சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 10 February 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

 நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. புறநானூறு 186

பாடியவர்: மோசிகீரனார். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி.

தமிழ் கூறும் நல் உலகில் இயற்றப்பட்ட இலக்கியங்கள் சமூக கட்டமைப்பு சிறப்புடன் இயங்கிட வேந்தன் எப்படி இருக்க வேண்டும் என்று ஏராளமாய் சொல்லிச் சென்றிருக்கிறது. புற வாழ்வின் பெருமை தன்னை புறநானூற்று பாடல்கள் மூலம் சிறப்பாய் சொல்லி இருக்கிறது. 

உயிர்கள் வாழ்ந்திட உணவும் நீரும் தான் முக்கிய ஆதாரம் தான் எனினும் அதனினும் மேலானது ஆள்பவன் அறநெறி உணர்ந்து அனைத்து உயிர்களையும் பாதுகாப்பானாய்,உயிர்ப்புடன் செயல்படுவானாய், சுருங்கச்சொல்லின் அவனே அனைத்து உயிர்களுக்கும் உயிராய் இருந்திடவேண்டுமென புறநானூற்றுப்பாடல் கூறுகிறது. 

உலக உயிர்களைக் காப்பது நெல்லும் நீரும் மட்டும் அன்று. பரந்த இவ்வுலகம் வேந்தனின் முறையான காவற் சிறப்பாலேயே செவ்விதாக நிலைபெறுவதனால், அரசனே உண்மையாக உலகுக்கு உயிர் ஆவான். அதனால், வேலால் மிக்க படையுடைய வேந்தனுக்குத், 'தானே உலக நல்வாழ்வின் உயிர்ப்பாக விளங்க வேண்டுபவன்' என உணர்ந்து, அதற்கேற்ப மக்களைப் பேணி நடப்பதே கடமையாகும்.

வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது. ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளாகும்.

வேந்தர்களுக்கு கடமை இதுவென்றால்,இன்றைய ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும். ஏனென்றால் வேந்தன் மக்களில் ஒருவன் அல்ல. பரம்பரை உரிமையால் அல்லது வாள் பலத்தாலோ ஆட்சிக்கு வந்தவன். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்கள் பிரதிநிதிகளால் ஆளப்படக்கூடிய ஆட்சியாளர், அதுவும் மக்களில் ஒருவர், மக்களிடையே தோன்றியவர் அவர் இன்னும் எவ்வளவு கடமை உள்ளவராக செயல்பட வேண்டும். 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...