இன்று உலகின் இரு பெரும் ஆளுமைகளின் பிறந்த நாள்.
இயற்கை மற்றும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை
உலகுக்கு வழங்கிய பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் மற்றும் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் (1809 - 1887) பிறந்தநாள் இன்று...
HMS பீகில் கப்பல் பயணம் மூலம் பெறப்பட்ட தரவுகள், 1859-ல் "உயிரினங்களின் தோற்றம்" என்ற புகழ்பெற்ற புத்தகத்தை வெளியிட்டது. "பரிணாமத்தின் தந்தை" எனப் போற்றப்படும் இவர், உயிரினங்கள் பொதுவான மூதாதையரிடமிருந்து தோன்றின என்பதை நிரூபித்தார்.
12 பிப்ரவரி 1809, இங்கிலாந்தின் ஷ்ரூஸ்பரி (ஷ்ரூஸ்பரி) நகரில் ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்த சார்லஸ் டார்வின்தந்தையின் விருப்பப்படி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார், பின் விருப்பமின்மையால் பாதியில் நிறுத்தினார். கேம்பிரிட்ஜில் இறையியல் பயிலச்சென்று, பாதை மாறி, இயற்கை வரலாற்றில் அதிக நாட்டம் கொண்டார்.
1831 முதல் 1836 வரை, HMS பீகில் (HMS Beagle) எனும் அறிவியல் கப்பலில் உலகைச் சுற்றிய பயணம் மேற்கொண்ட போது தென் அமெரிக்கா, கலாபகஸ் தீவுகள் உட்பட பல இடங்களில் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் புதைபடிவங்களை ஆராய்ந்தார்.
பயணத்தின் அவதானிப்புகள் மூலம், உயிரினங்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு உயிர்வாழ்கின்றன. இயற்கைத் தேர்வு என்ற புகழ்பெற்ற கோட்பாட்டை உருவாக்கினார்.
1859-ல், "உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species)" என்ற புரட்சிகரமான நூலை வெளியிட்டார்.
19 ஏப்ரல் 1882-ல் காலமானார், இவரது உடலானது வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டார்வினின் கோட்பாடுகள் நவீன உயிரியலின் அடிப்படையில் கருதப்படுகின்றன.
மனிதன் தனித்து வானில் இருந்து கடவுளால் படைக்கப் பட்டு விழுந்தவன் அல்ல, இயற்கையின் நீண்ட பரிணாமப் பயணத்தின் ஒரு தொடர்ச்சி மட்டுமே அறிவியல் மூலம் உலகுக்கு உணர்த்திய புரட்சியாளர்.
மனிதனின் முன்னோர் குரங்கு இனத்துடன் தொடர்புடையவன் என்றும், உயிர்களின் ஆதாரம் மிகச் சிறிய உயிரணு நிலைகளில் தேடப்பட வேண்டியது என்றும் கூறிய அவரது கருத்துகள், மூடநம்பிக்கைகளின் முதுகெலும்பை முறித்தவை. இந்த உண்மை ஒரே ஒரு பெரும் செய்தியைச் சொல்கிறது.
இங்கே உயர்வு தாழ்வு இல்லை, சாதி இல்லை, மதம் இல்லை. எல்லோரும் ஒரே இயற்கையின் பிள்ளைகள், எல்லோரும் மனிதர்கள். பிறப்பால் யாரும் பெரியவரோ சிறியவரோ அல்ல.
நாட்டின் எல்லை கோடுகள் மனிதனின் வாழ்விடம் இதை பிரிக்க தான் முடியும். ஆனால் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகள் தான். ஒவ்வொரு மதம், இனம், சாதி என்று சொல்லி பெருமை படும் யாரும் அந்த சாதி மத தனி நபர் பெற்ற பிள்ளைகள் இல்லை. ஜாதி மத வெறி, சுய சாதி பெருமை பேசும் நபர்கள் வேறு சாதி மத ஆட்கள் கண்டுபிடித்த, எதையும் பயன்படுத்த வேண்டாம்.
எனவே அறிவாலும் மனித நேயத்தாலும் தான் மனிதன் உயர வேண்டும். மனித குலம், அறிவுலகம் டார்வினை நினைவுகூறும் நாள்.. அறிவை வணங்கும் நாள், சமத்துவத்தை நினைவுகூரும் நாள்.
