சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 16 October 2025

நினைவலைகள்6

 நான் வேலைக்குச் சேர்ந்த நேரம் எங்கு பார்த்தாலும் கிராமப்புறங்களில் பொது சுகாதாரத் துறை சார்பாக ஒரு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. பெரியம்மை நோயை கண்டுபிடித்தால் பரிசு ஆயிரம் ரூபாய் என்ற விளம்பரத்தை எங்குமே பார்க்கலாம்.

உலகமெங்கும் கடும் முயற்சிக்குப் பிறகு, லட்சக்கணக்கான சுகாதாரத்துறை ஊழியர்களின் உழைப்பால் பெரியம்மை என்ற நோய் உலகில் இருந்து வருகிறது துடைத்தெரியப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் பெரியம்மை நோயால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை என்று சொல்லலாம். எனது வீட்டிலேயே எனது அம்மாவும் எனது அண்ணனும் பெரியம்மையால் பாதிக்கப்பட்டு, ஏன் எனது அண்ணன் இறந்தே போனார். நான் மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் பட்டய படிப்பு படிக்கும்போது என்னுடன் படித்த அண்ணன் சீனிவாசன் அவர்களும் சிறுவயதில் பெரியம்மையால் பாதிக்கப்பட்டு வந்தவர் தான். பொதுவாக பெரியம்மை நோய் தாக்கியவர்களுக்கு பெரிய பெரிய வடுக்கள் இருக்கும். சிலருக்கு கண்பார்வை பறிபோயிருக்கும்.. 


 நான் பணிக்கு சேர்ந்த காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, கக்குவான் இருமல். இளம்பிள்ளை வாதம்(Diphtheria, pertusis,, Tetanus, Polio) போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் முழுமையாக துடைத்தெரியப்படாமல் இருந்து வந்தது.

அவ்வப்போது காலரா, மலேரியா போன்ற நோய்கள் ஆங்காங்கே தோன்றி மறைந்து கொண்டிருக்கும். நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தனர். வேக்சினேட்டர் என்று அழைக்கப்படும் அம்மைகுத்துபவர் பெரியம்மை நோய் தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மலேரியா திட்டத்தில் அடிப்படை சுகாதார ஆய்வாளர். அடிப்படை சுகாதாரப் பணியாளர் ஆகியோர் ஈடுபட்டிருந்தார்கள் சுகாதார ஆய்வாளர் பொதுவாக இவற்றிற்கு பொறுப்பாளராக மேற்பார்வை யாளராக இருப்பார். குழந்தைகள் மகளிருக்கான தடுப்பூசிகளை போடுவதில் சுகாதாரப் பார்வையாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 

மருத்துவமனைகளுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிப்பது மட்டுமே பிரதான வேலையாக உள்ளது உள்ளது. 

ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சையோடு நோய் தடுப்பு நடவடிக்கைகள், குடும்ப நலத்திட்டங்கள் சுகாதாரக் கல்வி பள்ளி நலம் என்று பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. 

எதற்கு இதை எல்லாம் சொல்கிறேன் என்றால் இத்திட்டங்களில் மருந்தாளுனருடைய பங்கு, சந்திக்கும் பிரச்சினைகள், மற்ற பணியாளர்களுடன் உறவு போன்றவை விஷயங்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காக தான். 

நாட்டின் மிக முக்கியமாக கருதப்பட வேண்டியது மனித வளம் தான் என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்து. அன்றைக்கு சந்தித்து வந்த சுகாதார பிரச்சனைகள், உடல் நலன் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை ஆய்வதற்காக அமைக்கப்பட்ட போரே குழு 1943 முதல் 46 வரை ஆய்வு செய்து கொடுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டன. பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மனித வளத்தை காப்பாற்றி, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லலாம். 

குழுவின் முக்கிய அம்சங்களான 1) அனைத்து நிர்வாக மட்டங்களிலும் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை ஒருங்கிணைத்தல், 2)ஆரம்ப சுகாதார மையங்கள் (PHC) வளர்ச்சி 2 நிலைகளில் பரிந்துரைக்கப்பட்டது. 

