சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 3 October 2025

அழியாக் காதல்

 


அழகான தாரகை

அறிவான மங்கை

அன்பான காதலி

அவளிடம் கேட்டான்

 போர்வீரன் நர்மண்டி

அன்பே மனம் செய்யலாமா... 


அவள் சொன்னாள். 

அகிலமே அவதியில்

போரெனும் அவலத்தால்

அலைக்கழிந்து நிற்கிறதே.. 

அமைதி காலத்தில்

செய்வோமே அன்பு மனம் ...


அலை கடல் ஓய்ந்தபின்

குளிக்கலாம் என்பது போல்

 அலைக்கழிக்கிறாயே

 என்றான் நர்மண்டி... 

அவளும் சரி என்றாள்

அவனுடன் வந்தாள்... 


தேவாலயம் சென்றார்கள்

திருமனக்கோலத்தோடு

சிதிலமாய் நின்றது

பாதிரியையும் காணோம்

பிரார்த்தனைக்கு

 ஆட்களையும் காணோம்.


சுற்றிப் பார்த்தான் நர்மாண்டி.

அரைமணியில் வருகிறேன்

அவசரமாய் போனவன்

அங்கே விழுந்த குண்டில்

அவனும் பலியானான்

அந்தோ பரிதாபம்.... 


அவனுக்காய் காத்திருந்தாள்

காத்திருந்தாள்

 காத்திருந்தாள்

அறுபதாண்டுகள்

 காத்திருந்தாள்

அவன் கல்லறையில்... 


அவளும் மரணித்தாள், 

அடக்கம் செய்தனர்

 மனக்கோலத்தோடே

அவன் கல்லறைக்கருகே

அழியாக் காதலின் 

அடையாள சின்னமாய்... 


(இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸில் நடந்த உண்மை சம்பவம்).. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...