பிள்ளைகளைப் பெற்றெடுப்பவர்களை விட, அவர்களுக்கு நல்ல கல்வி கற்பிப்பவர்களே அதிகம் போற்றப்படத் தகுதியானவர்கள்; ஏனெனில், பிள்ளைகளைப் பெற்றெடுப்பவர்கள் அவர்களுக்கு உயிரை மட்டுமே கொடுத்தார்கள், அவர்களோ சிறப்பாக வாழ்வதற்கான கலையைக் கற்றுக் கொடுத்தார்கள்.
— அரிஸ்டாட்டில்
(நிகோமாக்கியன் அறநெறி)
"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" ;புறநானூற்றுப் பாடல். பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர் பாடியது.
நல்ல குழந்தைகளை பெற்று தருவது தாயின் கடமை. அவர்களை கல்வி கற்க வைத்து சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை என்று சொல்கிறது இப்பாடல் .
உண்மையில் தந்தை சான்றோன் ஆக்குவதற்காக அரும்பாடு பட்டு செல்வங்கள் செலவழித்து நல்ல கல்விக்கூடத்தில் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைத்தாலும், உண்மையில் அவர்களுக்கு அறிவு கண் திறந்து வைத்த அகிலத்தைக் காட்டி அறிவு போதிக்கும் ஆசிரிய இனமே மிகவும் மேலானவர்கள்.
மாதா பிதா குரு தெய்வம் என்று மத நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வார்கள்.
தெய்வம் இருப்பதை ஏற்றுக் கொள்பவர்களும் உண்டு. ஏற்றுக் கொள்ளாதவர்களும் உண்டு ஆனால் இந்த முதல் மூன்று பேர் தான். உண்மையில் ஒரு மனிதனை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்காற்றுபவர்கள்.
அதில் தாயும் தந்தையும் பெற்றதனால் கடமை இருக்கிறது. ஆனால் ஆசிரியரோ ஊதியம் பெற்றுக்கொண்டு கற்பித்தாலும் அவர்களை அறிவாளிகளாக சான்றோனாக சமூகப் பொறுப்புள்ள குடிமகனாக வளர்த்திருக்கும் மிகப் பெரிய பங்கை ஆற்றுகிறார்கள்.
ஆசிரியர்கள் வெறும் தகவல்களைப் பகிர்வதோடு நின்றுவிடுவதில்லை—அவர்கள் குணநலன்களை வடிவமைக்கிறார்கள், ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள், மற்றும் வாழ்வதற்கான கலையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உயிரைக் கொடுக்கும்போது, கல்வியாளர்கள் அந்த வாழ்க்கையை ஞானம், நோக்கம் மற்றும் நற்பண்புகளுடன் எப்படி வாழ்வது என்பதைக் கண்டறிய அவர்களுக்கு உதவுகிறார்கள் என்று அரிஸ்டாட்டில் நமக்கு நினைவூட்டுகிறார்.
இந்தக் காலத்தால் அழியாத மேற்கோள், தனிநபர்களையும் சமூகங்களையும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பங்கை எடுத்துக்காட்டுகிறது. அவர்களின் செல்வாக்கு வகுப்பறையைத் தாண்டியும் பரந்து விரிந்து, பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.
ஆசு" என்றால் குற்றம் அல்லது பிழை என்றும், "இரியர்" என்றால் அதை அகற்றுபவர் அல்லது திருத்துபவர் என்றும் பொருள்.
குற்றங்களை நீக்குவது என்பது கல்வியில் பாடத்தில் உள்ள குற்றங்களை மட்டும் நீக்குவது என்பது மட்டுமே அல்ல.
அதாவது மாணவர்களின் மனத்தில் உள்ள அறியாமை, பிழைகள் மற்றும் ஒழுக்கக் குறைபாடுகளை நீக்கி அவர்களை நல்வழிப்படுத்துபவரே ஆசிரியர் ஆவார்.
அவ்வாறு வழிகாட்டுபவர் குற்றம் குறை இல்லாதவராக இருந்திட வேண்டும் இல்லை எனில் ஆசிரியர் என்பது ஆசுரியர் ஆகிவிடும் அதாவது குற்றங்களை உடையவர் என்று ஆகிவிடும். எனது ஆசிரியர் நன்பர் கூறுவார்.
ஆசிரியர் மாணவனை போய் சிகரெட் வாங்கிட்டு வர சொன்னால், அவன் கஞ்சாவோடு தான் வந்து நிற்பான்.
ஆக ஆசிரியர் என்பவர் முன்மாதிரியாக இருந்திட வேண்டும். பாடங்களை முறையாக கற்றுக் கொடுப்பது, மட்டுமல்லாது வாழ்க்கை நெறி முறைகளையும் கற்றுக் கொடுத்து நல்ல குடிமகனாக வளர்த்தெடுக்கும் பொறுப்பு ஆசிரியருக்கும் இருக்கிறது. தவறு செய்திடும் மாணவனை தண்டித்து திருத்தும் போது, மாணவனுக்கு சப்பை கட்டு கட்டிக் கொண்டு ஆசிரியரிடம் வம்பிழுக்கும் போக்கை பெற்றோரும், பொதுமக்களும் கைவிட வேண்டும்.
அறிவு மற்றும் வழிகாட்டுதலின் மூலம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இச்சமுதாயம் பெரும் கடமைப்பட்டிருக்கிறது.

உண்மை .குரு இல்லை என்றால் இந்த உலகத்தில் மேன்மையானவர்கள் இல்லை ஐயா
ReplyDelete