சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 17 September 2026

சாதி ஒழிப்பு சுடரொளி

 

கோனல் மானலும்

மேடு பள்ளமும்

புவிக்கழகு..


ஏற்றத்தாழ்வும்

சாதிப்பிணக்கும்

மனிதருக்கிழுக்கு... 


எடுத்துரைத்தார்

எத்தனையோ

பெரியோர்..


உடைத்தெறிந்தார்

ஈரோட்டுப

பெரியார்.. 


ஆட்டுக்கும்

மாட்டுக்கும்

இருந்திடலாம் வால்.. 


மாணிடருக்கு

ஏதுக்காம்

சாதியின் வால்.. 


அய்யர்வாள்

பிள்ளைவாள்

முதலியார் வாள்


பெயர்பின்னால்

வாள் தொலைந்தது

பெரியாரால்... 


காந்திக்கு 

அடையாளம் 

கண்ணாடி...  


ஈரோட்டுக்கு 

கிழவனுக்கோ 

வளைதடி... 


முதியோர்ககு 

வளைதடியோ 

ஊன்று கோல்


தமிழருக்கோ

பெரியாரின் தடி

பற்றுக்கோல்...


எல்லோரும் 

தடியாலே பாம்பை

கொல்வார் .. 


நம் பெரியாரரோ

பார்ப்பனியத்தை 

அடிக்கச் சொன்னார்... 


சாதி இரண்டென்று

சொன்னாள்.

அவ்வை


சாதி எதற்கென்று

எறியச்சொன்னார்

பெரியார்.. 


சாதியை சந்தனம்

என்றது

சனாதனம்... 


சாதியம் சாக்கடை

என்றவர்

பெரியார்.... 


சாதிக்கென்று வேலை

சொன்னது

சனாதனம்... 


சாதிக்கச்சொன்னது

ஈரோட்டுச்சிங்கம்

பெரியார். 


படிப்பு மறுத்தது 

கீழ்ச்சாதிக்கு

சனாதனம்


படிக்கச்சொல்லி

பெருமைப்படுத்தியது

பெரியார்..


வீதிகளில் அனுமதி

மறுத்தது

சனாதனம்...


கர்ப்ப கிரகத்துள்ளே

அழைத்து சென்றது

பெரியார்... 


மாறாதது என்றும்

சாதியென்றது

சனாதனம்.. 


மாற்றியதை சவக்குழி

தள்ளியவர்

பெரியார்... 


இருளுக்குள் இழுத்து

சென்றது

சாதீயம்..


சாதீயை ஒழித்த

சுடரொளி தானே

பெரியார்...





சாதி ஒழிப்பு சுடரொளி என்ற தலைப்பில் நான் பாடிய கவிதை 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...