ஆறுகளுக்கு பாகுபாடு ஏதும் இல்லை. வேண்டியவர், வேண்டாதவர் என பயன்படுத்துவார் பற்றிய கவலை இல்லை விரும்பிய பொருள், விரும்பாத பொருள், நல்ல பொருள், கெட்ட பொருள், நன்மை தருவது, தீமை தருவது என்றெல்லாம் பாகுபாடு காட்டுவதில்லை...
ஆறுகளுக்கு தங்கள் உரிமை பற்றிய நினைவு கிடையாது. அவை தாங்கள் சந்திக்கும் அனைத்தையும் பனிப்பாறை கனிமங்கள், உதிர்ந்த இலைகள், விவசாயக் கழிவுகள், மருந்துத் தொழிற்சாலைக் கழிவுகள், ஜவுளிச் சாயங்கள், கன உலோகங்கள் என்று பாகுபாடின்றி கீழ்நோக்கிக் கொண்டு செல்கின்றன. தங்கள் கரைகளில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவின் முழுமையான கணக்கையும் அவற்றை ஏற்கும் கடலில் சேர்க்கின்றன.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் ஆய்வின்படி, விரைவு ஆடைத் தொழில் மட்டும் உலகின் தொழில்துறை கழிவுநீரில் மதிப்பிடப்பட்ட 20%-ஐ நேரடியாக நன்னீர் அமைப்புகளில் வெளியேற்றுகிறது. ஒரு ஜவுளிச் சாயமிடும் ஆலை, பதப்படுத்தப்படும் ஒரு டன் துணிக்கு 200 டன் வரை மாசடைந்த நீரை உற்பத்தி செய்யக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது . அசோ சாயங்கள், ஃபார்மால்டிஹைட், குளோரின் மற்றும் கன உலோகங்கள் கலந்த நீர் போன்றவற்றை வழக்கமான நகராட்சி சுத்திகரிப்பு அமைப்புகளால் முழுமையாக அகற்ற முடியாது. அந்த நீர் எங்கோ செல்கிறது. கட்டுப்பாட்டாளர்கள் அதை நினைவில் கொள்ள விரும்பாதபோதும் ஆறுகள் அதை நினைவில் கொள்கின்றன.
நாம் திட்டமிட்டு அந்த ஜவுளித் தொழிற்சாலையைக் கட்டவில்லை.
பல தசாப்தங்களாக நன்னீர் அமைப்புகளில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கலக்க அனுமதிக்கிறோம். சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குப் பற்றி கவலைப்படவில்லை. மிகவும் பலவீனமான ஆற்றங்கரைப் பாதுகாப்புகளைக் கொண்ட நாடுகளில் மாசுபடுத்தும் உற்பத்தியை அனுமதித்த நாம் விநியோகச் சங்கிலியை நாம் வடிவமைக்கவில்லை. ஃபாஸ்ட் ஃபேஷன் தொழிலும் அதன் தளவாடக் கட்டமைப்பும் மலிவு விலை ஆடைகள் என்று உருவாக்கி எந்த சுற்றுச்சூழல் அமைப்பை பற்றி கவலைப்படவில்லை.
ஒவ்வொரு தொழிற்சாலையில் கழிவும் இறுதியில் கடலை வந்தடைகிறது.
காலியான வலையை ஏந்தியிருக்கும் மீனவர் முப்பது ஆண்டுகளாக இந்த ஆற்றில் மீன்பிடித்து வருகிறார்.
அவர் மீன்பிடிக்கக் கற்றுக்கொண்ட அந்த ஆறு இப்போது இல்லை.
அதற்குப் பதிலாக வந்த தொழிற்சாலை, வலையை ஒருபோதும் பார்க்காத சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ஜெல்லிமீன்கள் உயிரற்ற பகுதிகளில் செழித்து வளர்கின்றன.
இந்த அமைப்பில் அவை மட்டுமே வெற்றியாளர்கள்.
கடல் தொடர்ந்து பெற்றுக்கொள்கிறது. ஆறு தொடர்ந்து வழங்குகிறது. தொழிற்சாலை தொடர்ந்து ஆற்றின் மேல்பகுதியில் தனது ஏற்றுமதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது. மனித குலம் ஓசைப்படாமல், எந்த வித எதிர்கால சிந்தனையின்றி, தனது இறுதி அறிக்கையில் கையெழுத்து இடுகிறது...

No comments:
Post a Comment