சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 17 October 2025

வருது திருவிழா?!


தின்ன பலகாரம் கேட்கல.. 
திங்க சோறு தானே கேட்கிறோம்... 

புத்தம் புது ஆடை கேட்கல 
போட்டுக்க பழைய சட்டை தானே கேட்கிறோம்... 

அல்லாவும் கொடுக்கல, இயேசுவும் கொடுக்கல, இந்து சாமிகளும் கொடுக்கல... 

தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகை எதுவும் எங்களுக்கில்லை... 

ஓட்டுத்தணியில கொடி கட்டும் நூறு கட்சிகளும் கண்டுக்கல.... 

 திட்டங்கள் தினம்  போடும் அதிகாரிகளும் கண்டுக்கல... 

இந்துவா, இஸ்லாமா, கிறிஸ்தவமா எந்த மதமும் எங்களுக்கில்லை... 

வறுமையில் வாடும் வறியவருக்கு எந்த வகையுமே இல்லை...... 


 

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...