கடை வைத்து வியாபாரம் செய்யும்போது எங்காவது பொருள் வாங்க வருபவரின் மதம் பார்த்து, இனம் பார்த்து, நிறம் பார்த்து, வணிகம் செய்ய மறுத்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
அதுவும் மருந்துக்கடையில் நடைபெற்றது அது எவ்வளவு கொடுமையானது...
உலகின் மிகவும் வளர்ந்த, சனநாயக, மனித உரிமைக்காவலர்களாக, பீற்றிக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் இம்மாதிரி கேவலமான நடைமுறை இருந்தது என்பது தான் வரலாறு. 
ஹரோல்ட் மருந்துக் கவுண்டரில் நின்றான். அவன் அந்தத் தாளைக் காட்டினான்.
மருந்தாளுனர் அவனைப் பார்த்தார்.
"நாங்கள் கறுப்பினத்தவருக்கான மருந்துச் சீட்டுகளை ஏற்பதில்லை" என்றார்.
" என் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை,தயவு செய்து வழங்குங்கள் " என்றான் ஹரோல்ட்.
மருந்தாளுனர் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
ஹரோல்ட் வெறுங்கையுடன் வீட்டிற்கு நடந்தான். அவனது பாட்டி மருந்துக்காக மேலும் 2 நாட்கள் காத்திருந்தார். அவரது பக்கத்து வீட்டுக்காரர், 20 மைல் தொலைவில் இருந்து கறுப்பினத்தவருக்கான மருந்தகத்திற்கு அவரை காரில் அழைத்துச் சென்றார்.
அவர் உயிர் பிழைத்தார். ஆனால் ஹரோல்ட் அதை ஒருபோதும் மறக்கவில்லை.
அவன் வளர்ந்தான். அவன் ஒரு மருந்தாளுநரானான். அவன் தனது சொந்த மருந்தகத்தைத் திறந்தான். அவனிடம் ஒரே ஒரு விதி இருந்தது.
"நான் எல்லா மருந்துச் சீட்டுகளையும், ஏற்றுக்கொண்டு மருந்துகள் வழங்குவேன். நீங்கள் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை."
2006-ல் சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வயதான வெள்ளையர் அவனது மருந்தகத்திற்குள் வந்தார். அவரிடம் ஒரு மருந்துச் சீட்டு இருந்தது. அவர் நடுங்கிக்கொண்டிருந்தார்.
"உங்களைப் பார்த்தால் பரிச்சயமாகத் தெரிகிறீர்கள்," என்றான் ஹரோல்ட்.
அந்த முதியவர் ஹரோல்டைப் பார்த்தார். "நான் மெய்யின் தெருவில் இருந்த மருந்தகத்தில் வேலை செய்தேன்" என்றார். "ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் உன்னைத் திருப்பி அனுப்பினேன்."
ஹரோல்ட் அவரைப் பார்த்தான். நீண்ட நேரத்திற்கு அவன் எதுவும் பேசவில்லை.
பிறகு அவன் மருந்துச் சீட்டை வாங்கினான்.மருந்துகளை எடுத்தான். அதை அந்த முதியவரிடம் கொடுத்தான்.
"இது இலவசம்," என்றான் ஹரோல்ட்.
"நீ என்னைத் திட்டத் தோன்றவில்லையா?" என்று அந்த முதியவர் கேட்டார்.
ஹரோல்ட் சொன்னான்: "மன்னிக்க வேண்டும் என்று என் பாட்டி எனக்குக் கற்றுக் கொடுத்தார். வன்மத்தை மனதில் வைத்திருப்பது, நாம் விஷத்தைக் குடித்துவிட்டு மற்றவர் இறந்துவிடுவார் என்று எதிர்பார்ப்பதைப் போன்றது என்று அவர் சொன்னார். நான் எப்போதும் விஷம் குடிக்க விரும்புவதில்லை."
இங்கு நம்நாட்டில் இன, சாதிபாகுபாட்டின் அடிப்படையில் வணிகம் வேறு விதமாக நடந்தது.
உணவு விடுதிகள் உள்ளிட்ட பலகடைகளில் பாகுபாடு தான் நடந்தது.
(இக்கதை நடைபெற்ற உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்டது).
No comments:
Post a Comment