கண்டவற்றில் கேட்டவற்றில்
காற்றிலே வந்த செய்ததனில்
சமூகத்தின் அவலம் கண்டு
அரற்றுகிறோம் வார்த்தைகளாய்..
வகை வகையாய் வக்கனையாய்
குறை காண்போம் நக்கீரராய்..
காரியங்கள் கண்ட நாம்
காரணத்தை அறிந்தோமா
காரணத்தை அறிந்தாலன்றோ
கரை சேரல் இயலுமாமே..
விழிப்புணர்வு பெற்றிடாமல்
விடியல் காண்பது எவ்வாறு?!
No comments:
Post a Comment