இன்றைய நவீன உலகாக மாறுவதற்கு முன்பு, நம் நாடு பெரும்பாலும் சிறு சிறு நாடுகளாக, சில காலம் பெரும் தேசமாக இருந்தது உலகறிந்த விடயமாகும். பெரும்பாலான மக்கள் உழவுத் தொழிலும், குறிப்பிட்ட பிரிவினர் கைவிணை கலைஞராகவும், மிகக் குறைந்தவரே கற்றறிந்த புலவர்களாக இருந்தனர். கற்றறிந்தவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாக காலம் கழித்த, சிலர் வள்ளல்களை, பிரபுக்களை, அரசர்களை புகழ்ந்து பாடி பரிசுகளை பெற்று வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள்.
ஆம்மாதிரியான காலத்தில் பொற்களந்தை படிக்காசு தம்பிரான் என்று ஒரு சைவத்துறவி தமிழ் கவிஞராக வாழ்ந்திருக்கிறார். தொண்டை மண்டலத்தைச் சார்ந்த இவர் தொண்டைமண்டலத்தில் உள்ள 'பொற்களத்தூர்' என்றும் தென்களத்தூர்' என்றும் வழங்கப்பெறும் ஊரில் இவர் செங்குந்தர் மரபிலே தோன்றியவர். இளமையிலேயே நன்முறையில் கல்விகற்றுப் பல தமிழ்நூல்களில் புலமை பெற்று விளங்கினார்.
அவர் பல்வேறு இடங்களில் இருந்த கோவில்களுக்கு சென்று இறை வழிபாடு செய்து பாடல்கள் பாடினார். சில வள்ளல்களை, பிரபுக்களை, அரசர்களை சந்தித்து புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று இருக்கிறார்கள்.
அவ்வாறிருக்கையில் தனது கவிதை திறனை காட்ட அன்றைய மதுரை அரச திருநாயக்கன் அரசவைக்கு செல்கிறார் தான் ஒரு தமிழ் கவி என்று அவனிடம் அறிமுகப்படுத்தினார் கொள்ள " சரி சரி ஓரமாய் நில்லும்" என அமர் இருக்க கூட தராமல் நிறுத்தி வைத்து விட்டு,மன்னன் தெலுங்கு இசையை இரசித்திருக்கிறான்
தனது இருப்பைக்காட்டிட மீண்டும் மன்னனை அனுக அவன் கண்டு கொள்ளாமல் கழைக்கூத்தாடிகள் ஆட்டத்தை இரசித்து கொண்டிருக்கிறான்.
பொறுமை இழந்த புலவர் மன்னா என ஆரம்பிக்க மன்னன் அவரை கடிந்து விட்டு, வேசிகள் நடனத்தை இரசித்து ஈடுபட்டு தம்பிரானை காக்க வைக்கிறார்.
இயல்பான பொறுமையை இழந்த, மனம் நொந்த தம்பிரான் இச்செயலை பற்றி பின் வரும் கவிதை புனைந்து பாடலை விரைந்து பாடினார்.
அதைக்கேட்டு வெகுண்ட தெலுங்கு திருமலை நாயக்கன் புலவரை சிறை வைக்கிறான்.
அந்த கவிதை இதோ
"அட கெடுவாய்! பல தொழிலும் இருக்கக் கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திட முளமோ கனம் ஆடக் கழைக் கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லை;
தட முலை வேசையராகப் பிறந்தோமில்லை
சனியான தமிழை விட்டுத் தையலார்தம்
இட மிருந்து தூது சென்று பிழைத்தோமில்லை;
என்ன சென்மம் எடுத்துலகில் இரக்கின்றோமே!"
புலவர்கள் அறம்பாடினால் அழிந்து விடுவோம் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்ததால் அரசவையில் இருந்தவர்கள் ஒரு துறவியை சிறை வைப்பது தகாது என திருமலை நாயக்கனுக்கு நிச்சயமாக சொல்ல,புலவர் விடுவிக்கப்படுகிறார்.
தவறை உணர்ந்து மன்னன் விடுவித்தான் என்று கொள்வதற்கில்லை, அறம் பாடினால் அழிந்து விடுவோம் என அஞ்சித்தான் மன்னன் விடுவித்தானென கொள்வோம். ஏனெனில் அவர்கள் சிந்தனை, வாழ்க்கை முறை, ஒழுக்கத்தின் லட்சணம் அவ்வளவு தான்.
இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன்பு ஆட்சியாளர்கள் தமிழை அலட்சியப்படுத்தியதைக் கொதித்த தந்தை பெரியார் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளார். தலையங்கத்தை சில அறிவிலிகள் திசை திருப்பும் வகையில் சில பகுதிகளை மட்டும் வெளியிட்டு, திமிருடன் வசைபாடுகிறார்கள். அதை சில தறுதலைகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கரகாட்டம் ஆடுகிறார்கள்... என்ன செய்வது காலக்கொடுமை தான்..
******
பிச்சை எடுக்க உதவா தமிழென
பிதற்றுகின்றன பதர்கள் சில..
ஆயிரமாயிரம் ஆண்டு களாய்
ஆண்டிருந்த தமிழ் - அனைத்தும்
ஆட்கொள்ளும தமிழ்.- நாட்டிற்கே
ஆட்சி மொழியாக தகுதியான மொழி
அன்றாடம் வளர்ந்து வரும்
அறிவியலை தனதாக்கிக் கொண்ட
அழகும் தொன்மையும் கொண்ட தமிழ்..
இரந்துண்வதையே இலக்கணமான
ஈனருக்கு புரியாது தமிழ் பெருமை..
சிறப்பு
ReplyDelete