25 மற்றும் 26, 1946 க்கு இடையில், மற்ற கலகக்காரர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் உத்தரவாதத்துடன் சரணடைந்தனர், அவர்களில் யாரும் துன்புறுத்தப்படுவார்கள் மாட்டார்கள். தேசியத் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, கடற்படைத் தரவரிசையைச் சேர்ந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர், அடுத்த மாதங்களில் துன்பகரமான சூழ்நிலைகளுடன் முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டனர், மற்றும் துன்புறுத்தலில் இருந்து அவர்களைப் பாதுகாத்து சரணடைதல் நிபந்தனை.
இரண்டாவது கிளர்ச்சி வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போர்க்கப்பல்களில் இருந்து துப்பாக்கிச் சூடு வழிமுறைகள் அகற்றப்பட்டன, பிரிட்டிஷ் அதிகாரிகளால் சிறிய ஆயுதங்கள் பூட்டப்பட்டிருந்தன, மேலும் இராணுவம் துருப்புக்கள் போர்க்கப்பல்களிலும் கரையோர நிறுவனங்களிலும் காவலர்களாக நிறுத்தப்பட்டன. கலகம் இருந்தபோதிலும், பிரிட்டிஷ் அட்மிரல்கள் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டும், மேலும் இந்தியப் பெருங்கடலில் பிரிட்டிஷ் நலன்கள் கருவியாக கடற்படை செயல்படுவதாக ஊகங்களைத் தக்க வைத்துக் கொண்டனர்.
கப்பற்படை வீரர்கள், அவர்களோடு இணைந்து கொண்ட காவல் காவலர்கள், இவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாக தேசம் முழுவதும் கிளர்ச்சியில் ஈடுபட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள், என அனைவரும் நடத்திய அந்த சுதந்திரப் போர் மிருகத்தனமாக அடக்கப்பட்டு, தோல்வியடைந்தாலும், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு மிகப்பெரிய அடித்தளத்தை உருவாக்கியது என்பதில் சந்தேகமே இல்லை...
No comments:
Post a Comment