சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 17 August 2026

உண்மையான ஆட்சியாளர் யாரோ?!

 நம்மை உண்மையில் ஆட்சி செய்பவர்கள் யார்? அதிகாரம் யார் கையில் இருக்கிறது இந்த கேள்விக்கு எல்லோரும் கூறும் பதில் முன்பு அரசர்கள் இன்று பாராளுமன்ற சட்டமன்றங்கள் அதேபோல அரசாங்க இயந்திரங்கள் ராணுவ நீதிமன்றம் போன்ற அரசமைப்புகள் என்றுதான் ஆழமாக நம்புகின்றார்கள் .

ஆனால் உண்மையில் அதிகாரம் என்பது பணத்தில் தான் உள்ளது என்பது நாதன் ரோத்ஸ்சைல்டு என்பவர் கூறுவதால் அதுதான் உண்மை அந்த உண்மைக்கு சொந்தக்காரரும் முன்னோடியும் அவரே? 

"பிரிட்டனின் பணப்புழக்கத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவரே பிரிட்டிஷ் பேரரசையும் கட்டுப்படுத்துகிறார். அந்தப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது நான்தான்." என்பது நாதன் ரோத்ஸ்சைல்டின் பிரபல்யமான கூற்றுகளில் ஒன்று.

யார் போர்களுக்கு நிதியளிக்கிறார்கள்,

யார் அரசாங்கங்களுக்கு கடன் கொடுக்கிறார்கள், 

யாரால் மூலதனத்தை மற்றவர்களை விட வேகமாக நகர்த்த முடிகிறது என்பதில்தான் உண்மையான ஆதிக்கம் ஒளிந்திருக்கிறது. 

இங்கிலாந்தின் அரியணையில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்றும், ஏனெனில் பணத்தைக் கட்டுப்படுத்துபவரே இறுதியில் அரசையும் கட்டுப்படுத்துகிறார் என்றும் அவர் பிரகடனப்படுத்தினார்.

ரோட்ஸ்சைல்டு குடும்பத்தின் வரலாறு அரண்மனைகளில் தொடங்கவில்லை. 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிராங்பர்ட் நகரின் குறுகலான யூதகுடியிருப்புகளில் தான் தொடங்கியது. 

அங்கு வளர்ந்த மேயர் அம்ஷெல் ரொட்ஸ்சைல்ட் (1744-1812) வறுமை, பாகுபாடு மற்றும் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டியிருந்தது.

அந்த இருண்ட யூத சேரி பகுதியில் வாழும் ஒரு யூதருக்கு எதிர்காலம் என்பது மிகவும் எல்லைக்குட்பட்டதாகவே இருந்தது. 

சட்டப்படி அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் திணிக்கப்பட்டன:

ஞாயிற்றுக்கிழமைகளிலும், கிறிஸ்தவ பண்டிகை நாட்களிலும் யூதர்கள் கெட்டோவை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது.

அவர்களின் விருப்பம்போல் நிலங்களையோ அல்லது வீடுகளையோ சொந்தமாக வாங்க முடியாது.

பெரும்பாலான பாரம்பரிய வணிகங்கள் மற்றும் வர்த்தகச் சங்கங்களில் யூதர்கள் சேர அனுமதிக்கப்படவில்லை.

இத்தகைய சுவர்களுக்கு நடுவேதான் மேயர் அம்ஷெல் ரொத்ஸ்சைல்ட் வளர்ந்தார். வறுமை, சமூகப் புறக்கணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில் பிறந்திருந்தாலும், மேயரிடம் மற்றவர்களை விட வேறுபட்ட இரு குணங்கள் இருந்தன: 

கூர்மையான தொலைநோக்கு பார்வையும், பிடிவாதமான ஒழுக்கமும்.

இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த மேயர் ஹனோவர் நகரில் உள்ள ஒரு சிறிய நிதி நிறுவனத்தில் சேர்ந்து கணக்கு வழக்குகளையும் நாணய மாற்றுகளையும் கற்றுக்கொண்டார். 

பிராங்க்பர்ட் திரும்பியது, அவர் தனது தந்தை செய்து வந்த பழங்கால நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் விற்கும் தொழிலை மீண்டும் தொடங்கினார்.

அக்காலத்தில் பிரபுக்களும், இளவரசர்களும் அரிய நாணயங்களைச் சேகரிப்பதை ஒரு கௌரவமாகக் கருதினர். மேயர் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்:

 அவர் அரிதான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நாணயங்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தூய்மைப்படுத்தினார்.

 நாணயங்களின் பட்டியலை மிக நேர்த்தியாகத் தயாரித்து, ஐரோப்பிய பிரபுக்களுக்கு நேரடியாக அனுப்பி வைத்தார்.

