கோய்னர் பக்ஷோ (தி ஜுவல்லரி பாக்ஸ் ) என்பது 2013 ஆம் ஆண்டு அபர்ணா சென் இயக்கிய வங்க மொழி திகில், நகைச்சுவைத் திரைப்படமாகும் .
இந்தத் திரைப்படம் கோய்னர் பக்ஷோ என்ற நாவலையும், ரஷ்மோனிர் சோனாதனா என்ற சிறுகதையையும்அடிப்படையாகக் கொண்டது , இவை இரண்டும் சிர்ஷெண்டு முகோபாத்யாய் எழுதி தேஷ் இதழில் வெளியிடப்பட்டன. இந்தப் படம் கொல்கத்தாவில் ஏப்ரல் 12, 2013 அன்று திரையிடப்பட்டது.
இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, பாகிஸ்தான் பகுதிகளுக்குள் நிலங்களும், இங்கு வெட்டி ஜம்பமுமாய் சுக ஜீவனம் செய்யும் பழைய பெருங்காயமான ஜமீன்தார் குடும்பம், அந்த வீட்டில் பதினோரு வயதில் திருமணம் ஆகி 12 வயதில் விதவையாகி ஏராளமாய் நகைகளை வைத்துக்கொண்டு நகைப்பித்து பிடித்திருக்கும் பெண்மணி, ஒரு முஸ்லிம் இளைஞனை காதலித்து வறுமையின் காரணமாக காதலை துறந்து ஜமீன்தார் குடும்பத்தில் மருமகளாய் வந்திருக்கும் பயந்தாங்கோலி பெண்மணி,அவளது மகள் என மூன்று தலைமுறை பெண்களின் வாழ்வையும், ஒரு நகைப்பெட்டியைச் சுற்றி அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், நகைச்சுவை மற்றும் அமானுஷ்யக் கூறுகளுடன் இந்தப் படம் விவரிக்கிறது.
500 பாரி தங்க நகைகள் கொண்ட ஒரு மரப் பெட்டியின் அசல் உரிமையாளர் ரஷ்மணி, ஃபரித்பூரைச் சேர்ந்த ஒரு பெங்காலி இந்து ஜமீன்தார் குடும்பத்தின் மகள் , 11 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, திருமணமான சில மாதங்களில் விதவையானவர். அவர் தனது நகைகள் மீதான பற்றின் காரணமாக, குடும்பத்தார் தனது நகைப் பெட்டியின் அபகரித்து விடாமல் இருக்க எல்லோரிடமும் தனது கோபத்தை காட்டிக் கொண்டே இருக்கிறார் . வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து, அவரும் அவரது சகோதரர்களின் குடும்பத்தாரும் மேற்கு வங்காளத்தின் இச்சாபூருக்கு அருகில் அமைந்துள்ள நபாப்கஞ்ச் என்ற புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்து வசிக்கிறார்கள் . 1949 ஆம் ஆண்டு, ஒரு ஏழைக் குடும்பத்தின் மகளான சோமலதா, ரஷ்மணியின் தம்பியின் இரண்டு மகன்களில் இளையவரான சந்தனின் மனைவியாக வீட்டிற்கு நுழைகிறார். நகைகள் மீது பேராசை இல்லாததால், ரஷ்மணி அவள் மீது ஒருவிதமான பிரியம் கொள்கிறார். இருப்பினும், சோமலதாவின் திருமணத்திற்கு சில மாதங்களுக்குப் பிறகு, ராஷ்மணி இறந்துவிடுகிறார். அவரது நகைகள் மீதான அதிகப்படியான பற்றுதல் காரணமாக, ராஷ்மணி தனது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் ஒரு பேயாக மாறுபவர், தனது நகைகளை பேராசை கொண்ட சகோதரர் கள் குடும்பத்தார் கையகப்படுத்துவதை தடுக்க சோமலதாவிடம் ஒப்படைக்கிறார். சோமலதாவின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ராஷ் மணி அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறார். காரணம் குடும்பத்தின் ஆண்கள் பிரபுத்துவ பாரம்பரியத்தைப் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு எந்த விதமான உழைப்பிலும் ஈடுபடாமல் சுக ஜீவனம செய்வதற்காக எல்லா பொருள்களையும் விற்று காலம் கழிக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் ராஷ்மணியின் இரண்டு சகோதரர்களுக்கிடையேயான சொத்து தகராறு காரணமாக நீதிமன்ற செலவு மற்றும் சந்தனின் மூத்த சகோதரரின் சூதாட்டப் பழக்கம் காரணமாக சொத்து கரைகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், ராஷ்மணியின் ஆவியின் எப்போதும் கண்காணிப்பில், நகைப் பெட்டியை சோமலதா மறைத்து வைத்திருக்கிறாள். இறுதியாக, மறைத்து வைக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை அடகு வைப்பதன் மூலம் ரகசியமாக சில பணத்தை ஏற்பாடு செய்து அந்தப் பணத்தில் அவள் தனது மாமனார் மற்றும் மைத்துனரின் எதிர்ப்பையும் மீறி,ராஷ்மணியின் பெயரில் புடவைகள் விற்கும் கடையை நடத்துகிறாள் . சோமலதா கடையை திறம்பட நிர்வகிக்கிறாள், அடகு வைக்கப்பட்ட நகை திருப்பித் தர முடிந்தது.
