சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 19 August 2026

முரண்களும் அரண்களும்




மனித இனத்தின் தனித்தன்மையே குழுக்களாக வாழ்தலும்,  ஆய்வு திறன் கொண்டு,  அறிவியல் முன்னேற்றம் கண்டு , வளர்ச்சியை நோக்கி செல்லுதலும், பகுத்தறிவின் துணையாலே கலை கலாச்சாரம் பண்பாடு என வாழ்தலுமே ஆகும் .

அறிவியல் முன்னேற்றமும்,கண்டுபிடிப்புகளும் , இயந்திரமயமாகக்கும்,  முன்னேற்றங்கள் , வளர்ச்சி காண்பதும் எல்லாருக்கும் பொதுவானதே என .கொள்ளலாம். 
அதே நேரத்தில் கலை,  கலாச்சாரம் , பண்பாடு என்பது தனித்தன்மையோடு அவரவர் தொன்மை சார்ந்து உள்ள விடயங்கள் ஆகும். அவ்வாறு மனித குலம் முன்னேற்ற பாதையில் செல்லும் போது கூடவே ஏராளமான முரண்களையும் இணைத்தே கொண்டு செல்கிறது .

சமூகம் சார்ந்த விடயத்தில் ஏழை பணக்காரன் என்ற வர்க்க முரண்பாடும்,  இனங்களுக்கு இடையே உயர்ந்த இனம் தாழ்ந்த இனம் என்று கற்பித்தலும்  நிறத்தின் பெயரால் பேதம் கொள்ளுதலும்,  மொழியின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும் பிறருடைய தனித்தன்மையை மதியாமல் தம்முடைய சிறப்பு மாண்புகளை பிறர் மேல் திணித்தல் காரணமாக உருவாகக்கூடிய முரண்பாடுகள் உலகை இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் என்பது பல்வேறு நாட்டினர் இடையே அல்லது உள்நாட்டிலேயே பகைமையையும் போர்தணையும் தூண்டிவிட்டு அழிவை தந்து கொண்டிருக்கிறது. 

பூவுலகு தந்த இயற்கை செல்வமானது அனைவருக்கும் பொதுவானது எல்லோருக்கும் உரிமை உடைத்துஎன்ற என்ற நிலை அடையும் போதே முரண்கள் தீரும் அதை நோக்கி உலகம் சென்றிட வேண்டும்.
மனிதன் இயற்கை சக்திகளின் ஆற்றல் அறியாத காலத்தில் அவற்றினுடைய செயல்பாடுகளை கண்டு அஞ்சி அன்றைக்கு இருந்த அறிவு திறன் கொண்டு வழிபாட்டினை கண்டுபிடித்தான் பின்னாளில் இயற்கை சக்திகளை தெய்வமாக வணங்கியவன் அவற்றைத் தாண்டி கற்பனை உலகில் நுழைந்து ஏராளமான கடவுள்களையும் அவை செய்ததாக கூறி புராணம் பொழுதுகளையும் மதங்களையும் உருவாக்கிஅவன் உருவாக்கிய கடவுளுக்கும் மதங்களுக்கும் அடிமையாகி மனிதர்களுக்கிடையே பூசல்களுக்கு வழி வகுத்து விட்டான் .அதனால் தோன்றிய முரண்களும் ஏராளம். 

அதைவிட கூடுதல் கொடுமையாக திகழ்வது நம் நாட்டில் உருவாகியிருக்கும் சாதிய முரண்கள்.  நம் நாட்டில் உழைப்பின் பெயரால், முன்னம்  உழைக்காமல் உண்டு கழித்திட்டோரும் உஊன் உருக உழைத்து உலகை காத்து வரும் ஏராளமானஉழைக்கும் மக்கள்  உண்டு கழித்திருப்பவர் உருவாக்கிய சாதி ஆதிக்கத்தினால் உருவாகி இருக்கும் முரண்பாடுகள் இன்னும் அதிகம்.

