சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 6 February 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

எது சிறந்த அரசு, எது சிறந்த சமூகம், யார் நல்ல மக்கள் என்பதற்கு தமிழ் கூறும் நல்லுலகு சிறந்த இலக்கணத்தை படைத்திருக்கிறது. 

சங்க இலக்கியங்கள் மூலமாக ஏராளமான அறச்செய்திகளை கூறி சென்றிருக்கிறது. 

எடுத்துக்காட்டாக பதிற்றுப்பத்து என்ற பாடலில் நல்ல அரசுக்காண இலக்கணமாக இவ்வாறாக கூறப்பட்டுள்ளது. 

மன்னனின் ஆட்சியானது சினம், காமம், அளவு கடந்த அன்பு, பொய் பேசுதல், பிறர் வாழ்வை அழித்தல் போன்ற தடைக்கற்கள் இல்லாத, அறநெறி சக்கரம் போல் நேராக உருளுவதாகக் கூறப்படுகிறது.

வறியவர் யாரும் தனது நாட்டில் இல்லாததால், பிற நாடுகளில் இருந்து வருபவர்களைத் தேரில் ஏற்றி வந்து, அவர்களுக்குத் தாராளமாக உணவும் பரிசுகளும் அளிக்கும் குட்டுவனின் கொடைத்திறன் போற்றப்படுகிறது

தீமையான செயல்களை வெகு தொலைவில் தள்ளிவிட்டு, நல்ல அறச்செயல்களை மிகுதியாகச் செய்து, சிறந்த ஆட்சியால் குடிமக்களைக் காப்பதே அறம் உணர்ந்த அரசனுக்கு அழகு என்பதாகும்.  

நாட்டின் எல்லையிலேயே தீய செயல்களை (குற்றங்களை) ஒழித்து, அறநெறி தவறாமல் நன்மைகளைச் செய்து,  அறம் சார்ந்த, குற்றமற்ற ஆட்சியை பண்டைய தமிழ் மன்னர்கள் எவ்வாறு நிலைநாட்டினர் என்பதை இப்பாடல் விளக்குகிறது.  

கடலும், காடும் தங்களுக்குத் தேவையான பல பயன்களை, வளங்களை வாரி வழங்கிட, மக்கள் பிறரைத் துன்புறுத்தாமலும், பிறருடைய பொருளை விரும்பாவிட்டாலும்,குற்றமற்ற (மையிலாத) அறிவினை உடையவர்களாக நேர்மையாக நடந்து,தமக்கேற்ற துணையோடு (மனைவியுடன்) பிரிந்து போகாமல், உணவைப் பகிர்ந்து உண்டு வாழ்ந்திட. குற்றமற்ற, அறியாமை, தீய எண்ணங்கள் போன்ற இல்லாத அறிவை உடையவர்கள் நேர்மையான வழியில் நடந்து, விரும்பிய துணையை மனைவியை கனவனும், கணவனை மனைவியும் விட்டுப் பிரியாமல். கிடைத்த உணவைப் பகிர்ந்து உண்டு, மக்கள் முதிர்ந்த உடம்பைப் பெற்றாலும் நோயின்றி  இன்பமாகக் காலம் கழிய இருப்பதே ஒரு சிறந்த சமூக அல்லது இல்லற வாழ்விற்கான இலக்கணமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் ஆட்சியாளர்கள் மிகச் சிறந்தவர்களாகவும், மக்களும், சமூகமும் அன்பு, அறம், ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... ம்ம்ம். 

*************'

தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து, 

கடலும் கானமும் பல பயம் உதவ;

பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது,

மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்

அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள்

மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய;  

*******

பதிற்றுப்பத்து 

மூன்றாம் பத்து

பாடியவர் : பாலைக் கௌதமனார்

பாடப்பட்டோர் : பல் யானைச் செல்கெழு குட்டுவன்

🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...