ஒன்றறிவு அதுவே, உற்று அறிவதுவே,
இரண்டறிவு அதுவே, அதனொடு நாக்கே,
மூன்றறிவு அதுவே, அவற்தொடு மூக்கே,
நான்கறிவு அதுவே, அவற்தொடு கண்ணே,
ஐந்தறிவு அதுவே, அவற்தொடு செவியே,
ஆறறிவு அதுவே, அவர்தொடு மனனே,
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.'
என மொழி அறிவியலின் முன்னோடியான தொல்காப்பியம் ஓரறிவு முதல் ஆறறிவு படைத்த உயிரினங்களை உலகிலேயே முதன்முறையாக பிரித்து பகுத்தறிந்து விளக்குகிறது.
தொல்காப்பியம் ஆறு அறிவு என்பது உயிரினங்களின் புலன்களை ஐந்து வகைகளாகவும், ஆறாவது அறிவாக மனதின் பகுத்தறிதல் திறனையும் குறிப்பிடுகிறது. இந்த ஆறு அறிவுகள் முறையே: தொடு உணர்வு, சுவை, மோப்பம், பார்வை, கேட்டல், மற்றும் மனதின் மூலம் பகுத்தறிதல் என வகைப்படுத்தப்படுகின்றன.
உள்ளம் (மனம்) என்ற உறுப்பால் புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு எனலாம். மூளை இயங்கும் செயலே உள்ளம் (மனம்) என்றும் நல்லது, கெட்டது எதுவெனப் பகுத்தறிந்து தான் வாழும் பூவுலகை சிறப்பிக்க வாழுதிலே ஆறாம் அறிவு பெற்ற மனிதனின் இலக்கணமாகும்.
ஏனெனில் மனிதன் மட்டுமே சமூகம் சார்ந்த உயிரினமாக கருதப்படுவதால் மனிதனை சமூக பிராணி Social animal
என்கிறோம்.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல் (702 திருக்குறள்)
சிறிதும் ஐயமே இல்லாத வகையில் எதிரில் உள்ளவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை முழுமையாக உணர்ந்து, தன் எண்ணத்தை அவர் உணர்த்தி இயங்கி வைக்கும் வலிமைக் கொண்டவரைத் தெய்வத்தோடு இணையாக வைத்துப் போற்ற வேண்டும். திருவள்ளுவர் இதையே ஏழாம் அறிவாகக் குறிப்பிட்டுள்ளார்..இதெல்லாம் மிக உயர்ந்த நிலை..
எல்லா மனிதனுக்கும் சிந்திக்கும் திறன் இருந்தாலும், எல்லோரும் உழைப்பாளிகள் என்றாலும், கருத்தால் உழைப்பவர்கள் வேறு, கரத்தால் உழைப்பவர்கள் வேறு தான். உடல் உழைப்பை காட்டிலும் கல்வி கற்று கல்வித்திறனால், அறிவு திறனால் உழைக்கக் கூடியவர்களை அறிவாளிகள் என்கிறோம்.
ஒரு அறிவுஜீவி என்பது யதார்த்தத்தின் தன்மை, குறிப்பாக சமூகத்தின் இயல்பு மற்றும் அதன் நெறிமுறை சிக்கல்களுக்கு முன்மொழியப்பட்ட தீர்வுகள் பற்றியது விமர்சன சிந்தனை , ஆராய்ச்சி மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் நபர்.
ஓர் அறிவுஜீவி புதிய சிந்தனைகளை வரவேற்பவனாகவே இருப்பான். எந்தப் புதிய கருத்தும் ஏதோ ஒரு வாசலைத் திறக்கக் கூடியது, மாற்றத்தை உருவாக்கக் கூடியது என அவன் அறிந்திருப்பான்.