நாம் யாரும் கடவுளின் கைவண்ணத்தில் தனித்தனியாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. சிந்திக்கும் திறன் கொண்ட ஒரு நவீன குரங்கு. அதுவே மனிதன். இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் அகந்தையும் அநீதியும் கரையும். மனிதனை மனிதனாக மதிப்பதே உயர்ந்த சிந்தனை. சமத்துவமே நாகரிகத்தின் அடையாளம். மனிதம் வாழ்க....
*****************
ஆப்ரகாம் லிங்கன் பிறந்த நாள் இன்று. மனித சமத்துவத்தின் அர்த்தத்தை அரசியலின் மையத்தில் நிறுத்திய தலைவர்.
அடிமைத்தனத்தை ஒழிக்கத் துணிந்த மனசாட்சி, மனிதனைப் பொருளாக அல்ல மனிதனாகப் பார்க்க வேண்டும் என்பது உறுதி. அதுவே லிங்கனின் பெருமை. பிறப்பால் யாரும் அடிமையல்ல, யாரும் எஜமானல்ல என்பதை உலகுக்குச் சட்டமாகச் சொன்னவர்.
அதிகாரம் என்பது ஆட்சி செய்யும் கருவி அல்ல, அநீதியை அகற்றும் பொறுப்பு என்பது நிரூபித்தவர். மனித மரியாதை, சுதந்திரம், சம உரிமை இவை எல்லாம் கனவுகள் அல்ல, அடிப்படை உரிமைகள் என்பதை நினைவூட்டும் நாள் இது. மனிதனை மனிதனாக மதிக்கும் சிந்தனை வாழ்க.
அமெரிக்கா என்பது வெள்ளை குடியேறிகளால் உருவான ஒரு நாடு. அங்கிருந்த மண்ணில் மைந்தர் பலரை கொன்று குவித்து, மற்றவரை அடிமையாக்கியும், துரத்தியும் வெள்ளை குடியேறிகள் அமெரிக்கா என்று ஒரு நாட்டை தமதாக்கிக் கொண்டனர். ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து ஏராளமான கறுப்பு இனத்தவரை மனித வியாபாரம் மூலம் கொண்டு வந்து அவரது உழைப்பாலும், மண்ணின் மைந்தர்கள் உழைப்பாலும் வளர்ச்சி பெற்றனர். அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்கள் பலவற்றிற்கு பின்னர் ஆப்ரஹாம் லிங்கன் அடிமை வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும்1862 ஆம் ஆண்டு டகோட்டா போர், வெள்ளை குடியேறிகளுக்கு நிலத்தை விட்டுக்கொடுத்ததற்கு ஈடாக உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்படாததால் ஏற்பட்டது. இந்த பசி மற்றும் ஏமாற்றத்தால், டகோட்டா மக்கள் பலவெள்ளை குடியேறிகளைக் கொன்றனர்.சுமார் 2,000 டகோட்டா மக்கள் கைது செய்யப்பட்டனர், அதில் குறைந்தது 1,658 பேர் போரில் பங்கேற்காதவர்கள். ஒரு இராணுவ ஆணையம் 303 டகோட்டா ஆண்களுக்கு மரண தண்டனை விதித்தது, இதில் அதிபர் ஆபிரகாம் லிங்கன் 39 பேருக்கு ஒப்புதல் அளித்தார், அதில் 38 பேர் தூக்கிலிடப்பட்டனர்.டிசம்பர் 26, 1862 அன்று மின்னசோட்டாவின் மின்காட்டோவில் இந்த தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.டகோட்டா மக்கள் பெரும்பாலும் பசி, நோய் மற்றும் சிறைவாசத்தால் மடிந்தனர். 2019-ல், இந்த 150 ஆண்டுகால அதிர்ச்சிக்கு டகோட்டா மக்களிடம் மன்னிப்பு கோரப்பட்டது.
எனினும் அடிமைத்தனத்தை ஒழிக்கத் துணிந்து, அவர்களுக்கு உரிமைகள் தந்ததால், வெள்ளை நிறவெறியனால் துப்பாக்கியால் சுடப்பட்டு தனது உயிரை தியாகம் செய்தார்.

Very good. Thanks
ReplyDelete