சோமலதா திருமணத்திற்கு முன்பு ரஃபீக் என்ற பெங்காலி முஸ்லிம் கவிஞரை காதலிக்கிறாள் , ஆனால் பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் மனசாட்சிக்கு விரோதமாக அவரை கைவிட்டு சந்தனை தனது திருமணம் செய்து கொண்டாள்,
ராஷ்மணி தனது சகோதரர்கள் திருமணத்திற்கு புறம்பான மற்ற பெண்களோடு உறவாக இருப்பதைக் கண்டு வெறுத்தவள், சோமலதாவை முன்னாள் காதலன் ரஃபீக்குடன் சேர வற்புறுத்துகிறார். சோமலதா மறுக்கவே , மனமுடைந்த ரஃபீக் தற்கொலை செய்து கொண்டார்.
ராஷ்மணி சோமலதாவின் தன் ஆலோசனையை கேட்க தவறியதால், அவளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு சோமலதாவின் மகள் சைதாலியைச் சந்திக்கத் தொடங்கினார்.
நவீனத்துவம் வாதியாகவும் கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் சைதாலி, ராஷ்மணியின் பேயுடன் விரைவில் நட்பு கொள்கிறாள். சைதாலி ராஷ்மணியுடன் நிறைய முகபாவனைகளைப் பகிர்ந்து கொண்டதால், ராஷ்மணி சைதாலியாக மறுபிறவி எடுத்ததாக சோமலதா நம்புகிறாள், எனவே ராஷ்மணி நகைப் பெட்டியை அவளிடம் ஒப்படைக்கிறாள்.
படம் இப்போது 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போர் வெடித்ததிலிருந்து தொடர்கிறது . ராஷ்மணியின் காதலன் பன்வாரிலால் முக்திவாஹினிக்கு பொருட்களை வழங்குவதற்காக பலமுறை எல்லையைத் தாண்டிச் செல்கிறான் . பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு , ராஷ்மானியின் பேயின் ஆலோசனை பேரில் சைதாலி, அந்தப் பெட்டியில் உள்ள நகைகளையும் முக்தி வாஹினியின் நோக்கத்திற்காக நன்கொடையாக வழங்குகிறார்.
பின்னர், ரஃபீக் எழுதிய கடைசி சில கவிதைகள் ஸ்கிரிப்ட்களிலிருந்து சைதாலி ரஃபீக் மற்றும் சோமலதாவின் கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்கிறார். அந்த கவிதைகளை அவள் ஒரு கைவிடப்பட்ட வீட்டில் கண்டுபிடித்தாள், அங்கு அவள் தனது காதலன் "பேனு"வைச் சந்தித்தாள். அந்தக் கடிதங்களை அவள் அநாமதேயமாக சோமலதாவிடம் கொடுக்கிறாள். இதன் மூலம் ரஃபீக் கடந்த காலத்தில் தன் மீது கொண்டிருந்த அன்பின் ஆழத்தை அவள் உணர்த்துகிறாள். இறுதியில் சோமலதா கடந்த காலத்தில் தான் கொண்டிருந்த உணர்வுகளை இறுதியாக உணர்ந்தாள், இது ராஷ்மானியின் ஆன்மா இறுதியாக அமைதியடைந்து பேய் நிலையில் இருந்து விடுவிக்கப்படுகிறது.
தயாரித்தவர் ஸ்ரீகாந்த் மொஹ்தா மகேந்திர சோனி.
ஒளிப்பதிவு சௌமிக் ஹல்தார்.
எடிட்டிங் ரபிரஞ்சன் மைத்ரா.
இசையமைத்தவர் தேபோஜ்யோதி மிஸ்ரா.
ராஷ்மணியாக மௌசுமி சாட்டர்ஜி, சோமலதாவாக கொங்கனா சென் சர்மா, சைதாலி & இளைய ராஷ்மணியாக ஸ்ரபந்தி சாட்டர்ஜி, சந்தனா சாஸ்வதா சாட்டர்ஜி, சந்தனின் தந்தையாக பரண் பந்தோபாத்யாய் , ராஷ்மணியின் தம்பிசந்தனின் அண்ணியாக அபராஜிதா ஆதியா சந்தனின் மூத்த சகோதரராக பிஜுஷ் கங்குலி, சந்தனின் அம்மாவாக மானசி சின்ஹா, சோமலதாவின் ஒரு காலத்தில் காதலரான ரபீக்காக கௌசிக் சென்.பன்வாரிலால் அக்கா பேனுவாக கௌஷிக் ராய் , சைதாலியின் காதலன் & ராமகிலாவ், ஒரு தாழ்த்தப்பட்ட பிஹாரி இந்துத் தொழிலாளி, இவருடன் இளம் ராஷ்மானி சிறிது நேரம் பழகினார், சந்தனின் தந்தைவழி மாமாவாக மோனு முகோபாத்யாய் , ராஷ்மணியின் மூத்த சகோதரர், சந்தனின் கள்ளக்காதலி கமலாவாக சுதிப்தா சக்ரவர்த்தி, குடும்ப மருத்துவராக பிரதீப் முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
நம்ப முடியாத பேய் கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் கதை செல்கிறது. நிலப்பிரபுத்துவம், ஆனாதிக்கம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை நையாண்டியாக திரைப்படம் விமர்சிக்கிறது.
இத்திரைப்படத்தை யூ டியூப் இணையதளத்தில் காணலாம்.
No comments:
Post a Comment