சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 7 February 2026


மதுரை நட்பு தமிழ் வட்டம்  சார்பாக 259 ஆவது இணைய வழி கூட்டம் 1.2. 2026 அன்று நிறுவனர் தலைவர் புலவர் நானா ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தினை தமிழ் வானம் திருவரங்கம் ராஜேந்திரன் ஐயா அவர்கள் துவக்கி வைத்தார்கள். ஆசிரியை திருமதி மு. சத்தியப்ரியா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


புரட்சி கவி பாரதிதாசன் அவர்களின் பாடலை கவிஞர் கலைச்செல்வன் ராசாங்கம் அவர்கள் பண்ணிசைத்து பாடினார்.


இன்றைய இந்தியாவின் நிலை, இளைஞர்களின் பங்கு மற்றும் எதிர்காலத்தின் நிலை குறித்து மிகுந்த அக்கறையுடன் தலைவர் அவர்கள் மிக சிறப்பான தலைப்பில் சிறந்ததோர் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருந்தார்.


இன்றைய பெரும்பான்மை இளைஞர்கள் விலை போய்க் கொண்டிருக்கிறார்கள் /விதையாகக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு தலைப்பில் இரு அணியினர் பங்கேற்றனர், சிந்தனையை தூண்டும் பட்டிமன்றம் நடைபெற்றது.




இன்றைய பெரும்பான்மை இளைஞர்கள் விலை போய்க்கொண்டிருக்கிறார்கள் என்ற தலைப்பில் விவாதத்தை துவக்கி வைத்த கவிஞர் பொன். நா அவர்கள் இன்று இளைஞர்கள் காதல், கல்வி, போதை, சமூக வலைத்தளம், சினிமா கவர்ச்சி, பதவி அரசியல் என்று பலவகையிலும் விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களை துன்புறுத்தி வாகனங்களை வாங்கிக் கொண்டு அலப்பறை செய்வது, பொறுப்பில்லாமல் திரிவது. அவர்களின் வாழ்வைப் பாதிக்கும் புதிய கல்விக் கொள்கை போன்ற எந்த விஷயத்திலும் அக்கறை காட்டாமல் அரசியல் கட்சிகளுக்கு விலை போ வது என இளைஞர்கள் நிலை குறித்து எடுத்துரைத்தார். 


மேலும் அந்த அணியின் சார்பாக பேசிய புதுவை வி இளவரசி சங்கர் விதிவிலக்குகளை எல்லாம் விதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. விளைகின்ற விளைச்சலில் ஒன்றிரண்டு பதராய் இருந்தால் பரவாயில்லை, கருக்காய் நெல்லே அதிகமாக இருந்தால் விதை நெல்லாய் மாறுவது எப்படி என்று வினவினார். பெரும்பான்மையான இளைஞர்கள் நீட் போன்ற தேர்வுகளுக்கு ரிப்பீட் மீண்டும் ரிப்பீட் என்று திரும்ப திரும்ப படை எடுக்கிறார்கள். ஒருவிதமான உறக்க மயக்கத்திலே இருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தார். 


எந்தெந்த விஷயத்தை பார்க்ககூடாதோ அதை பார்ப்பதும், எந்த விஷயத்தை பேசக்கூடாதோ, அதை பேசுவதும், எந்த செயலை செய்யக்கூடாதோ அதை செய்வதுமாக திரிகிறார்கள்.


"அலைபேசி மக்களை கேளா நிலை அளவே மாற்றுதல் நன்று" 


"கலையாலே மக்கள் கருத்தாக்கம் பெற்று நிலை மாறி வாழ்தல் நன்று" என்று தானியற்றிய குறள் வெண்பாக்களைக் கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார். 


தொடர்ந்து அந்த அணி சார்பில் பேசியபுதுகை சீனி கார்த்திகேயன் ஒரு நாட்டின் மிகப்பெரிய செல்வமாக கருதப்படுவது இளைஞர் பட்டாளமும் அவரது அறிவும் செல்வமும் தான்.


அதனால் தான் "பாரதி ஒளி படைத்த கண்ணினாய் வா வா

என்றும், அதே நோக்கில் தான் புரட்சிக்கவி பாரதிதாசனும் சிறுத்தையே வௌியில் வா! !என்று இளைஞர்களை சீறிடச் சொன்னான். ஏனெனில் இளைஞர்களுடைய வலிமை என்பது மகத்தானது.


