சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 9 August 2026

நூலகங்கள் சந்தித்த சோதனைகள். .

 "அவர்கள் புத்தகங்களை எரிக்கும் இடத்தில், இறுதியில் மக்களை எரிப்பார்கள்" - ஹென்ரிச் ஹெய்ன். 

மனித குலம் தனது அறிவாற்றல், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், கலை, கலாசாரத்தை பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பதற்கான அற்புதமான சாதனம் தான் நூல்கள் ஆகும். 
தனிப்பட்ட எல்லாரும், எல்லா வகையான நூல்களை வாங்கி சேமிப்பதென்பது இயலாத விடயம்.. எனவே தான் அரசோ, தனிப்பட்ட ஆர்வலர்களோ நூலகங்கள் நிறுவி சமுதாயத்திற்கு பயனுள்ளதாக ஆக்கி வந்துள்ளனர். 

எனினும் போர்கள், உள்நாட்டு கலவரங்கள் போன்ற காலங்களில் ஆக்கிரமிப்பாளர்கள், இன, மத வெறியர்கள், பாசிச சக்திகள் மாற்றுசிந்தனையாளர்களின் அறிவுசக்தியை அழிக்கும் பொருட்டு நூலகங்களுக்கு தீயிட்டு, நூல்களை அழித்த துயர நிகழ்ச்சிகளை அறிவுலகம் பலமுறை சந்தித்துள்ளது. 

வரலாற்றில் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே நூல்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 
பண்டைய அலெக்சாந்திரியா நூலகம் (Library of Alexandria) எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தாலமி வம்சத்தால் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற அறிவுசார் மையமாகும். இது பல லட்சம் சுருள்களைக் கொண்டு பல்வேறு நாடுகளின் அறிஞர்களை ஈர்த்தது, பின்னர் பல்வேறு தீ விபத்துகள் மற்றும் போர்களால் முழுமையாக அழிந்து போனது.வரலாற்றுச் சிறப்புகள்அறிவு மையம்: பண்டைய உலகின் அறிவியல், கணிதம், இலக்கியம் மற்றும் தத்துவப் படைப்புகள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன. வரை பாப்பிரஸ் (Papyrus) சுருள்கள் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
ஜூலியஸ் சீசரின் ஆட்சிக்காலமான கி.மு. 48-இல் நடந்த போரின் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பகுதி சேதமடைந்தது. பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்கள், படையெடுப்புகள் மற்றும் கவனிப்பாரற்ற தன்மை காரணமாக படிப்படியாக முழுமையாக அழிந்தது.

நம் நாட்டில் கூட இது போன்ற பல துயரங்களை பலமுறை கொண்டிருக்கிறோம்.
சனாதன சக்திகளால் சமன, பௌத்த இலக்கியங்கள் அழிக்கப்பட்டது அவ்வாறே.. நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், சுவடிகள் பலநாட்கள் எரிந்ததும் நம்நாட்டு வரலாறு.

ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிச ஆட்சியாளர்கள் பொதுவுடைமை சித்தாந்த, நூல்களை, மாற்றுக்கருத்துடைய நூல்களை தீயிட்டு கொளுத்திய வரலாற்றை அறிவோம். ." 


ஹென்ரிச் ஹெய்னின் அல்மன்சர் நாடகத்தின் பிரபலமான வரியுடன் நாம் தொடங்கியதிலிருந்து, புத்தக எரிப்பு பற்றி சுருக்கமாகப் பேசுவது மட்டுமே பொருத்தமானது.

ஒரு ஜெர்மன் யூதக் கவிஞரான ஹெய்ன், 1831 ஆம் ஆண்டு ஜெர்மனியில் யூத எதிர்ப்பு மற்றும் தணிக்கை பிடிபட்டதால் ஜெர்மனியை விட்டு பிரான்சுக்கு தப்பிச் சென்றார். ஹெய்னின் நாடகமான அல்மன்சர், கிறிஸ்தவர்கள் ஸ்பெயினை மீண்டும் கைப்பற்றிய பிறகு கிரனாடாவில் குர்ஆன் எரிக்கப்பட்டதைக் குறிக்கிறது - ஆனால் 1933 இல் நாஜி மாணவர்கள் (ஹெய்னின் சொந்த புத்தகங்கள் உட்பட) புத்தகங்களை எரித்தபோது இந்த வரி தீர்க்கதரிசனமாக மாறியது. இன்று, பெர்லினில் உள்ள பெபெல்பிளாட்ஸில், காலி நூலகம் ஒரு நினைவுச்சின்னமாக நிற்கிறது, ஹெய்னின் பிரபலமான வரியும் இதில் அடங்கும். ஜெர்மனி ஹெய்னை நினைவுகூர்கிறது, நாஜிக்கள் சபிக்கப்படட்டும். 



இலங்கையில் சிங்கள பேரினவாத சக்திகள் யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகத்தை தீயிட்டு அரிய தமிழ் நூல்களை அழித்ததை அறிவோம். 
கலைஞர் அவர்கள் உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முயற்சித்தது கூட ஒரு வகையிலான தாக்குதலே... 

இது போன்ற வரலாற்றை நினைவு கூர்தல் என்பது மிக அவசியமானது. ஏனெனில் ஆக்குதல் மிகவும் கடினம், அழித்தல் என்பது மிகவும் எளிதானது.
எனவே இந்த வரலாற்றை நினைவு கூர்தல் என்பது புத்தக ஆர்வலர்களைப் போற்றுதலும், அறிவுலகத்தை அழிவு சக்திகளிடம் இருந்து காத்தல் மிக அவசியம்  என உணர்த்திடவே!!!! 


No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...