சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 16 February 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

கொடைத்திறன் 

கொடை என்பது நமக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு எஞ்சி இருப்பதை பிறருக்கு கொடுப்பதன்று, என்று தமிழ் கூறும் நல் உலகு கூறுகிறது. 

எது கிடைத்தாலும் வாரி வழங்கி விட்டு வயிற்று பசியோடு கிடக்க சொல்லவில்லை. ஏனென்றால் தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று ஒரு வழக்குச் சொல்லிருக்கிறது. 

ஆனால் ஒரு சிறந்த சமூகம் என்பது அனைவரும் பகிர்ந்துண்டு வாழும் சமூகமே என்று பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன .

ஒரு நல்ல அரசனின் அல்லது தலைவனின் சிறந்த பண்பு என்பது எவ்வளவு இனிமையான, விரும்பத்தக்க பொருள் அல்லது செல்வம் கிடைத்தாலும் தான் மட்டும் துய்த்து அனுபவிக்காமல் எல்லோருக்கும் பங்கிட்டு கொடுத்து அனைவரையும் மகிழ்வித்து தானும் மகிழ்வது ஆகும் என்ற சமூக நீதியை, பொதுவுடமை தத்துவத்தை  பதிற்று பத்து கூறுகிறது. 

இப்பாடல் பதிற்றுப்பத்தில் (பாடல் 38), கழங்கீர்க்“கண்ணி நார்முடிச் சேரல்” என்ற அரசனைப் பாடியது. “இனியவை (செல்வம்/பொருள்) கிடைத்தால், நாமே தனித்தனியே அனுபவிக்காமல், மற்றவர்க்கும் கொடுப்போம்” என்று பற்றற்ற உள்ளத்துடன் பகிர்ந்துண்டு, பிறருக்காகவே வாழும் உயர்ந்த பண்பை, அரசனின் கொடைத்திறனைப் புகழும் பாடலாக இது அமைகிறது. 

....... வானவரம்ப!

 இனியவை பெரினே தனி தனி நுகர் கேம், 

 'தருக' என விழையாத் தா இல் நெஞ்சத்து, 

பகுத்தூண் தொகுத்த ஆண்மை,

 பிறர்க்கென வாழ்தி நீ ஆகன் மாறே

செந்துறைப் பாடாண் பாட்டு

வண்ணம்:ஒழுகு வண்ணம்

தூக்கு:செந்தூக்கு

பெயர்: பரிசிலர் வெறுக்கை         

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர வேந்தனைப் புகழ்ந்து  காப்பியாற்றுக் காப்பியனார் என்ற புலவர் பாடிய 10 பாடல்களில் ஒன்று. 

கி.மு. காலத்துப் பாடலிது... 

 சுயநலத்தோடு எல்லாவற்றையும் தமக்கென வைத்துக் கொண்டு, சிறிது கிள்ளி போட்டாலும் பெரிதாக விளம்பரம் செய்து வள்ளல் என்று தமக்குத்தானே பெயர் சூட்டிக் கொள்ளும் காலமிது... 



No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...