உலக அளவில் நோய் தடுப்பு திட்டத்தின் துவக்க புள்ளியாக இருந்த விரிவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு திட்டம் என்ற திட்டம் உலக சுகாதார அமைப்பால் மே 1974 இல் தொடங்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் 1978 இல் தான் தொடங்கப்பட்டது.
நான் பணிக்கு சேர்ந்த ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகமாகி செயல்பட துவங்கியிருந்தது. நான் முன்பே மாதிரி இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான கட்டமைப்பு ஏற்பாடுகள் மட்டுமே இருந்தது. இது போதுமானதாக இல்லாத சூழ்நிலையில்,உலகம் எங்கும் இந்த விரிவாக்க பட்ட திட்டமானது 1985ல் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டம் (UIP) என மறுபெயரிடப்பட்டு, கிராமப்புறங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.
அனைவருக்குமான சுகாதார திட்டத்தில் அடுத்த கட்டமாக இந்தியாவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பல்வேறு சுகாதார குழுக்களின் பரிந்துரை அடிப்படையில் பல்நோக்கு சுகாதார திட்டம் இந்த காலகட்டத்தில் அறிமுகமானது. இந்தத் திட்டத்தின் படி 5000 மக்கள் தொகை கொண்ட அனைத்து பகுதிகளுக்கும் ஒரு துணை சுகாதார மையம் என அமைக்கப்பட்டு, பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (பெண்) Multi purpose Health Worker (Female) நியமிக்கப்பட்டனர்.
தாய் சேய் நலம், குடும்ப நலம், பள்ளி குழந்தைகள் நலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இப்பணியாளர்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டது. நோய் தடுப்பு திட்டத்தின் பிரதான களப்பணியாளர்களாக இவர்கள் செயல் பட்டனர். பின்னாளில் இத்திட்டத்தில் பணிபுரிந்த பல்நோக்கு சுகாதார பெண் பணியாளர்கள் கிராம சுகாதார செவிலியர்கள், Village Health Nurse,என்றும் மேலும் இவர்களை மேற்பார்வையிடும் சுகாதார பார்வையாளர்கள் பகுதி சுகாதார செவிலியர் Sector Health Nurse எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இச்சூழலில் தான் உலகளாவிய நோய் தடுப்பு திட்டம் 90களில் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பனிக்கட்டியால் மூடப்பட்ட குளிர்சாதன பெட்டி (Ice lined refrigerator ) ஐ எல் ஆர், ஆழ் உறைப் பெட்டகம்Deep freezer டி ஃப்ரீசர் வழங்கப்பட்டது.
ஐ எல் ஆர் இல் 2-8 டிகிரி செல்சியஸ் தட்பவெட்ப நிலையிலேயே மருந்துகள் பராமரிக்கப்பட்டு வரும். மின் தடை செய்யப்பட்டாலும் 24 மணி நேரத்திற்குள் அந்த தட்பவெட்பத்தில் மருந்துகளை பராமரிக்கும் விதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல டீப் ஃப்ரீசரில் பிளாஸ்டிக் ஐஸ் குப்பிகள் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்க்கு தயார் செய்யும் விதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை மின்தடை ஏற்பட்டு நீண்ட நேரம் ஆகிவிட்டால், இந்த பிளாஸ்டிக் ஐஸ் குப்பிகளை பெரியதொரு பாதுகாப்பான பெட்டியில் வைத்து மருந்துகளை அதனுள் வைத்து வைத்து வைத்து கூடுதல் நேரம் தேவைப்படும் தட்பவெட்ப நிலையில் பராமரிக்க இயலும்.
தவிரவும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெக்சின் கேரியர் என்று அழைக்கப்படும் பெட்டிகளுக்குள் இந்த நான்கு ஐஸ் குப்பிகளை வைத்து மருந்துகள் அதனுள் உள்ளன. உள்ளன. வைத்து பயனாளர்களான தாய்மார்களுக்கு அந்த தடுப்பூசி இரண்டிலிருந்து எட்டு டிகிரி செல்சியஸ் தட்பவெட்ப நிலையில் கிடைக்குமாறு எடுத்துக் கொள்ளுங்கள் செல்ல இயலும்.
எனவே மருந்து தயாரிக்கப்படும் இடத்திலிருந்து மாநில சேமிப்பு மையம், மாவட்ட சேமிப்பு மையம், அதன் பின் ஆரம்ப சுகாதார நிலையம், இறுதியில் துணை சுகாதார மையம் வரை மருந்துகள் தேவைப்படும் 2-8 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் சேர்க்கும் மாபெரும் புரட்சிகரமான செயல்பாட்டு திட்டம் இது.
