மாங்குரோவ் காடுகள் பூமியில் உள்ள மிகவும் உற்பத்தித்திறன் மிக்க மற்றும் பாதுகாப்பான சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். அவற்றின் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வேர் அமைப்புகள் ஒரே நேரத்தில் மீன் குஞ்சு பொரிப்பகங்களாகவும், கார்பன் உறிஞ்சிகளாகவும், நீர் வடிகட்டுதல் அமைப்புகளாகவும், மற்றும் மிக முக்கியமாக, புயல் அலைகளின் போது அலை ஆற்றலை 70% வரை குறைக்கக்கூடிய இயற்கையான கடலோரத் தடுப்புகளாகவும் செயல்படுகின்றன என்று ஃபெராரியோ மற்றும் குழுவினரால் 2014-ல் நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது.
மேலும், ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில், அதாவது சுற்றுலா பொருளாதார கண்ணோட்டத்தில் அவை கடற்கரை மேம்பாட்டிற்கு சிரமமான தடைகளாகவும் உள்ளன.
உலகளாவிய மாங்குரோவ் கூட்டமைப்பின்படி, 1950-க்குப் பிறகு உலகம் தனது கடலோர மாங்குரோவ் பரப்பில் சுமார் 50%-ஐ இழந்துள்ளது. இதற்கான முதன்மைக் காரணிகள் காலநிலை மாற்றம் மட்டுமல்ல. அவை மீன் வளர்ப்பு விரிவாக்கம்,இரால் பண்ணை கள், கடலோரக் கட்டுமானம் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை ஆகும். இவை தொடர்ந்து மாங்குரோவ் சூழல் அமைப்புகளை குறைந்த மதிப்புள்ள, அதிக மதிப்புள்ள பயன்பாட்டிற்காகக் காத்திருக்கும் நிலமாக வகைப்படுத்துகின்றன.
நாம் உண்மையான கடலோர மேம்பாட்டு, பாதுகாப்பு அனுமதிகளை அங்கீகரிக்கவில்லை. சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பு உள்கட்டமைப்பாகக் கருதாமல், அகற்றக்கூடிய தாவரங்களாக வகைப்படுத்திய மண்டல விலக்குகளைப்பற்றி கவலைப்படவில்லை. புயல் தடுப்புப் பகுதியை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு காக்டெய்ல் மதுக்கூடத்தைக் கட்டி, அதைச் சொர்க்கம் என்று அழைத்து, அந்த உல்லாச விடுதியை வடிவமைத்து விட்டோம்.
மேம்பாட்டுத் தொழிலும், அதைச் சாத்தியமாக்கிய ஒழுங்குமுறை அமைப்புகளும் அந்த நல்ல காரியங்களைச் (?!) செய்தன. பின்னர், இப்போது தொடர்ந்து வரும் ஒவ்வொரு புயலுக்கும் கணிசமாகப் பாதிக்கப்படக்கூடிய அந்தக் கடற்கரையில் ஆடம்பரமான தங்குமிடங்களைக் கட்டின.
செம்மைப்படுத்தப்பட்ட மணலில் உள்ள வெளுத்த சதுப்புநில வேர் ஓர் அலங்காரம் அல்ல.
ஒரு காலத்தில் சதுப்புநிலக் காடுகள் தடுத்த புயல்,அதை அழித்த பாவத்திற்காக இறுதியில் அதை முழுமையாக வசூலிக்க வரும்.
சுற்றுலாப் பயணிகள் கடலை நோக்கி நிற்கின்றனர்.
அவர்களுக்குப் பின்னால் புயல் கொடி பறக்கிறது.
முன்பு இங்கு என்ன இருந்தது என்பதை யாரும் அவர்களிடம் சொல்லவில்லை. அதை நினைவு படுத்த புயல் வருகிறது.

Super
ReplyDelete