இத்தனை  முரண்களும் களைந்திடாத வரை சமூக நல்லிணக்கம்,  மனித குல மேம்பாட்டு, சமூக நீதி சமத்துவம் என்பது சாத்தியம் இல்லை.

""நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.  "என்று "வள்ளுவர் வழிகாட்டியபடி சமூகத்தை பீடித்திருக்கும் அவலங்கள் நீங்க திருவள்ளுவர் கூறிய வாழ்க்கை நெறி முறைகளை கடைப்பிடித்திடவேண்டும்.
சமத்துவம் சமூக நீதிக்காக போரிடும் பகுத்தறிவு பகலவன் பெரியார் போன்ற போராளிகளின் வழிநிற்றலே நம்மை, நம் இனத்தை, தாய்த்தமிழை, கலை கலாசாரத்தை காத்திடும் அரண்களாகும். 


முப்புரம் எரித்ததாக சொல்லப்பட்ட புராணப் புளுகுகளை புறந்தள்ளி, சமூக நீதி, இனம், மொழி காத்திட, வள்ளுவம் காட்டிடும் வழி நின்று இன்றைய சமூக அவலங்களையும்,  தமிழ் மொழிக்கு,  கலாச்சாரத்திற்கு , பண்பாட்டுக்கு , இனத்திற்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை எடுத்துரைத்து,  அவை களைந்திட அணிதிரட்டும் இயக்கமாக மதுரை நட்பு தமிழ் வட்டம்  திகழ்கிறது
 .
அதன் நிறுவனத் தலைவர் நா நா ஆறுமுகம் ஐயா அவர்கள் நட்பு தமிழ் வட்டத்தை நிறுவி தமிழ் நெஞ்சங்களை ஒருங்கிணைத்து அரும்பாடு பட்டு வருகிறார் .கொள்வோரும் கொடுப்போருமாக தமிழ் நெஞ்சங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.  நல்ல ஆசானாக திகழ்ந்து வருகிறார் .

சமூக நோய் தன்னைக்கண்டறிந்து,தீர்த்திடும் நல் சமூக மருத்துவராக திகழ்கிறார்.  ஏராளமான படைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஐயா அவர்களுடைய "" முரண்களும் அரண்களும் ""என்கிறகவிதை தொகுப்பானது நள்ளிருளில் வழிகாட்டிடும் அறிவொளியாக திகழ்கிறது. 

"சமத்துவ புரத்தில்

சாதிச் சங்கம்

சந்ததிப் பிழை."

உயிரினங்களிலேயே உயர்ந்ததாக கருதப்படுவது மனித இனம் என்று மனிதன் மட்டும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறான். .அறிவியல் பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்கும் போது , மனித இனம் உயர்ந்ததென்ன என்பதென்னமோ உண்மைதான் .ஏனெனில் எல்லா உயிரினமும் இயற்கையில் உள்ளதை கொண்டு உள்ளபடியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 

 மனிதன் மட்டுமே இயற்கையில் உள்ளதை புரிந்து கொண்டு அதனுடைய ஆற்றலை உணர்ந்து தனது பகுத்தறிவால் ஆற்றலை பயன்படுத்தி ஒரு உயரிய பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  இயற்கையின் ரகசியங்களுக்கெல்லாம் சவால் விட்டுக்கொண்டு அவற்றை எதிர்நோக்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறான்.  ஆனால் இயற்கை கட்ட கட்டமைப்பில் மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கண்டறியப்பட்டு கூட்டம் கூட்டமாக இனங்களாக தங்களுக்கென்று மொழி கலாச்சாரம் என்று மிக உயர்ந்த சமூக கட்டமைப்பை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் இயற்கையை நியதிக்கு முரணாக,  சமூக நீதியை மறந்து,  சாதிகளாக பிரிந்து தன்னுடைய சாதி மட்டுமே உயர்ந்தது என்ற மிகவும் கேவலமான பிற்போக்கு சிந்தனையினை சென்றடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் .



