— மேரி வான் எப்னர்
இந்த மேற்கோள், வசதி என்பது சுதந்திரத்திற்கான விருப்பத்தை அமைதியாக அழித்துவிடும் என்று எச்சரிக்கிறது. மக்கள் பொறுப்போ அல்லது தேர்வு செய்யும் உரிமையோ இல்லாத எளிமையான வாழ்க்கைக்குப் பழகிவிடும்போது, துன்பப்படுபவர்களை விட அவர்கள் மாற்றத்தை மிகவும் கடுமையாக எதிர்க்கக்கூடும். உண்மையான சுதந்திரத்திற்கு விழிப்புணர்வு, தைரியம் மற்றும் வசதியே ஒரு கூண்டாக மாறும்போது அதை கேள்வி கேட்கும் மனப்பான்மை ஆகியவை தேவை.
சுய சிந்தனை இல்லாத, சுயமரியாதை இல்லாத, சுய கௌரவம், இல்லாத அடிமைகள் மட்டுமே இருந்தால் அந்த கட்சியோ, அமைப்போ நாசமாய் போய்க் கொண்டிருக்கிறதென்று என்ற அர்த்தம்.
அதேபோலத்தான் ஒரு தேசமும் சுயமரியாதை, சுய சிந்தனை, சுய கௌரவம், சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இல்லாத, தங்கள் மகிழ்வுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய அடிமைத்தனம் நிறைந்த மக்களால் நிரம்பி விட்டதென்றால் அந்த நாடு சர்வ நாசத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று பொருள்.
"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற உயரிய கோட்பாடு எங்கு நிறைந்து இருக்கிறதோ அந்த நாடு வளர்ச்சியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்று பொருள்.
"மனம் பயமின்றி, தலை நிமிர்ந்து நிற்கும் இடத்தில், அறிவு சுதந்திரமாக இருக்கும் இடத்தில், உலகம் குறுகிய உள்நாட்டுச் சுவர்களால் துண்டுகளாகப் பிரிக்கப்படாத இடத்தில்; உண்மையின் ஆழத்திலிருந்து வார்த்தைகள் வெளிவரும் இடத்தில்; அயராத முயற்சி அதன் கரங்களை முழுமையை நோக்கி நீட்டும் இடத்தில்; பகுத்தறிவின் தெளிவான நீரோடை இறந்த பழக்கத்தின் மந்தமான பாலைவன மணலில் அதன் வழியைத் தவறவிடாத இடத்தில்; மனம் எப்போதும் விரிவடையும் சிந்தனை மற்றும் செயலுக்கு, சுதந்திர சொர்க்கத்திற்கு, என் தந்தையே, என் நாட்டை விழித்தெழச் செய்யுங்கள் "என்ற தாகூரின் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாக, செயல்பாட்டிற்குரியதாக மாறும்போது எமது தேசமும் தலைநிமிர்ந்து உலகில் நிற்கும்...
No comments:
Post a Comment