சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 27 September 2026

சொல் அண்ணா சொல்


 


இளைஞர் எழுச்சி பெற 

இனம் ஏற்றம் பெற வழி

இயம்பினாயே செந்தமிழாலே. 


சிற்பிக்குத் தேவை 

சிற்றுளியும் கற்பனையும்

கற்பாறையும் தானே..


இளைஞர் எழுச்சிக்கு தேவை

பகுத்தறிவும் சுய மரியாதை 

உணர்ச்சியும் தானே 


மாயா வாதம், மனமருட்சி 

மயக்கவொன்னா

மாபெரும் சக்தி இளைஞர் தானே... 


வெட்டிப் பேச்சு 

வீணரின் கொட்டத்தை 

அடக்கியாளும் சக்தி இளைஞர் தானே.. .


பயங்காட்டும் பழமை 

மிரட்டும் வைதீகம் எதிர்த்திடும்

அயராத படை இளைஞர் தானே.. 


மத போதையூட்டும் 

மதிகெடு இலக்கியங்களை 

மண்ணுக்குள் புதையென்றாய்...


வாழ்வாவது மாயம்; 

மண்ணாவது திண்ணம் எனும்

வேதாந்தத்தை வீசிடச் சொன்னாய். 


என் நாடு பொன்னாடு; இதனை

ஏற்றத்தாழ்வில்லா 

சமுதாயமாய் அமைத்திடென்றாய். 


தட்டி யெழுபபி , மதியைப் பெருக்கி 

தன்னம்பிக்கை யூட்டிடும் 

விளக்க நூல்கள் படியென்றாய்....


விதியென்று வீனாகிடாது

மதியின் துணைகொண்டு  

மாய்த்திடு துயரென்றாய்... 


பகுத்தறிவு சிந்தனை 

அறிவுச் சுடர் பரப்பிட்ட

அறிவியல் பரப்பிடச் சொன்னாய்.. 


மறு மலர்ச்சி என்றதும்

மருண்டிடும் பண்பு மறைந்திட

மனவலிமை பெருக்கிடு என்றாய். 


'ஏழையின் துயர் துடைத்து

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காணச்சொன்னாய் 


எதிர்ப்பைக் கண்டு மருளாது

தடைகள், தண்டனைகளுக்கஞ்சா

துணிவின் பயணம் வெற்றி என்றாய்


"குலத்துக்கொரு நீதி" வேலையெனும்

குப்பை சிந்தனை தனை 

குழிதோண்டி புதையென்றாய்.


ஆரிய மாயைக்கு விடைகொடு

அறியாமை இருளைக் கிழித்தெறி

அறிவு மொழி காணெனச்சொன்னாய்.. 


இயற்கை நுட்பங்களைக் கண்டறி- மானிடர்

இன்னல் தீர்த்திடு

இனிய உலகு படைத்திடென்றாய்.. 


வளமான நாடாயினும் 

தற்குறிகளுமுண்டு என்ற நிலை 

அழிவின் அடையாளம் என்றாய்...


உன்சொல் கேட்டதால் தமிழ்

உலகமுயர்ந்தது-வரலாறு மறந்ததாலே

உன்மத்தர் வசமானதே இன்று 


இந்நிலை மாறிட

இன உணர்ச்சி பெருகிட மீண்டும்

எழுந்து வா அண்ணா !! 


உன் சொல்லே எமக்கு

வாய்மை காட்டிடும் வழிச்சொல்

சொல் அண்ணா சொல்.... 



சொல் அண்ணா சொல் என்ற தலைப்பில் நான் பாடிய கவிதை.... 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...