ஓநாயின்குறி ஆட்டுக்குட்டி
அதற்கு சொல்லிடும் ஆயிரம் நீதி...
ஏகாதிபத்தியத்தின் குறி
உலகத்தையே விழுங்குதலே...
ஈராக்கில் சொன்னது
பேரழிவு ஆயுதங்களென்று..
லிபியாவில் கண்ணீர் விட்டது
சனநாயகம் இல்லை என்று...
சிரியாவில் சொன்னது
இரசாயன ஆயுதமென்று..
வெனிசுலாவில் குமுறியது
போதைப்பொருள் கடத்தலென்று..
ஈரானில் சொல்கிறது
அனுஆயுதம் உள்ளதென்று..
தென்னாப்பிரிக்காவில் அலறுது
வெள்ளையர் படுகொலை என்று....
நைஜீரியாவில் புலம்புது
கிறித்தவத்திற்கு ஆபத்தென்று....
காங்கோவில் கதறுகிறது
அமைதி அழிந்ததென்று..
விடயமெல்லாமே ஒன்று தானே
எண்ணெய் கனிமம் வைரம்...
கொள்ளை கொள்ளைகொள்ளை
கொள்ளை தவிர வேறில்லை...
No comments:
Post a Comment