ஆனால் பெரும்பான்மை இளைஞர்கள் தங்களுடைய சக்தியை எல்லாம் விரயமாக்கிக் கொண்டு பல்வேறு வீண் செயல்களில் ஈடுபட்டு தீய சக்திகளுக்கு விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டில் மதவெறியின் விளைவாக பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்தவர்கள், ஆசிபாவை கோவிலிலே கெடுத்தவர்கள், மணிப்பூரிலே மகளிரை நிர்வாணம் ஆக்கியவர்கள், ஊரை நாசமாக்கியவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் என பெரும்பகுதி தூண்டி விடப்பட்ட இளைஞர்கள் தானே!

சனாதன சக்திகளை உருவாக்கி வைத்த சாதிய வன்மத்தோடு

காதலை அழிக்க துடித்திடும் இளைஞர் பட்டாளம் எவ்வளவு பேர்? ஆணவக் கொலை செய்திடுவோர் அதிகம் பேர் இளைஞர் தானே?


அறிவு ஜோதி கல்விக் கூடம் தன்னிலே ஜாதிய வெறி கொண்டு கையில் கட்டும் கயிற்றில் கூட அடையாளம் வைத்து தாக்கி திரிவது இளைஞர்கள் தானே?


அறிவை வளர்த்திடும் வேலையை விட்டு விட்டு அதிகம் மது போதையிலே, சினிமா கவர்ச்சிக்கு விலை போய் சிந்தனையை சிதற விட்டு சீரழிந்த இளைஞர்கள் என இன்றைய நிலைமையை ஆவனப்படுத்தினார்.. 







இன்றைய பெரும்பான்மை இளைஞர்கள் விதையாகிக்கொண்டிருக்கிறார்கள்

என்ற தனது வாதத்தை துவக்கிய வழக்கறிஞர் மு. ஆசைத்தம்பி கல்வி கற்ற உயர் முன்னேற்றம் அடைந்த அனைவருமே விதையாகி போனவர்கள் தான் என்று துவக்கி ஏராளமானோர் எடுத்துக்காட்டுகளை கூறினார் ஏராளமான கல்வித் தேர்வுகள் வேலைக்கான போட்டித் தேர்வுகள் அத்தனை இளைஞர்கள் போட்டி போட்டு பங்கேற்பதும் நிறைய சாதனையாளர்கள் இன்று உருவாகி இருப்பதும் விதையாகக் கொண்டாடப்படுகிறது என்பது தான் மேலும் பல நூல்களில் அதிக அறிவுத் தேடல்களில் ஈடுபடுவதும் புத்தகத் திருவிழாக்களில் பங்கேற்பதும் இளைஞர்கள் தானே என எடுத்துரைத்தார். 

அந்த அணியின் சார்பாக பேசிய திருப்பத்தூர் ம. கவிதா அவர்கள் சாலை போக்குவரத்தில் சில நிகழ்வுகள் நடந்ததால் சாலைப்போக்குவரத்தே குறைபாடானது என விபத்து கூற இயலாது, வளர்ச்சியில் இன்று ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பதும், அதில் பெண்களின் பங்கேற்பு மிக அதிகமாக இருப்பதையும் எடுத்துரைத்தார். மிகவும் வளர்ந்த நாடான இத்தாலியில் 41% பெண்கள் தான் பணியில் இருக்கும் போது, ​​தமிழகத்தில் 43% பெண்கள் நாடு முன்னேற்ற பாதையில் ஈடுபடுகிறார்கள் செல்வதற்கான அடையாளம். விதை நெல்லை வீதியிலே வீசுவதை விட்டுவிட்டு வயலில் வீசினால் தான் விளையும் என்றார். இருட்டை குறை கூறுவதை விடுத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் தான் முன்னேற்ற முடியும். மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்வை நோக்கி முன்னேறிட இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். சனாதன சதியால் சாதி உருவாக்கப்பட்ட கொடுமைகள் அகன்றிட, சாதி மறுப்பு திருமணங்களில் ஏராளமான இளைஞர்கள் பங்கெடுத்து விதையாய் மாறி வருகின்றனர். என்பதை அறுதியிட்டு கூறினார். 