மனித குலத்தில் உருவாகி இருக்கும் ஏற்றத்தாழ்வு , சாதிய ஒடுக்குமுறை அதற்கு காரணமான மத கட்டமைப்பை எதிர்த்து புத்தர் , மகாவீரரிலிருந்து இருந்து ஏராளமான மகான்கள் போராடி வந்திருக்கிறார்கள்.  உயரிய சிந்தனையின் தொடர்ச்சியாக இங்கு சென்ற நூற்றாண்டில் இங்கு தோன்றிய உயரிய திராவிட சிந்தனையாளர்கள் தொடங்கி பெரியார் போன்ற சமூக சிந்தனையாளர்களுடைய வழிகாட்டுதலோடு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி சாதிய முரண்பாடுகளை ஒழித்திடும் உயரிய நோக்கோடு சமத்துவபுரங்களை உருவாக்கி எல்லா சமூகத்தவரும் சாதி மத பிணக்குகள் நீங்கி சமமாக வாழ்வதற்காக சமூக நீதியை நிலைநாட்டிடும் வகையில் சமத்துவபுரங்களை உருவாக்கி வெற்றி கண்டார்.

உலகம் வருத்த சமூக ஒழுக்க நெறிமுறைகளை ஒருவரை இருவரோ மீறி தவறிழைத்திடுங்கள் உருவாகும் சந்ததி பிழை ஒரு குடும்பம் சார்ந்ததாகி இருக்கும் 
ஆனால் ஒரு சமூகமே சமூக நீதி மறந்து வரலாறு மறந்துபெற்ற வெற்றிதனை மறந்து பிழை செய்திருந்தால் அது வரலாற்று சந்ததி 
பிழை மாற்றத்தை விரும்பி பெற்று தருவதற்காக போராடி உயிர் நீத்த தியாக ங்கள் செய்த முன்னோடிகளுக்கு செய்யக்கூடிய அவமரியாதை மீண்டும் வரலாற்றை பின்னோக்கித் தள்ளும் வரலாற்றுப் பிழை

 எனினும் காலம் காலமாக புரையோடி இருக்கும் சாதிய உணர்வு,  சாதிய வெறி, காரணமாக பிளவு பட்டு கலைஞர் கண்ட சமத்துவபுரத்திலேயே சாதிய சங்கங்களாக செயல்படுவது என்பது வரலாற்றுப் பிழை மட்டுமல்ல .