ஒரு அறிவுஜீவி என்றால் நன்றாகப் படித்தவர், நிறைய படித்தவர், பட்டங்கள் ஏராளம் பெற்றவர் அல்லது அறிஞர் என்றால் அர்த்தம் இல்லை,
"அறிவுஜீவி" என்ற சொல் அரசியல் வட்டாரங்களில் அடிக்கடி வீசப்படுகிறது, இது பொதுவாக ஒரு விஷய நிபுணராக கருதப்படும் நபர் அல்லது ஒரு அறிவாளியாக கருதப்படும் ஒருவரைக் குறிக்கிறது.
அறிவாளி என்பவர் புலம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர்.
ஆனால் அறிவுஜீவி என்பவர் வெறும் அறிவை மட்டும் கொண்டிருக்காமல், அதனைப் பயன்படுத்தி சமூகம் மற்றும் தத்துவார்த்த பிரச்சனைகளை ஆராய்ந்து, புதியது கருத்துக்களை உருவாக்கும் ஒரு சிந்தனையாளர்.
ஆனால் துரதிஷ்டவசமாக நிறைய படித்தவர்கள், மகா அறிவாளிகள் தங்களது அறிவுத்திறனை, கல்வித் திறன், பேச்சுத்திறனை, எழுத்து திறன், கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன், தங்களது சுயலாபத்திற்காக, சுயநலத்திற்காக விற்று பிழைப்பவர்களாக அறிவுஜீவிகள் என்ற பெயரோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சமூகத்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத, யாருக்கும் பயன்படாத, எந்த தகுதியும் இல்லாத, குப்பைகளை அல்லது சுயநலவாதிகளை, அறிவாளிகளை, சினிமா அல்லது கலை பிரபல்யம் கொண்ட திடீர் தலைவர்களை மிகப்பெரிய அறிவாளிகள் போலவும் சமூகத்தையே மாற்ற வந்த பெரும் தலைவர்கள் போலவும் வானத்திலிருந்து குதித்த தேவர்கள் போலவும் படம் காட்டும் வேலையை இந்த அறிவு ஜீவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக உலகையே ஆட்டிப்படைத்த மனித குல விரோதிகளான பாசிஸ்ட்டுகள் ஹிட்லரையும், முசோலினியையும், மிகப்பெரிய அறிவாளிகளாகவும் தலைவர்களாகவும் உயர்த்திப் பிடித்தவர்கள் இந்த அறிவு ஜீவிகள் தான் என்பது வரலாறு.
நேற்றிக்கு ஒருவரை பிரபல்யப்படுத்திவிட்டு அவர் விலை போகாவிட்டால் அப்படியே அவரை விட்டுவிட்டு, இன்று இன்னொருவரை துதி பாடி இவரை பிரபல்யப்படுத்தி துதி செய்து கொண்டிருக்கும், இந்த அறிவை விற்று பிழைக்கும் வாடகை வாயர்களை என்னவென்று சொல்வது.
பொதுவாகவே சமூகத்தில் ஏற்படும் அனைத்து விதமான மாற்றங்களையும் நல்லதோ, கெட்டதோ துவக்கி வைத்து அதற்கான கருத்தை உருவாக்குதல் என்கிற வேலையை நடுத்தரமானது வர்க்கமும்Middle class, அறிவு ஜீவிகளும் Elite intellectuals தான் செய்து வருகின்றனர்.
அதை செய்யக்கூடிய மாபெரும் ஆற்றல் இந்த அறிவு ஜீவிகளுக்கு இருப்பதால், எந்த கேவலத்தையும் நியாயப்படுத்த கூடிய பணியைத்தான் இன்று செய்து வருகிறது வருகிறது கொண்டிருக்கிறார்கள். இவர்களை அறிவு வியாபாரிகள் என்று சொல்லலாமா?! அல்லது அழிவு வியாபாரிகள் என்று சொல்லலாமா?! சமூகம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இல்லையென்றால் காலமும் வரலாறும் முடிவு செய்யும்....
No comments:
Post a Comment