நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு- என நீரின் சிறப்பினை திருக்குறள் வலியுறுத்துகிறது.
உலகப் பொதுமறையான திருக்குறளில், வான்சிறப்பு என்னும் அதிகாரத்தின் கீழ் வரும் இக்குறள், அனைத்து உயிர்களுக்கும், உலகத்திற்கும் நீரே ஆதாரம் என்பதையும், மழை என்னும் நீரின் அருமையையும் தெளிவாகக் கூறுகிறது.
எல்லா உயிரினங்களுக்கும் நீரே ஆதாரம் என்று கூறுவது விஞ்ஞானம் மட்டுமல்ல மெய்ஞானமும் அதுதான். அதனால் தான் திருவள்ளுவரில் நீர் பற்றி ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.
அதனால் தான் அந்த காலத்தில் அரசர்கள் குளம் வெட்டினார்கள், மரம் நட்டார்கள். என்றெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறோம்.
தண்ணீர் ஆதாரத்தை பெருக்கி மக்களுக்கு குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்பதையே வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
முன்பு இந்தியாவில் தண்ணீர் குளங்களிலும், ஆறுகளிலும் இருந்துதான் எடுத்து பயன்படுத்தப்பட்டது.
பின்னாளில் தண்ணீர் வழங்கும் முறைக்கான ஏற்பாடுகள் எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்றும், நாம் எங்கே இருந்திருக்கிறோம் என்பதை பின்னோக்கி பார்ப்பதற்காக இந்த புகைப்படங்களை திரட்டி உங்கள் முன் வெளியிடுகிறேன்.
*******************
18 ஆம் நூற்றாண்டு - 20 ஆம் நூற்றாண்டு முற்பகுதி. காலனித்துவ சகாப்தத்தில் இந்தியா.
தண்ணீர், குளியலறைகள் மற்றும் பிளம்பிங்.
*************************
ஒரு பெண்ணின் குளியல், குரங்கைப் பார்த்ததால் தடைபட்டது .லக்னோ பள்ளிக்கூடக் ஒரு ஒளிபுகா வண்ணஓவியம். சிறந்த ஓவியரின் பள்ளியிலிருந்து. - நெவாசிலால்.
பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்ப்பது குரங்கிலிருந்து மனிதன் கற்றுக் கொள்ளலாமா?!.
19 ஆம் நூற்றாண்டு ஓவியம் இந்தியா கல்கத்தா.
தோற்பைகளில் நீரை நிரப்பி, விலங்குகள் சுமக்க விநியோகம் செய்கிறார்கள்.
தண்ணீர் சுமப்பவர் தனது தோல் பையில் தண்ணீரை நிரப்புகிறார். சூரத்.
சுமப்பவர் தோற்பையில் தண்ணீர் கொண்டு வந்த நீரை வீட்டில் உள்ள பாத்திரங்களில் நிரப்பும் காட்சி. 19 ஆம் நூற்றாண்டு புகைப்படம்..
தண்ணீர் சுமப்பவர்கள் தோற்பைகளில் தண்ணீர் நிரப்பி வரும் காட்சி 19 ஆம் நூற்றாண்டு புகைப்படம்...
நாட்ராய் நீர்வழிப்பாதை, கீழ் கங்கை கால்வாய் கட்டுமானம்.
1854ல்திறக்கப்பட்ட அலுவலகம். நாட்ராய் நீர்வழிப்பாதை, கீழ் கங்கை கால்வாய் கட்டுமானம்.
19 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் இந்திய மெட்ராஸ் (சென்னை). ஒரு நீர் ஊற்றில் வரிசையில் நிற்கும் பெண்கள்.
1900 தென்னிந்தியா, தெலுங்கானா.
வீட்டிலுள்ள மிகவும் குளிர்ந்த இடம்... டாக் பங்களா குளியலறை.. 1900 களின் புகைப்படம்.
1900 பிரிட்டிஷ் இந்தியா பஞ்சாப். தானிய சந்தை, கிளாட்ஸ்டோன் நீர்த்தேக்கம் அம்பாலா.
1910ல் பிரிட்டிஷ் இந்தியா பம்பாய்..





























No comments:
Post a Comment