 லாபத்தை விட, செல்வாக்குமிக்க மனிதர்களின் நம்பிக்கையைப் பெறுவதையே தனது முதல் இலக்காகக் கொண்டார்.

இந்த நுணுக்கமான அணுகுமுறை, ஹெஸ்ஸே-காசல் பகுதியின் முடிசூடா இளவரசரான வில்ஹெல்ம் என்பவரின் கவனத்தை ஈர்த்தது. 

வில்ஹெல்ம் உலகின் மிகப்பெரிய பணக்கார இளவரசர்களில் ஒருவர். 

மேயரின் நாணய அறிவும், நேர்மையும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இளவரசருக்கு மிகவும் பிடித்துப்போனது.

விரைவில், மேயர் இளவரசரின் உத்தியோகபூர்வ "அரண்மனை முகவர்" என்ற தகுதியைப் பெற்றார். 

இந்த ஒரு அங்கீகாரம், கதவுகள் வைக்கப்பட்டிருந்த அரச சமூகத்தில் அவருக்குப் கதவுகளைத் திறந்துவிட்டது.

நிதி உலகிற்குள் ஆழமாக இறங்கியபோது, ​​மேயர் ஒரு மகத்தான உண்மையைக் கண்டறிந்தார்:

"பெட்டியில் இருக்கும் தங்கம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குத்தான் சொந்தமானது. ஆனால் சரியான நேரத்தில் கிடைக்கும் தகவலும், மனிதர்கள் மீது வைக்கும் நம்பிக்கையும் எல்லைகளைத் தாண்டிப் பல மடங்கு செல்வத்தை உருவாக்கும்." என்பதே அது.

அவர் வெறும் நாணயங்களை மட்டும் விற்கவில்லை; பிரபுக்களின் நிதியை நிர்வகிக்கும் அளவுக்கு நம்பிக்கையை உருவாக்கினார். 

இளவரசர் வில்ஹெல்ம் போன்ற பிரபுக்கள் போர் வீரர்களைக் கடனாகக் கொடுத்துப் பெற்ற கோடிக்கணக்கான நிதியை, பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் முதலீடு செய்யும் பொறுப்பு மேயர் ரொட்சைல்டிடம் வந்தது.

மேயரின் மூன்று முக்கியக் கோட்பாடுகள் இருந்தன.

வாடிக்கையாளர்களின் தகவல்களையும், கணக்குகளையும் உயிர் போனாலும் வெளிப்படுத்த மாட்டார்.

ஐரோப்பாவின் எந்தப் பகுதியில் அரசியல் மாற்றம் அல்லது போர் நடந்தாலும், அந்தச் செய்தி மற்றவர்களுக்குத் தெரிவதற்கு முன்பே மேயருக்குத் தெரியவந்தது.

சிறு தவறு வராத வகையில் கணக்குகளைத் துல்லியமாகப் பராமரித்தார்.

பிராங்க்பர்ட்டின் குறுகிய வீதியில் ஒரு சிறிய கடைக்கு முன்னால் தொங்கிய "சிவப்பு கேடயம்" (ஜெர்மன் மொழியில் Roth Schild - இதிலிருந்து ரொட்ஸ்சைல்ட் என்ற பெயர்) என்ற அடையாளப் பலகையின் கீழ் தொடங்கிய பயணம், ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியியல் குடும்பத்தின் அஸ்திவாரமாக மாறியது.

மேயர் அம்ஷெல் ரொட்சைல்ட் உருவாக்கிய நிதிச் சாம்ராஜ்யத்தின் உச்சகட்ட திருப்புமுனையே, அவர் தனது ஐந்து மகன்களையும் ஐரோப்பாவின் மிக முக்கிய நிதி மையங்களுக்கு அனுப்பிய முடிவுதான்.

அக்காலத்தில் ஒரு நாட்டின் வங்கி, அந்த நாட்டின் எல்லைக்குள் மட்டுமே செயல்பட முடிந்தது. ஆனால் மேயர், எல்லைகளைத் தாண்டி ஒரே குடும்பமாக இயங்கும் ஒரு சர்வதேச வங்கியியல் நெட்வொர்க்கை முதன்முதலில் உருவாக்கினார்.

மேயர் தனது ஐந்து மகன்களையும் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்குப் பிரித்து அனுப்பிய அந்த ஐந்து நாடுகள்

1. ஆம்ஷெல்— மூத்த மகன். ஃபிராங்க்பர்ட்

 ஜெர்மனியில் குடும்பத்தின் முதன்மை வங்கியையும், மூலப் பணத்தையும் நிர்வகித்தார்.

2. சாலமன்— வியன்னா 

ஆஸ்திரிய பேரரசின் அதிகார மையத்தில் நுழைந்து, அந்நாட்டு அரசாங்கத்திற்குத் தேவையான நிதி உதவிகளைச் செய்து செல்வாக்கைப் பெற்றார்.

