சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 12 February 2026

அறிஞர் யார் துறவி யார்?!

அறிஞர் என்பவர் யார்?!துறவியல் என்பவர் யார்? என்பதற்கு தமிழ் கூறும் நல்லுலகு பல பொருட்செறிவுள்ள விளக்கங்களை கொடுத்துள்ளது. 

அகன்ற அறிவும், அதனைக் காட்டிக்கொள்ளாத அடக்கமும் கொண்டு வாழ்பவர் ஆன்றடங்கு அறிஞர். அவர்கள் செறிவும் உடையவர்கள்.
அடக்கம் என்பது பகட்டு இல்லாமை. செறிவு அறிவில் செறிவு. ஆன்ற அறிவு என்பது பல்துறையிலும் பரந்திருக்கும் அறிவு.அவர்களின் கொள்கை சால்பினை உடையது. உடல் சாயாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உலகுக்கு உதவுபவர்கள். தேன் நாவில் இனிப்பது போல் அவர்களின் தோற்றம் பார்வைக்கே இனிக்கும். சாவகர் என்போர் அந்த நோன்பிகளின் மாணாக்கர்கள். நோன்பிக்குத் தொண்டு செய்வோரும் சாவகர்களே. சமணத் துறவியரை சாவகர் என்றும் கருதுபவர். 

நிகழ் காலத்தை எல்லாரும் அவரவர்களுக்குத் தெரிந்த அளவில் பார்க்கிறார்கள். இவர்களோ கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து, அதனால் எதிர் காலத்தில் நிகழப்போவதையும் தெளிவாக உணர வல்லவர்கள். தம்மைச் சூழ்ந்துள்ள ஒக்கல், தம்மை நாடிவரும் ஒக்கல் ஆகியோரின் எதிர்காலம் பற்றியும் அறிந்துரைக்க வல்லவர்கள் இவர்கள்..


நமது போதாத காலம் வாயை வைத்து பிழைப்பவர்கள், வாய்க்கு வந்ததை உளருபவர்கள், கடந்த காலத்திற்கு புராண புளுகுகளை இட்டுக்கட்டி இயம்புபவர்கள், நிகழ்காலத்தை ஏமாற்றுபவர்கள், எதிர்காலத்தில் பாவ புண்ணியம் நரகம் என்று மிரட்டுபவர்கள் ,தீவுகளை சொந்தமாக வைத்துக்கொண்டு கப்சா விடுபவர்கள், காட்டை வளைத்து போட்டு களவாணித்தனம் செய்பவர்கள், பெண் பித்தர்கள், போதை ஆசாமிகள் எல்லாம் துறவிகளாகவும் அறிஞர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

துறவியர் என்பவர்க்கு திருவள்ளுவர் மிக அற்புதமாக குரல் ஒன்றை எழுதியுள்ளார். 
"நீட்டலும் மழித்தலும் வேண்டாம் உலகம் பழித்தது ஒழித்து விடின்" 

சங்க கால இலக்கியங்கள் ஏராளமாய் எடுத்துக் கூறினாலும் அதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் தவிர மக்களுக்கு வழிகாட்டும் அறிஞர்களாக இருப்பதில்லை துறவிகளும் கற்றறிந்த அறிஞரென காட்டிக்கொள்பவர்களும்.... 
*********** 

பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்க . . . .

யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்

இவ்வடிகள் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில் (வரி: 476-480) இடம்பெற்றுள்ளன. சமண முனிவர்களின் (சாவகர்) ஒழுக்கம், அறிவு மற்றும் தவ வலிமையை இப்பகுதி விவரிக்கிறது. முக்காலமும் உணர்ந்த சான்றோர்கள், வானத்தையும் நிலத்தையும் நன்கு அறிந்தவர்கள், சலியாத கொள்கை உடையவர்களாகத் தவவாழ்வில் செறிந்திருந்தனர். இது குறிக்கிறது. 

பாடலின் பொருள் விளக்கம்:

வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் - வண்டுகள் மொய்க்கப் பழுத்த தேனையுடைய,
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச் - மலரையும் தூபத்தையும் தூவிச் சாவகர்கள் (சமணர்கள்) போற்ற,
சென்ற காலமும் வரூஉ மமயமும் - கடந்த காலத்தையும், இனிவரும் காலத்தையும் (காலம் மூன்றையும்),
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு - அன்றி, இங்கேயே (இப்பிறப்பிலேயே) தோன்றும் ஒழுக்கத்தையும்,
நன்குணர்ந்து வானமு நிலனுந் - நன்கு உணர்ந்து வானத்தையும் நிலத்தையும்,
தாமுழு துணருஞ் சான்ற கொள்கைச் - தாங்களே முழுமையாக உணர்ந்த சான்றோர்களின் கொள்கையை உடைய,
சாயா யாக்க . . . . ஆன்றடங் கறிஞர் - அழியாத உறுதியான உடலையும் (சாயா யாக்கை), ஆழ்ந்த அடங்கிய அறிவையும் உடையவர்கள் (முனிவர்கள்),
செறிந்தனர் நோன்மார் - நிலைபெற்றுத் தவத்தோடு வாழ்ந்தனர்.. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...