சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 13 February 2026

உலக வானொலி தினம்



 உலகில் தொ(ல்)லை காட்சிப்பெட்டி வருவதற்கு முன் நவீன உலகத்தை ஒருங்கிணைத்த மிக பிரம்மாண்டமான தகவல் தொடர்பு சாதனம் வானொலி தான். 
நான் சிறுவனாக இருந்த காலத்தில் அனேகமான மக்கள் வானொலி பைத்தியமாக தான் இருந்தோம். அப்பொழுதெல்லாம் யாருடைய வீட்டிலாவது வானொலி பெட்டி இருந்தால் அவர் மிகவும் வசதியானவர் என்ற பொருள். ஏனெனில் மிக குறைந்த வீடுகளில் மட்டுமே வானொலி பெட்டி இருந்தது. 
அதில் ஒரு சுவாரசியமான விஷயம் வானொலி பெட்டி வைத்து கொள்வதற்கு அரசிடம் லைசன்ஸ் பெற வேண்டும். வருடா வருடம் அதை புதுப்பிக்க வேண்டும் என்பதுதான். தபால் அலுவலகத்தில் இருந்து இதை சோதனை செய்ய கூட வருவார்கள். அப்படி ஒரு கேலிக்கூத்து எல்லாம் இருந்தது. . 
பெரிய பெரிய ஊர்களில், கிராமங்களில், பொது பூங்காக்களிலும்.,ஊருக்கு பொதுவில் ஒரு வானொலி பெட்டி இருக்கும். தினசரி சாயங்காலம் செய்திகள் கேட்பதற்காக ஒரு கூட்டம் கூடும் 

அகில இந்திய வானொலியில் செய்திகள், விவசாய செய்திகள், திரைப்படப் பாடல்கள் அனைத்தும் ஒளிபரப்பாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறை திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாக நினைவு. டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் செய்திகள் ஆகாஷ் வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி, ராமநாதன் (நடிகர் சரத்குமார் அவர்களின் தந்தை) குரல்கள் பிரசித்தம். 
வரும். அதேபோல மாநிலங்களுக்கும் செய்திகள் வாசிக்கப்படும். 

ஆகாஷ்வாணி என்ற வடமொழிச் சொல்லை விசுவநாதன் போன்ற தமிழ் பற்றாளர்கள் மாபெரும் மக்கள் இயக்கம் நடத்தி வானொலி என்று  பெயர் மாற்றம் செய்தது என்பது வேறொரு கதை. 


அதே மாநிலபோல வர்த்தக ஒளிபரப்பு என்ற மொழி நிகழ்ச்சிகள் அதில் கொஞ்சம் கூடுதலாக பொழுதுபோக்குகள் ஒளிபரப்பப்படும். 
ஆனால் பொழுதுபோக்கு என்றால் இலங்கை வானொலி தான். மிக அதிகமாக பொதுமக்களை சென்றடைந்தது இலங்கை வானொலி மூலமாகத்தான். இலங்கை வானொலியில் பணியாற்றிய கே எஸ் ராஜா, பி எஸ் அப்துல் ஹமீத், மயில்வாகனன் சர்வானந்தா, போன்ற பெயர்கள் எல்லாம் தமிழக மக்களுக்கு அதிகம் அறிமுகமானவை.
 கிரிக்கெட் பைத்தியங்களெல்லாம் ஐந்து நாள் டெஸ்ட் மேட்ச் வந்துவிட்டால் காதை வானொலி பெட்டிக்கு அடமானம் வைத்து விடுவார்கள். வெளிநாட்டு வானொலிகளில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்போது அதைக் கேட்காத கிரிக்கெட் வெறியர்களே இல்லை என்று சொல்லலாம். 

அதேபோல சர்வதேச வானொலி ஆன பிபிசி தமிழோசை மாஸ்கோ செய்திகள் என்றெல்லாம் வெளிநாட்டு செய்திகளை கேட்போரும் உண்டு.


உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. 1946-ல் ஐ.நா. வானொலி நிறுவப்பட்டதை நினைவுகூறும் வகையில், யுனெஸ்கோவால் 2011-ல் அறிவிக்கப்பட்டு, 2012 முதல் ஐ.நா. பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்குத் துறையில் வானொலியின் முக்கியத்துவத்தை இந்நாள் வலியுறுத்தியது கொண்டாடப்படுகிறது. 
 2011 நவம்பர் 3 அன்று யுனெஸ்கோ அறிவித்தது. முதல் அதிகாரப்பூர்வ கொண்டாட்டம் 2012-ல் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் வானொலியின் பங்கு தொடர்பான பல்வேறு கருப்பொருள்கள் மையப்பொருளாக கொண்டாடப்படுகிறது, 
மேலும் 2025-ல் "வானொலியும் காலநிலை மாற்றமும்" முக்கியத்துவம் பெற்றது.

பிப்ரவரி 13, 1946 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் வானொலி நிறுவப்பட்டது. 
வானொலியானது நெருக்கடி காலங்களிலும், சமூகங்களை இணைப்பதிலும் தொடர்ந்து முக்கிய ஊடகமாகத் திகழ்கிறது. 

முன்பு அரசின் சார்பாக மட்டுமே வானொலி நடத்தப்பட்டு வந்தது அந்த காலங்களில் செய்திகள் வடிகட்டப்பட்டு, ஆளுங்கட்சிக்கு தேவையான பொது மக்களுக்கு போய் சேரும் வகையில் செய்திகள் சொல்லப்பட்டன. ஆனால் இன்று துரதிஷ்டவசமாக தனியார் தொலைக்காட்சிகளும் தனியார் வானொலிகளும் பல்கிப் பெருகிப் போய் ஊடக தர்மங்களை மீறி கட்டமைக்கப்பட்ட செய்திகளையும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்கிறது. 

எது எப்படி ஆயினும் உலக மக்களிடையே தகவல் தொடர்பு சாதனங்களில் மிகப்பெரிய பங்காற்றிய வானொலியை மறந்து விட இயலாது. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...