3. நாதன் - லண்டன்

 மகன்களிலேயே மிகவும் திறமையானவர். உலகின் நிதியியல் தலைநகராக உருவெடுத்துக் கொண்டிருந்த லண்டனில் அடியெடுத்து வைத்து, பங்குச்சந்தை மற்றும் தொழில் புரட்சி முதலீடுகளைக் கட்டுப்படுத்தினார்.

4. கால்மன்/கார்ல் — நேபிள்ஸ்

இத்தாலிய அரசாங்கங்களுக்கும், போப் ஆண்டவரின் வாடிகன் நகரத்திற்கும் நிதி வழங்கி தெற்கு ஐரோப்பாவில் செல்வாக்கை வளர்த்தார்.

5. ஜேக்கப்/ஜேம்ஸ் — பாரிஸ்

பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் வங்கியமைத்து, ஐரோப்பிய ரயில்வே கட்டுமானங்கள் மற்றும் அரசாங்கப் பத்திரங்களை நிர்வகித்தார்.

இதை விளக்கும் ரொட்ஸ்சைல்ட் குடும்பத்தின் புகழ்பெற்ற இலச்சினையில் "ஒன்றாகக் கட்டப்பட்ட ஐந்து அம்புகள்" காணப்படுகின்றன. ஒரு அம்பை எளிதில் உடைத்துவிடலாம், ஆனால் ஐந்தையும் ஒன்றாகக் கட்டினால் உடைக்க முடியாது என்பதே இதன் தத்துவம்.

இந்த ஐந்து சகோதரர்களும் தங்களுக்குள் தொடர்ச்சியாக இரகசியக் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டனர் (இதற்காகவே அவர்கள் ஒரு தனிப்பட்ட குறியீட்டு மொழியையும் பயன்படுத்தினர்).

ஒரு நாட்டின் அரசருக்கு அவசரமாகக் கடன் தேவைப்பட்டால், ஐந்து நகரங்களில் உள்ள வங்கிகளிலிருந்து ஒரே நேரத்தில் நிதியைத் திரட்டித் தர இவர்களால் மட்டுமே முடிந்தது. இதன் விளைவாக:

 அரசர்களும், பிரதமர்களும் கடன் பெற ரொட்சைல்ட் சகோதரர்களையே நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவானது.

 எந்த நாட்டில் போர் நடந்தாலும், அந்த நிதி ஆதாரம் இந்தச் சகோதரர்களின் கையில்தான் இருந்தது.

இவ்வாறு, பிராங்பர்ட்டின் ஒரு சிறிய தெருவில் தொடங்கிய குடும்பம், ஐந்து மகன்களின் கூட்டு உத்தியால் உலகையே ஆட்டிப்படைக்கும் நிதிச் சக்தியாக மாறியது.

ரொட்சைல்டின் குடும்பம் ஒரு பெரும் சர்வதேச வங்கியியல் நெட்வொர்க்காக மாறுவதற்குத் தேவையான உச்சகட்ட மூலதனம் பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் படையெடுப்பின் போதுதான் கிடைத்தது.

1806-இல் நெப்போலியனின் படைகள் ஹெஸ்ஸே-காசல் மீது படையெடுத்தபோது, ​​இளவரசர் வில்லியம் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டை விட்டு ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஓடுவதற்கு முன்பு, இளவரசர் தனது பிரம்மாண்டமான செல்வத்தில் ஒரு பகுதியை (மில்லியன் கணக்கிலான தங்க நாணயங்கள் மற்றும் பத்திரங்கள்) மேயர் அம்ஷெல் ராத்கீல்டிடம் இரகசியமாக ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

பிரெஞ்சுப் படைகளிடம் சிக்காமல், அந்தப் பணத்தை மேயர் நிலத்திற்கு அடியில் ரகசியமாகப் புதைத்தும், தனது வீட்டின் மறைவிடங்களிலும் பாதுகாத்தார்.

மேயர் அந்தப் பணத்தைச் சும்மா பூட்டி வைக்கவில்லை. இளவரசரின் அனுமதி மற்றும் இரகசிய ஒப்பந்தத்தின்படி, அந்தப் பெருந்தொகையைத் தனது மகன்களின் மூலம் லண்டன் மற்றும் பிற ஐரோப்பிய நகரங்களுக்கு அனுப்பினார்.

நாதன் ரோத்ஸ்சைல்டு லண்டனில் இருந்தபடி, அந்த நிதியைப் பயன்படுத்தி இங்கிலாந்து அரசாங்கத்தின் கடன் பத்திரங்களை குறைந்த விலைக்கு வாங்கி, பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.