நம் காலத்து சந்ததியின் பிழை என்பதை  பெரும்புலவர் நானா அவர்கள் மிக அற்புதமாக சித்திரமாக வடித்துள்ளார். 
ஏழ்மை ஓழிப்பு 
ஏழைகள் ஒழிப்பு 
மக்கள் மாக்கள் ஆட்சி!
""பூவுலகு என்பது யாவருக்கும் படைக்கப்பட்டதாம் , இருக்கின்ற இயற்கை வளம் யாவும் எல்லாருக்கும் பொதுவாம், அனைத்து உயிரும் மகிழ்ந்துண்டு வாழ்தலே உலகியலின் உயர்ந்த கொள்கை யாம்"" என்பதை மறந்த மானிடர் படைத்தது ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு.
 சொத்து குவியல் என்பதே உழைக்கும் மக்களின் உழைப்பால் உருவான பலனை ஒரு சிலர் சுரண்டி குவிக்கும் கொள்ளை என்பதே பொருளாதார மேதைகளின் கருத்தாகும். 
உடலாலும் கருத்தாலும் உழைக்கின்ற உலக உழைப்பாளிகளின் உழைப்பால் உருவானதே உலகில் உள்ள அத்தனை சொத்துக்களும் படைப்புகளும் செல்வங்களும் ஆகும் . ஆனால் அதன் பலனை அனுபவிப்போர் ஒரு சிலரே.
 இந்த சமூக அமைப்பு உருவாக்கி வைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய கொடுமை முதலாளி உழைப்பாளி , பணக்காரன் ஏழை , ஆண்டான் அடிமை என்று ஏற்றத்தாழ்வு தான்.
 எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பது கவிஞரின் கூற்று.
ஆனால் இருக்கின்ற சமூக அமைப்போ மேலும் மேலும்  ஏற்றத்தாழ்வை அதிகமாகி முரண்பாட்டை கூர்மையாக்கி பெரும்பகுதி மக்களை வறுமையாக்கி வருகிறது .
கஞ்சி குடிப்பதற்கு யார் அதன் காரணம் இவை என்னும் அறிவுமிளார் என்றுகூறுகின்ற வகையிலே அதனை அறியா மாந்தரே அதிகம் இருக்கின்றனர் இவ்வுலகில். 
 ஆனால் நம் நிலைமை மாறாது இருக்க என்ன காரணம்?  ஒழிக்கப்பட வேண்டியது ஏழ்மை தானே தவிர ஏழைகள் அல்ல, உருவாக்கப்படவேண்டியது உண்மையான மக்கள் ஆட்சி  என்ற உயரிய சமதர்ம அரசியலை புலவர் நா நா அவர்கள் மிக அழகாக  இக்கவிதையின் மூலமாக எடுத்துரைக்கிறார்.
 மக்கள் மாக்களாகி விட்டால் அமைகின்றன அரசு மக்களின் அரசாக தானிருக்கும் என இடித்துரைக்கிறார் புலவர் நாநா அவர்கள். 

காளைக் கொம்பொடித்து

வாடிவாசல் திறக்கும்

பாசிசம்!

மயிலுக்குத் தோகை அடையாளம்,  சிங்கத்துக்கு பிடரி அடையாளம் , கலைமான்களுக்கு அழகான கொம்பு அடையாளம்,  அவ்வகையில் காளைக்கு கொம்பும் திமிலும்அடையாளம் . அக்கொம்பு உடைப்பது என்று வெறும் அடையாளத்தையா புலவர் குறிப்பிடுகிறார்?  இல்லவே இல்லை !

ஒரு இனத்தை அழித்து விட வேண்டும் என்றால் அதனுடைய மொழியை அழிக்க வேண்டும் , அதனுடைய கலையை பண்பாட்டை அழித்து விட வேண்டும் என்பதுதான் பிற்போக்குவாதிகள் , பாசிச அடக்குமுறைவாதிகளுடைய கேவலமான சிந்தனை,  செயல்பாடு எல்லாம்.

 அப்பேர்ப்பட்ட கலைப் பண்பாட்டு அரசியலை தான் மிக ஆழமான கருத்துகளை ஐந்து வார்த்தைகளில் அடக்கி விடுகிறார் புலவர் நா நா அய்யா.

 உலகில் உள்ள தொன்மையான இனங்களிலே தமிழினம் ஒன்று. அதன் கலை , கலாச்சார , பண்பாடு மிக தொன்மை வாய்ந்தது, பாரம்பரியம் மிக்கது.  வாழ்வியலில் மிகப்பெரிய பங்காற்றிடும் கலாச்சார அடையாளங்களில் வீர விளையாட்டுகளும் ஒன்று . எருது கட்டுதல் என்னும் வீர விளையாட்டு உலகில் மிகக் குறிப்பிட்ட இனங்கள் மட்டுமே விளையாடுவது.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வீர தமிழரின் அடையாளமாக இருந்தது எருது கட்டு எனும் மஞ்சு விரட்டு.  அதைப்பற்றி ஏராளமான இலக்கியச் சான்றுகளை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் . ஆதிக்கம் செய்திட வந்த ஆரிய இனம் தமிழ் கலாச்சாரத்தை தமிழ் இனத்தை நசுக்கிட எண்ணி அசைத்துப் பார்த்தது.  மஞ்சுவிரட்டு என்னும் வீர விளையாட்டை மிருக வதையை தடை செய்கிறோம் என்ற பெயரில் தடுத்திட முயற்சித்தது. ஒன்றுபட்டு தமிழனம் எழுந்து நின்றதால் , அறப்போர் புரிந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டது தடை என்றாலும்,  வாடி வாசலை திறந்து வைத்துவிட்டு தமிழினத்தை, பைந்தமிழை  நசுக்க பார்க்கும் முயற்சிகள் குறைந்தபாடில்லை . பாசிசம் என்பது வெறும் பாயசம் அல்ல அது ஆபத்தான கொள்கை என்பதை அற்புதமாக கவிதினில் எடுத்துரைக்கிறார் பெரும் புலவர் நானா அவர்கள்.

