சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 14 August 2026

எது உண்மையான கல்வி

 உண்மையான கல்வி என்பது அனுமானங்களைக் கேள்விக்குட்படுத்தி, மரபுசார்ந்த நம்பிக்கைகளுக்கு சவால் விடுத்து, ஆர்வத்தைத் தூண்ட வேண்டுமே தவிர, மனப்பாடம் செய்வதையோ அல்லது சராசரித் தன்மையையோ திணிக்கக் கூடாது.-பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

மனித குலம் என்றுமே முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது. இயற்கையின் புரியாத புதிர்களுக்கு விடை கண்டுபிடித்து முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது. புரியாத புதர்களை விடுவிக்க உருவாக்கப்பட்ட அனுமானங்களை ஆய்வு செய்து, எது சரி எது தவறு என்று அறிவியல் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது. ஒருபோதும் குருட்டுத்தனமான அனுமானங்களை ஏற்றுக் கொள்வதில்லை. காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தது என்பதற்காகவே அதை ஏற்றுக் கொள்வதில்லை. அனைத்தையுமே கேள்வி கேட்டு, ஆய்வுக்குட்படுத்தி நிரூபனம் செய்யப்பட்டதையே ஏற்றுக்கொள்கிறது. முன் காலத்தில் நிரூபிக்கப்படாத அல்லது நிரூபிக்க முடியாத அனுமானங்களை ஆளும் சமூகத்தின் மதத்தின் பெயரால் புராணப்பூச்சுக்கள் பூசி, மக்களை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது, அல்லது நம்ப வைக்கிறது. நம்ப மறுத்தவர்களை உருட்டி மிரட்டி ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது, அல்லது அவர்களை அழித்திருக்கிறது. 

பல்வேறு உதாரணங்களை நாம் இன்று காண முடியும் உதாரணமாக பூமி உருண்டை என்று கண்டுபிடிக்கப்பட்டது, காலம் காலமாக பூமி தட்டை என்று சொல்லி வந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து, அவ்வாறு கூறிய அறிவியலாளர்களை தண்டித்துள்ளனர். 

சூரிய குடும்பத்தின் கோள்கள் தான் பூமி, வியாழன், சனி, புதன், செவ்வாய்,பூமியின் துணைக்கோள் சந்திரன் என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்த பின்னரும் பூமியை சுற்றி வரும் நவக்கிரகங்கள் என்று நம்ப வைக்கும் பணியை மதம் கச்சிதமாக செய்திருக்கிறது.

. இது போன்ற பல அறிவியல் கண்டுபிடிப்புகள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

. ஒரு காலத்தில் கல்வி என்பது மொழி, இலக்கணம், இலக்கியங்கள் மற்றும் கணிதம் கற்பது மட்டுமே என்ற நிலை மாறி அறிவியல் கல்வி என்பது வந்து உலகம் வெகுவாக முன்னேறிவிட்டது. 

கல்வி கற்றவர்களுடைய எண்ணிக்கை மிகுந்து, இன்று உலகில் எழுத படிக்க தெரியாத ஆட்கள் தான் மிகக் குறைவு என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஆனால் அப்படி உருவான கல்வி வேலைக்காக, பொருளாதார முன்னேற்றத்திற்காக மட்டுமே என்ற திசைவழியில் சென்றதால் கல்வி என்பது சூதாட்டமாக மாறி வருகிறது. மதிப்பெண்களை மட்டுமே முதன்மையாக வைத்து, குருட்டு மனப்பாடம் செய்திடும் கல்வி முறை தான் இன்று முதன்மையாக உள்ளது. 

அதன் விளைவு தான் அறிந்து கொள்ள படித்தல், புரிந்து படித்தல், அறிவை பெருக்கிட படித்தல் என்பதெல்லாம் போய் நுழைவுத் தேர்வுக்கு படிக்கும் நீட்டுக்கான பயிற்சி, ஐஏஎஸ் கான பயிற்சி, அதற்கென்று ஒரு பயிற்சி என்று ஒரு பயிற்சி என்று சூதாட்டக் களங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. இதில் திறமையை தேர்வு தான் இப்படி போட்டி போட்டு கொண்டிருக்கிறோம் என்று ஒரு அண்ட புளுகு, ஆகாச புழுகினை ஆட்சியாளர்கள், மெத்தப் படித்தவர்கள் எல்லாம் புளுகிக் கொண்டிருக்கிறார்கள். படித்தவர்களும் படிக்காதவர்களும் நம்பி அதன் பின் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலை என்றுதான் மாறிடுமோ?! 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...