அந்த அணியின் சார்பாக இறுதியாக பேசிய சென்னை முத்துக்குமாரசாமி உலகநாதன் அவர்கள் டிரம்ப் அவர்கள் கூகுள் நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவர்களிடம் யாருக்காக உழைப்பீர்கள் என்று கேட்டதற்கு, மனிதம் தழைக்க நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறி இளைஞர்கள் விதையாக செயல்பட வேண்டும் உதாரணம் உரையை துவக்கினார். மொழி காக்க போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மை இளைஞர்களால் தான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றமும் நிகழ்ந்தது. கல்வி வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த தமிழகத்தில் திராவிட சக்திகள் கடுமையாக முயன்று, ஏராளமான கல்வி நிறுவனங்களின் ஆரம்ப கல்வி கல்வி துவங்குகிறது பல்கலைக்கழகங்கள் வரை உருவாக்கியது, வேலை வாய்ப்பில் மிகப் பெரிய அளவுக்கு முன்னேறி உலகமெங்கும் தங்களது புகழை பரப்பி வருவது தமிழக இளைஞர்கள் விதையாகியிருக்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களாக எடுத்துரைத்தார். இந்த வளர்ச்சியை தடுப்பதற்கு சனாதன சக்திகள் கடுமையாக முயலும்போது, ​​அதை தடுத்து நிறுத்திய திராவிட இயக்கங்களும் இளைஞர்களும் தயாராக இருக்கிறார்கள் ஆவணப்படுத்தினார். 



இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு தனது நடுவர் உரையாற்றிய தமிழறிஞர் நா நா ஆறுமுகம் அய்யா இது தீர்ப்பு அல்ல, காரணம் தீர்ப்புகள் திருத்தப்படலாம் ஆனால் உண்மைகள் ஒருபோதும் திருத்தப்பட மாட்டாது என துவங்கி இந்த பட்டிமன்றமானது, வெற்றி தோல்விக்காக அல்லாமல் சமூக அக்கறையோடு, அதை பல விஷயங்களை எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பமாக மிகச் சிறப்பாக உள்ளதை பயன்படுத்தினர் என்று இரு அணியினரையும் பாராட்டினார்.

எல்லோருக்கும் கல்வி என்ற முயற்சி, பல்வேறு தடைகளுக்கு இடையில் சிறப்பாக முன்னேறி வரும்போது

அதை தடுக்கும் விதமாக பழைய குலக்கல்வி திட்டத்தின் மறு பதிப்பாக, கொல்லைப்புற வழியாக விஸ்வகர்மா திட்டம் இருப்பதாக எச்சரித்தார். நீட் தேர்வு போன்று எத்தனை விதமான தடைகள் வந்தாலும் அதை உடைத்து தெரியும் வல்லமை தமிழக இளைஞர்களுக்கு உண்டு என்றார். 

இளைஞர்களின் சக்தி விரையம் ஆகிறது என்ற கவலையை வெளிப்படுத்தியவர், பாரதிதாசன் பாடிய சிறுத்தையே வெளியே வா என்ற வரிகளை நினைவுகூர்ந்து வெளியே வந்த சிறுத்தை மீண்டும் கூண்டுக்குள் வந்து விட்டதே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பணம், பதவி, போதை, மதம், ஜாதி என பல்வேறு வெள்ளச் சூழல்களில் சரி பாதி இளைஞர்கள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள் என்ற தனது வருத்தத்தை வெளிப்படுத்தியவர், இன்றைய தினம் பெரும்பான்மை இளைஞர்கள் பல்வேறு விஷயங்களுக்கு விலை போய்க்கொண்டிருக்கிறார்கள் அவர்களை விதையாய் மாற்ற வேண்டியது மனிதத்தை ,மனித நேயத்தை, மொழியை நேசிக்கிறார்கள் கூடியது கடமை என்று தனது தீர்ப்பை வழங்கினார். 

இறுதியாக கருத்துரை வழங்கிய இசை அன்பன் அவர்கள் காலத்திற்கேற்ற தேவையான பட்டிமன்றம் இது. இளைஞர்களது நாடி பிடித்து எதார்த்த நிலையை நிறைய விஷயங்களை எடுத்துரைத்த பட்டிமன்றம் என்று பாராட்டி, இது போன்ற விஷயங்கள் அனைவரிடமும் செலுத்தப்பட்டு இளைஞர்களை சரியான திசையில் கொண்டு செல்வது நமது கடமை என்று கூறினார். 

நிறைவாக தமிழ் வானம் ராஜேந்திரனார் ஐயா இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டி நன்றியுரை வழங்கினார். 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...