சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 21 September 2026

குரங்கு பொம்மைகள்

  நல்லவற்றை காணாது கேளாது உரையாது வாழ்தலே

நவீனத்தின் சாயலோ.


காந்தி தனக்கு பிடித்தமான மூன்று குரங்கு பொம்மைகளை எப்போதும் வைத்திருப்பார் என்று ஒரு கதை சொல்வார்கள் . 

 தீயவற்றை பார்க்காதே 

தீயவற்றை கேட்காதே 

தீயவற்றை பேசாதே 

என்பதே அதன் தத்துவம் .

தீயவற்றை பார்ப்பதால் தான், கேட்பதால்தான் பேசுவதால் தான் தனி மனிதருக்கும் சமூகத்திற்கும் தீமை விளைகிறது என்பதே என்பதே அதன் தத்துவமாகும் .

நம் காலத்தில் நமது மக்களின் மனோபாவத்தையும் செயல்பாடுகளை பார்க்கும் போது இது தலைகீழாக மாறிவிட்டதோ என்ற எண்ணம் தான் தோன்றுகின்றது . 

அதாவது நல்லவற்றை பார்க்காதே

 நல்லவற்றை கேட்காதே

 நல்லவற்றை பேசாதே

என்ற செயல்பாட்டின் அடிப்படையிலேயே பெரும்பாலான மக்கள் வாழ்வதாகவே தோன்றுகிறது .. 

பெரும்பாலான மக்கள் நல்ல விடயங்களை பார்க்க மறுக்கிறார்கள். நல்ல விடயங்களை கேட்க மறுக்கிறார்கள். நல்ல விடயங்களை படிக்க, சிந்திக்க மறக்கிறார்கள். நல்ல விடயங்களை புறக்கணிக்கிறார்கள். அத்துடன் நல்லவர்களையும் சேர்த்தே புறக்கணிக்கிறார்கள். 

அதனால் தான் என்னவோ சமூகத்தில் அமைதி , ஒற்றுமை , நல்லெண்ணம், அறம் ஆகியவை பாடுபட்டு நிற்பதாக தோன்றுகிறது. 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...