ஏமாறுதல் எனப்படுவது யாதெனின் உண்மை யல்லறறை
ஏற்பதும் உண்மையை ஏற்கமறுப்பதுமே.
ஏமாறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று உண்மையில்லாததை நம்புவது. மற்றொன்று அது உண்மை என்பதை நம்ப மறுப்பது.என்கிறார் புகழ்பெற்ற டென்மார்கைச்சேர்ந்த தத்துவ இயலாளர் சோரன் கியர்ஹெகார்ட்.
எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் பெரும்பாலான மக்கள் ஏமாறுபவர்களாகவே இருக்கிறார்கள்.
பண்டைய காலத்திலிருந்து மாபெரும் ஞானிகள் வாழ்வியலின் உண்மைகளை கூறும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் , இன்னொரு புறம் ஆதிக்க சக்திகள் புராணப் புளுகுகளை அள்ளி விடும்போது அவற்றை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதும் காலம் காலமாக நடந்து தானே வருகிறது.
அறிவியல் பூர்வமாக ஏராளமான விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கூறிய விஞ்ஞான உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அந்த வகையில் தானே .விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் சாதனங்களை பயன்படுத்திக் கொள்வதில் முந்திக் கொள்வார்கள், விஞ்ஞான உண்மைகளை ஏற்றுக் கொள்வதில்லையே. உதாரணமாக சூரிய குடும்பத்தில் ஒரு கிரகம் தான் பூமி என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தாயிற்று. ஒன்பது கோள்களில் ஒன்று சூரியன் என்றும், அதிலும் உண்மையில் இல்லாத ராகு கேது என்று இரண்டு கிரகங்களை கற்பனையில் உருவாக்கி, நவக்கிரகங்களென ஜோதிடர்கள் அளந்து விடுகையில் மக்கள்நம்பத்தானே செய்கிறார்கள்.
அன்றாட வாழ்வில் இருந்து அரசியல் வரை இதே நிலை தான்...
No comments:
Post a Comment