 நெப்போலியன் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்திற்குத் தேவையான தங்கம் மற்றும் உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்தங்களைப் பிடித்தார்.

இளவரசருக்குரிய பணத்தை (வட்டியுடன்) பின்னாளில் நேர்மையாகத் திருப்பிக் கொடுத்த போதிலும், அந்த நிதியைப் பயன்படுத்தி அவர்கள் செய்த வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மூலம் ரொட்சைல்ட் குடும்பத்திற்கு உருவான லாபமே, உலகையே ஆட்டிப்படைத்த அவர்களின் சர்வதேச வங்கி நெட்வொர்க்கின் உண்மையான மூலதனமாக மாறியது.

நெப்போலியன் போர்களின் போது ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. 

படைகளுக்கு உணவு, ஆயுதங்கள், சீருடைகள் மற்றும் போக்குவரத்து தேவைப்படுவதால் அரசாங்கங்கள் நிதிக்குத் தவித்தன. 

ரொட்சைல்ட் குடும்பம் களமிறங்கி, ஒரே நேரத்தில் பல நாடுகளுக்கு சில சமயங்களில் ஒரே போரில் எதிரெதிர் முனைகளில் இருந்த நாடுகளுக்கும் நிதியளித்தது. 

இதனால் யார் வென்றாலும் தோற்றாலும், இந்த குடும்பத்தின் செல்வம் பாதுகாப்பாக பெருகிக்கொண்டே இருந்தது.

அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது தகவல் பரிமாற்றத்தின் வேகம் ஆகும்.

இவர்களது சொந்தத் தகவல் அமைப்பு குதிரை வீரர்கள், கப்பல்கள் மற்றும் தூதர்களைக் கொண்ட தனிப்பட்ட நெட்வொக்கைக் கொண்டிருந்தது.

போர்க்கள முடிவுகள் அரசாங்கங்களுக்குத் தெரிவதற்கு முன்பே இவர்களுக்குத் தெரிந்துவிடும்.

இந்தகவல்களை பயன்படுத்தி சந்தை வீழ்ச்சியடையும் முன் பங்குகளை விற்றுவிடுவார்கள்; விலையேறும் முன் வாங்கி விடுவார்கள்.

வங்கித் தொழில்துறை வளர்ச்சி அடைந்து ஏற்றத்தாழ்வுகள் அதிகமானபோது, ​​ரொட்சைல்ட் என்ற பெயர் உலகளாவிய நிதி, முதலாளித்துவம் மற்றும் எல்லை கடந்த அதிகாரத்தின் அடையாளமாக மாறியது. 

அவர்கள் தேசங்களை ( இஸ்ரேல்) உருவாக்குபவர்களாகப் போற்றப்பட்டனர்; 

அதே நேரத்தில் திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் நிழல் ஆட்சியாளர்களாகவும் விமர்சிக்கப்பட்டனர்.

போர் நிதியிலிருந்து விலகி, ரயில்வே, சுரங்கம், எண்ணெய் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்தனர். 

சூயஸ்வாய் நிதி மற்றும் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் மறுசீரமைப்பு போன்றவற்றில் முக்கிய பங்கு வகித்தனர்.

காலப்போக்கில் புரட்சிகள், உலகப்போர்கள் மற்றும் அரசாங்கக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களின் சில வங்கிக் கிளைகள் மூடப்பட்டாலும், குடும்பத்தின் செல்வாக்கு முற்றிலும் அழியவில்லை. 

அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை உருமாற்றிக் கொண்டனர்.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், பேரரசுகள் தோன்றியிருக்கின்றன; வீழ்ந்திருக்கின்றன. 

ஆனால் நிதி மேலாதிக்கம் செய்து உலகையே ஆட்டிப்படைக்கும் நிறுவனங்களில் கீழ் தான் அவை பணியாற்றுகின்றன என்பதுதான் வரலாற்று ரீதியான உண்மை. 

ஆனால் நம் நாடு இன்னும் வித்தியாசமானது. இங்கும் சில குடும்பங்கள் நிதி மேலாதிக்கம் , தொழில் மேலாதிக்கம் செய்து ஆட்சி அதிகாரத்தை தாங்கள் விரும்பிய போக்கில் நடத்துகிறார்கள். 

ஆனால் அவர்கள் பணத்தில் அல்ல, பணம் முழுவதையும் பொதுமக்கள் அதாவது அரசின் பணத்தை கடனாக பெற்றுக் கொண்டு, அதையும் அரசைக் கொண்டே தள்ளுபடி செய்து, சிறு தொகையை அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாகவும் கொடுத்து விட்டு, ஆட்சி செய்கிறார்கள்.... 

இப்போது சொல்லுங்கள் நம்மை ஆட்சி செய்பவர்கள் யார்?!!! 


No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...