அழகிய வடிவான
அறிவிப்பாளினி
புன்னகையோடு
அறிவித்தாள்..
அசாமில் வெள்ளம்,
இயற்கை பேரிடர்
அடைமழையால்
அதிக சேதமென்று...
கனமழையால் மட்டும்
வெள்ளம் வந்திடவில்லை.
ஈரநிலங்கள் , காடுகள்
வடிகால் சமவெளிகளென
அனைத்துமே மிச்சமின்றி
ஆக்கிரமிக்கப்பட்டன.
வளர்ச்சி என்றே
கொண்டாடப்பட்டன....
அடை மழை வந்ததும்
ஊருக்குள் தண்ணீர் வந்தது
இயற்கைப் பேரிடர் என
எல்லோரும் கதறினர்.. .
தண்ணீர் பாதைதனை
அழித்தது நாம் -மறந்திட
வில்லை என்றுமே
இயற்கை அதனை
.
வீடுகளை பயிர்களை
கால்நடைகளை
வாழ்க்கை தனை
இழந்தனர் ஏழைகள்
வாழ்விடம் இழந்தன
வனவிலங்குகள்...
வாழ்ந்திட போராடுகிறார்
அனைவருமே...
அனுதாப செய்திகள்
ஆயிரம் குவிந்தன..
பார்வையிட குழுக்கள்
அநேகம் வந்தன..
யானைப்பசிக்காம்
சோளப்பொறியென
அரைகுறை யாய்
நிவாரணம் வந்தது.
அடுத்து வந்த
இழவுச்செய்தி
அனைத்தையும்
மறக்கடித்தது.
அடுத்த பேரிடர்
அதை விட
அழிவு தருமென
அனைவருமே மறந்தனர்

Population explode.
ReplyDeleteமக்கள் தொகை பெருக்கம் மாத்திரமல்ல. வளர்ச்சி என்ற பெயரில் அறிவிற்கு பொருத்தமற்ற இயற்கை விரோத செயல்
Delete