குறுகிய கால நடவடிக்கை - 40,000 மக்கள்தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் பரிந்துரைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 2 மருத்துவர்கள், ஒரு செவிலியர், நான்கு பொது சுகாதார செவிலியர்கள், நான்கு மருத்துவச்சிகள், நான்கு பயிற்சி பெற்ற மேடைகள், இரண்டு சுகாதார ஆய்வாளர்கள், இரண்டு சுகாதார உதவியாளர்கள், ஒரு மருந்தாளுநர் மற்றும் பதினைந்து வகுப்பு IV ஊழியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். முதலாவது 1952 இல் நிறுவப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அதன் ஒருங்கிணைப்பதற்கும் மேற்பார்வையிடுவதற்கு இரண்டாம் நிலை சுகாதார மையங்களும் திட்டமிடப்பட்டன.

10,000 முதல் 20,000 மக்கள்தொகை கொண்ட ஒவ்வொருவருக்கும் 75 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார பிரிவுகள், 650 படுக்கைகள் கொண்ட இரண்டாம் நிலை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்டகால திட்டம் (3 மில்லியன் திட்டம் என்றும்), மீண்டும் 2500 படுக்கைகள் கொண்ட மாவட்ட மருத்துவமனைகளைச் சுற்றி பிராந்தியமயமாக்கப்பட்டது.

என்ன தலையை சுற்றுகிறதா?! 

சரி நோய் தடுப்பு ஊசி திட்டத்திற்கு வருவோம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்கு சுகாதார பார்வையாளர்கள் பணிபுரிந்தனர். சுகாதார பார்வையாளர் 1)பொது 2)தடுப்பு ஊசி திட்டம் 3)குடும்ப நலம் 4)பள்ளி நலம் என 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் 108 பஞ்சாயத்துக்களைக் கொண்டிருந்தது. மிகப் பரந்த பகுதிக்கு தடுப்பூசி திட்டத்திற்கு என்று ஒரே ஒரு சுகாதார பார்வையாளர் மட்டுமே. 

அவர்களுக்குள் பகுதிகளை பிரித்துக்கொண்டு நான்கு பேரும் நான்கு பகுதிகளுக்கு சென்று DPT, DT, TT போன்ற தடுப்பு ஊசிகளை கர்ப்பிணி தாய்மார்களுக்கு போட்டு வருவார்கள். 

அப்போது தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கு வெக்சின் கேரியர் போன்ற பெட்டிகள் எல்லாம் கிடையாது. ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் கொஞ்சம் ஐஸ் போட்டு தடுப்பூசி மருந்துகளை எடுத்து செல்வார்கள். இரண்டு மூன்று சிரிஞ்சிகள் கொஞ்சம் ஊசிகள் எடுத்துக் கொண்டு அவர்களது பேக்கில் கொண்டு செல்வார்கள். அந்த பைக்குகள் தான் அவர்களது சூடான சாப்பாடும் இருக்கும். இதை இப்போது சொல்லும் போது அவர்களை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்ல வில்லை. அன்று இருந்த நிலை அவ்வளவுதான். ஆனால் இன்று எந்த உன்னதமான நிலைக்கு மாறி வளர்ந்து இருக்கிறோம் என்று நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.

தடுப்பூசி தயார் செய்யப்படும் இடத்தில் இருந்து ஊசியைப் பெற்றுக் கொள்ளும் பயனாளர் அதாவது கர்ப்பிணிகள் நான்கு டிகிரி செல்சியஸ் என்ற நிலையில்குளிர் சங்கிலி பராமரிப்புடன் குளிர் சங்கிலி பராமரிப்பு தடுப்பூசி மருந்துகளை கொண்டு சென்று அவர்களுக்கு செலுத்துகிறோம் என்றால் எந்த அளவுக்கு மிக உயர்ந்தது நாம் முன்னேறி இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். 

அதேபோல சென்ற இடங்களில் கொஞ்சம் வெண்ணீர் வாங்கி, கொண்டு போன இரண்டு கண்ணாடி சிரிஞ்சிகள் மற்றும் ஊசிகளை மட்டுமே வைத்துக் கொண்டு மாறி மாறி வெண்ணீரில் நனைத்துக் கொண்டு தடுப்பூசி போடுவார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு பயனாளருக்கு ஒரு சுத்திகரிக்கப்பட்ட ஊசி ஊசிகள் Disposable syringe with needles என்ற நிலையில் மிகவும் உன்னதமான முறையில் தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் தடுப்பூசி கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் நிச்சயமாக நாம் பெருமை பட வேண்டும். 

இவ்வளவுக்கும் காரணம் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் Universal immunization program என்ற ஒரு அருமையான திட்டம் தான் காரணம்.... 


மேலும் தொடர்வோம்... 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...