டெட்டனஸ், போலியோ தட்டம்மை, ரூபெல்லா, குழந்தைப் பருவ காசநோயின் கடுமையான வடிவம், ரோட்டாவைரஸ் வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் பி, மூளைக்காய்ச்சல் நிமோனியா (ஹீமோபிலஸ்) இன்ஃப்ளூயன்ஸா வகை பி ஆல் ஏற்படுகிறது), நிமோகோகல் நோய்கள், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்றவற்றுக்கான தடுப்பூசி மருந்துகள் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
இதன் விளைவாக பரவலான தடுப்பூசி காசநோய் , போலியோமைலிடிஸ் , தட்டம்மை , டிப்தீரியா , டெட்டனஸ் , பெர்டுசிஸ் , ஹெபடைடிஸ் பி , மஞ்சள் காய்ச்சல் , மூளைக்காய்ச்சல் ஏ மற்றும் பல நோய்களிலிருந்து வரும் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளது.
இதில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநரின் பங்கு என்பது தேவையான தடுப்பூசி மருந்துகளை பெற்று அய் எல் ஆரில் வைத்து பணியாளர்களுக்கு வழங்குவது, தினசரி தட்பவெட்ப ப்ப அட்டவணை டெம்பரேச்சர் சார்ட் பராமரிப்பது, களப்பணியாளர்கள் பயன்படுத்திய காலி குப்பிகளை சேகரித்து அடுத்த வாரம் வரை அதை அய் எல் ஆரில் பராமரித்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும். டெம்பரேச்சர் சார்ட் பராமரிப்பின் நோக்கம் காலை மாலை இரண்டு வேளை இரண்டிலிருந்து எட்டு டிகிரி செல்சியசுக்குள் அந்த தடுப்பூசி மருந்துகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதற்கான உறுதி ஏற்பாடாகும்.
அதேபோல காலி குப்பிகளை ஒரு வாரத்திற்கு பராமரிப்பதன் நோக்கம், ஒருவேளை தடுப்பூசி வழங்கப்பட்ட இடத்தில் பயனாளர்களுக்கு ஏதேனும் பின் விளைவுகள் இந்த காலி குப்பில் உள்ள மருந்தையும் அதே பேட்ச் நம்பரில் உள்ள மற்ற மருந்தையும் ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்து தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது என்று கண்டறிவதற்கான ஒரு ஏற்பாடாகும்.
சில இடங்களில் அவ்வாறு பின்விளைவுகள் ஏற்பட்ட போது இந்த காலி குப்பிகளை ஆய்வு செய்ததன் மூலம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த இடத்திலும் தவறு நிகழவில்லை என்று நிரூபணம் ஆகி இருக்கிறது.
ஒருமுறை நான் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்த போது ஒரு களப்பணியாளர் காலை நேரத்தில் தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுச் சென்ற பின், பேருந்தில் ஏறுவதற்கு முன் வேக்சின் கேரியரை தனது வீட்டில் வைக்கச் சொல்லி வேலைக்காரியிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். அந்த வேலைக்காரி விவரம் தெரியாமல் நேரடியாக என்னிடமே கொண்டு வந்து கொடுத்து விட்டார்.
நான் உடனடியாக எனது மருத்துவ அலுவலரிடம் அந்த வேலைக்காரரையும் அழைத்து சென்று விவரங்களை தெரிவித்துள்ளேன்.
அன்று மாலை அந்த களப்பணியாளர் எங்கிருந்தோ பொறுக்கி எடுக்கப்பட்ட காலி குப்பிகளை கொண்டு வந்து என்னிடம் மீண்டும் ஒப்படைக்க வந்தார்.
நான் மருத்துவ அலுவலரிடம் அழைத்துச் சென்று அவரை விட்டுவிட்டேன். மருத்துவ அலுவலர் விவரங்களைக் கேட்டுவிட்டு அப்படியே அந்த காலி குப்பிகளையும் என்னிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தையும் வைத்து மாவட்ட சுகாதாரம் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த பிறகு அவருக்கு ஒரு ஊதிய நிறுத்தம் தண்டனையாக வழங்கப்பட்டது.
அவர் நிறைய திட்டி தீர்த்து விட்டார். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. நான் எப்பொழுதுமே எல்லோரிடமும் சொல்வது இதுதான்... நாம் ஒரு நோயாளியாக சென்றால் என்ன எதிர்பார்ப்போமோ, அந்த சேவையை மட்டும் செய்தால் போதும். அதற்கு மேல் நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இதுதான் என்னுடைய கருத்து.
பொது சுகாதார துறையும் அதன் பணியாளர்களும் கடுமையாக உழைக்காவிட்டால் பெரியம்மையிலிருந்து, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இளம்பிள்ளை வாதம், ரணஜன்னி, காலரா, பிளேக், மலேரியா உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை வைத்திருக்க முடியாது. அதனால்தான் இம்மாதிரி திட்டங்களில் விருப்பு வெறுப்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்பது எனது கருத்து.
