சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 9 August 2026

பசி


கவிஞனின் கலைப்பசி

காவியங்கள் பிறந்திடும். 

ரசிகனின் கலைப்பசி-நற்

கலைதனை ரசித்திடும்..  

மன்னனின் மண்பசி 

அழிவினை அளித்திடும். 

வீரனின் வெற்றிப்பசி

தடைதனை உடைத்திடும். 

விளையாட்டு வீரனின் பசி

சாதனைகள் படைத்திடும். 

கண்களின் பசி கவின் 

கலைகள் தேடிடும்.. . 

செவிகட்காம் பசி 

நல்லிசையும் ரசித்திடும்..   

வயிற்றின் பசியோ 

உணவைத்தேடும்

நாவின் பசியோ 

தேடிடும் நற்சுவை .. 

காதலின் பசி  

பிறந்திடும் புதுக்கவிதை . 

காமப்பசிக்கோ குழவியும்

கிழவியும் பலியாவார்.  

கஞ்சனின் பசிக்காம்

காதல் பாசம் பலியாகும். 

அரசியல்வாதியின் அதிகாரப்பசி

அடைந்திடும் நாடு வறுமை.. . 

பகுத்தறிவாளரின் அறிவுப்பசி

ஆக்கிடுமே அகிலம் மேன்மை. 

சித்தாந்தத்தின் பசி

செகமாயிடுமே செம்மை.. 

பசிதானே அனைத்துயிர்க்கும் 

சீவனும் வளர்ச்சியுமாம்.

**********************

நட்பு தமிழ் வட்டம் மதுரை 7ஆம் ஆண்டு தமிழ் விழாவில் நான் வாசித்த கவிதை 



2 comments:

  1. காமப்பசிக்கோ குழவியும்

    கிழவியும் பலியாவார். இதற்க்கு அர்த்தம் என்ன? இவ்விடத்தில் வர காரணம் என்ன? அ கோ சூர்யா.

    ReplyDelete
  2. கவிதையோ அருமை. கருத்தோ பெருமை நீவிர் நவின்றது அத்தனையும் உண்மை. இவை அனைத்தும் உலகத்தின் தன்மை. கோவை செல்வம்

    ReplyDelete

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...