மடியறுத்த பசுக்கள்

பால் விற்பனை 

பாசிசம்!

இயற்கை ஏராளமான செல்வங்களை இப்பூலகில் எல்லா உயிரினங்களுக்கும் வாரி வாரி வழங்கி இருக்கிறது அவற்றை பகிர்ந்து அனுபவித்து  இணைந்து வாழ்ந்தால் அனைவரும் நலம் பெற்று தலைமுறை தலைமுறையாக வாழ்ந்திட முடியும் . அது படைத்த உயிரினங்களில் பலவும்  மாறாத செல்வங்களாக எல்லோருக்கும் பல்வேறு பொருள்களை வாரி வாரி வழங்கி கொண்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு ஆநிறை பசுக்களை எடுத்துக் கொண்டால்,  அது ஏராளமான செல்வங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது,  பால் பால் சார்ந்த பொருட்களான தயிர்,  வெண்ணெய் , நெய்யென ஏராளமாய் வழங்கிக் கொண்டிருக்கின்றது. பசுவின் சாண உரம் ஆகிறது கோமியம் மருந்தாகிறது தோல் பறைக்கு பயன்படுகிறது ஆனால் பேராசை கொண்ட மனிதன் தங்க முட்டை இடும் வார்த்தை வயிற்றை கிழித்து மொத்த பயனையும் இழந்தது போல கருப்பை எடுத்து மடுவை அறுத்து வியாபாரம் செய்வதை போல பாசிச எண்ணம் கொண்ட கொடுங்கோளர்கள் கையில் எல்லாமே சிக்கி சீரழிகிறது உலகில் சரி பாதி பெண்கள . உயிருள்ள ஜீவன்களை , உலகில் சகலமாய் இருக்கக்கூடிய பெண்களை,  படைத்தலும், காத்தலுமாய் கூடுதல் பொறப்பேற்றுவாழவைத்திடும் பெண்களை மதித்திடா பாசிசத்தை சாடியுள்ளார் புலவர் நாநா ஆறுமுகம் அய்யா அவர்கள்.  
நாட்டின் வளங்களை எதிர்கால சிந்தனையின்றி, வரப்போகும் ஆபத்தை எண்ணிப்பாராமல் சூறையாடும் மதியற்ற, அறிவீனர்களான பாசிச எண்ணங்கொண்டோரை தோலுரித்து காட்டுகிறார் பெரும்புலவர் நல்லாசான் நா நா அய்யா அவர்கள்.
மண்ணை, இனத்தை, மொழியை, கலையை, பண்பாட்டை நேசிக்கும் தமிழ்நெஞ்சங்களுக்கு அரும்பொக்கிசமாய் கவிதை வடிவில் தந்திருக்கிறார் புலவர் நாநா ஆறுமுகம் அய்யா அவர்கள்.

அனைவரும் படிக்க வேண்டிய குறும்பா தொகுப்பு நூல்.
நிமிர் புத்தகப்பட்டறை வெளியீடு. விலை ₹150/-

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...