நோய் தடுப்பு திட்டத்தில் பணியாற்றியதில் ஏராளமான அனுபவங்கள் உண்டு. இருந்தாலும் சுவாரசியத்திற்காக ஒன்று.... நான் திருமயம் மருத்துவமனையில் பணியாற்றிய நேரம்... தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை இறந்து விட்டது. உடனடியாக ஏதோ ஒரு அரசியல்வாதி பிரச்சினையை கிளப்பி விட்டதன் பேரில் இங்கே 10 குழந்தைகளை இறந்து போயின... அங்கே பத்து குழந்தைகள் இறந்து விட்டன என்று செய்திகள் வந்த வண்ணமாக இருந்தன..
தொலைக்காட்சிகள் அங்கிங்கு என்று எல்லா இடத்திலும் இதே புரளிதான். நான் புதுக்கோட்டை நகருக்கு வந்து மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிறுத்தி இருந்த எனது வாகனத்தினை எடுக்க சென்றபோது, அங்கே பெரிய கும்பல். அப்போது ஒருவர் திருமயம் மருத்துவமனையில் 10 குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இறந்து போய் கிடக்கின்றன என்று கத்தினார். உடனே பதறிப் போய் மீண்டும் பேருந்து ஏறி திருமயம் மருத்துவமனைக்கு சென்றேன்.
அங்கேயும் பெருங்கும்பல் நின்று கொண்டிருந்தது. ஆளாளுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து காட்டிக் கொண்டிருந்தார்கள். எந்த குழந்தையும் சாகவில்லை. அங்கிருந்த ஒருத்தர் கத்தினார் புதுக்கோட்டை பெரியாஸ்பத்திரியில் பத்து குழந்தைகள் செத்து கிடக்கின்றன...
நான் சொன்னேன். நான் அங்கிருந்து தான் வருகிறேன் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றேன்.
உங்களுக்கு தெரியாது சார். எனது நண்பர் இப்ப தான் போன் பண்றாரு... இன்னொருத்தர் சொன்னார் ஆலங்குடியில் இந்த மாதிரி ஆயிடுச்சு. உடனடியாக ஆலங்குடி மருத்துவ மனைக்கு போன் அடித்து பேசி சொன்னேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... எல்லோருமே ஒரே மாதிரியாக சொன்னார்கள். உங்களுக்கு தெரியாது சார் அங்க இப்படித்தான் ஆச்சு...
உண்மையை விட புரளி எவ்வளவு கொடூரமாக பரவி மக்களை சாகடிக்கிறது பாருங்கள். சிறிது நாள் கழித்து தெளிவான அறிக்கை வந்தது. அந்த குழந்தை இறந்தது போலியா மருந்தினால் அல்ல, அந்த குழந்தைக்கு இருந்த நோயினால் என்று.
ஏதேனும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக மக்கள் கூறுவது.. மருந்து கெட்டுப் போனது, தரம் இல்லாதது, வேலை பார்ப்பவர்கள் சரியில்லை என்று தான்... நேரடியாக மக்களிடம் தொடர்பு கொண்டு வேலை செய்யக்கூடிய மருந்தாளுனர்கள் எல்லா இடத்திலும் அவதிப்பட நேரிடுகிறது.
இவ்வளவு தூரம் பணியாற்றக்கூடிய மருந்தாளுனர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய குறையாக நான் கருதுவது இது தான்...
இந்த துறையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோய் தடுப்பு மருந்துகளை பராமரிப்பது மருந்தாளுனர், ஆனால் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி மருந்துகளை பராமரிக்க ஒரு மருந்தாளுனர் பதவி கூட கிடையாது. மாநில அளவிலும் அப்படித்தான் இருந்தது. இந்த திட்டம் ஆரம்பித்து 25 ஆண்டுகள் கழிந்த பிறகு தான் திரு குழந்தைசாமி அவர்கள் பொது சுகாதார இயக்குனராக இருந்தபோது கடும் முயற்சி செய்து இயக்குனரகத்தில் இரண்டு மருந்து கிடங்கு அலுவலர் நான்கு மருந்தாளுனர் பதவிகளை பெற்று மாநில மருந்து கிடங்கில் தடுப்பூசி மருந்துகளை பராமரிக்கும் பொறுப்பினை ஒப்படைத்து பெருமை சேர்த்தார்.
அதேபோல போலியோ சிறப்பு முகாம்களில் பணியாற்றும் மற்ற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் போது மருந்தாளுனர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை.
பொது சுகாதார துறையில் நோய் தடுப்பு திட்டத்தில் மருந்தாளுனராக பணியாற்றிய அனுபவங்கள் என்றுமே மறக்க இயலாது..
No comments:
Post a Comment