ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணான பத்திரிக்கை எனப்படும் ஊடங்களுடைய லட்சணம் என்பது ஊருக்கே தெரியும். எது நடக்கிறது என்று சொல்வதை விட எந்த செய்தியை சொன்னால் என்ன நடக்கும் என்று திட்டமிட்டு செய்யக்கூடிய அயோக்கியர்களின் கைப்பிடிக்குள் இருந்தால் மிகை ஆகாது.
இது இன்றைக்கு நேத்திக்கு சமாச்சாரம் இல்லை. காலம் காலமாக நடந்து வரும் கதை தான். தமிழர்களை பத்திரிக்கை படிக்க வைத்தவர் ஆதித்தனார் என்று பெருமையாக சொல்லுவார்கள். அவருடைய பத்திரிக்கையில் ஒரு நாள் தலைப்புச் செய்தியாக தமிழ் கடல் ரா பி சேதுப்பிள்ளை காலமானார் என்ற செய்தியை தயாரித்துக் கொண்ட செய்தி ஆசிரியர் ஆதித்தனாரிடம் ஒப்புதலுக்காக சென்ற போது, இதெல்லாம் போட்டா எவன் ஐயா படிப்பான் என்று திட்டி விட்டு, அன்றைய பெரிய நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது என முன்பக்க தலைப்புச் செய்தியாக வைத்து தமிழ் தொண்டாற்றினார்.
எழுத்துலக பத்திரிகை காலத்திலேயே சதக் சதக் என கத்தியால் குத்தினார், பாய்ந்து பிடித்தார் என்றெல்லாம் நேரடி ஒளிபரப்பு போல எழுதி தமிழர்களின் அறிவு மட்டத்தை உயர்த்தினார். அந்த பத்திரிக்கை மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளும் ஆங்கிலம் தமிழ் என்று அனைத்து மொழிகளிலும் பெரிய அளவிலோ சிறிய அளவிலோ பொதுமக்களில் உணர்வு மட்டத்தை மட்டமாக தான் வைக்க ஊடகங்கள் முயன்று வெற்றி பெற்றன.
தொலைக்காட்சிகள் வந்தாலும் வந்தன. அவை இன்னும் ஒரு படி மேலே போய் படுக்கை அறையும், கழிவறையும் தவிர எல்லா இடங்களிலும் நுழைந்து நடிகர்களின் புகழ் பாடும் அற்புத கருவிகளாகவே மாறிப் போகும். போயின.
நாட்டையே உலுக்கும் அல்லது பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் திசை திருப்பும் செய்திகளையே தலைப்புச் செய்திகளாக மாற்றியது திரும்பப்போட்டு மக்களிடையே மூளை சலவை செய்து குட்டிச்சுவராக்கும் வேலையை தான் செய்தது .
மேற்கத்திய பாணியில் கிரைம், செக்ஸ்,மலினமான விஷயங்களை முன்னிறுத்தியே ஊடகத்துறை வேலை செய்து மக்களிடையே விழிப்புணர்ச்சி இல்லாமல் செய்து வருகிறது. இதைப்பற்றி விளக்குவது பெரிய மகாபாரதம் ராமாயணம் கதை போல் தான் நீண்டு கொண்டே இருக்கும்.
சமீபத்தில் நேரலை என்ற பெயரிலே கண்ட குப்பைகளையும் சாவுகளையும் கட்டுப்பாடற்ற கும்பல்களின் செயல்பாடுகளையும் ஒளிபரப்புகிறார்கள். யாராவது தலைவர்கள், நடிகர்கள் செத்துவிட்டால் ஒட்டுமொத்த மக்களை துக்கத்தில் ஆழ்த்தி, அனைத்து வீடுகளையுமே இழவு வீடாக மாற்றிக் கொள்ளுங்கள் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை குறை சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் பணம் போட்டு பணம் சம்பாதிக்கும் முதலாளிகள். அவ்வளவுதான்., அவர்களுக்கு வேண்டியது டிஆர்பி ரேட் உயர வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும். நாட்டு மக்களும், நாசமாய் போனால் அவர்களுக்கு என்ன கவலை.
நான் சொல்ல வருவது மக்களால் இயக்கப்படுவதாக சொல்லப்படும் சமூக ஊடகங்களை பற்றி தான்...
சமூக ஊடகங்கள் இருவகையாக உள்ளன. வெளியே தெரியாமல் திட்டமிட்டு ஒரு கருத்தை உருவாக்கும் மாபியா கும்பலால் நடத்தப்படும் சமூக ஊடகங்கள் ஒருபுறம். பல்வேறு சமூக அமைப்புகள், அல்லது நபர்கள், குழுக்கள் தாங்களாகவே உருவாக்கும் சமூக ஊடகங்கள்... முகநூல்கள், whatsapp, எக்ஸ் தளங்கள் போன்றவை...
எந்தத் திரைப்படம் ஓட வேண்டும், எதை ஓடாமல் செய்ய வேண்டும்,எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யாரை வரவிடக்கூடாது, எந்த விஷயங்களையும் கொண்டு போக வேண்டும் ,எந்த விஷயங்கள் மக்களிடம் போய் சேரக்கூடாது என்று தீர்மானிக்கக் கூடிய சக்திகளாகk கண்ணுக்குத் தெரியாத இந்த மாபியா கூட்டம் வளர்ந்து வருகிறது வருகிறது வருகிறது. அவர்கள் தான் செய்திகளை. வதந்திகளை இந்த சமூக ஊடகங்களின் மூலமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் சமூக ஊழியர்கள் இயக்கங்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் போன்ற அமைப்புகள் அவர்களால் இயன்ற அளவுக்கு இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அவர்களோ குதிரைக்கு போடப்பட்ட கடிவாளங்கள், முகப்பட்டைகள் போல தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தாண்டி துளி கூட சிந்தித்து விடக்கூடாது, சமூக சிந்தனை வளர்ந்து விடக்கூடாது என்று மிகப் பரந்த மனப்பான்மையோடு?! சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
காலை வணக்கங்கள், துக்க செய்திகள் அல்லது உருப்படாத துணுக்குகள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் அன்றாட பஞ்சாங்கங்கள் போன்ற விஷயங்களை வெளியிடுவதற்கு இந்த சமூக அமைப்புகள் தடை சொல்வதே இல்லை. ஆனால் அவர்கள் சமூகம் சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு, சமூக உணர்வோடு செய்திகள் போட்டால் ஐயோ அப்பா என்று அலறிக்கொண்டு அவற்றை நீக்கி விடுகிறார்கள் அல்லது தடை போடுகிறார்கள்.
எல்லா ஊடகங்களும், சமூக ஊடகங்களும், என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. மனிதர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா, துளி கூட சமூக உணர்ச்சிகளை வளர்த்து கொள்ளாமல் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் ஆறறிவற்ற மிருக ஜென்மங்களா எனக்கு புரியவே இல்லை....

வாழ்க வளமுடன் இதுபோன்ற செய்திகளை தொடர்ச்சியாக வெளியிடவும
ReplyDelete