எல்லோருக்கும் திருமலை நாயக்கர் மஹால் என்றால், மதுரையில் உள்ள நாயக்கர் அரண்மனை தான் தெரியும். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் திருமலை நாயக்கர் அரண்மனை என்று ஒரு கட்டிடம் இருக்கிறது.
1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் நீதி நிர்வாக வசதிக்காக பல மண்டலங்களாக பிரித்து ஆட்சி செய்திருக்கிறார். அதில் நடுமண்டலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வழிபாட்டிற்கு தனது குடும்பத்தாருடன் வந்து தங்குவதற்காகவும், அரசு நிர்வாகத்தை பார்ப்பதற்காகவும் அங்கு ஒரு மாளிகையை கட்டியிருக்கிறார்.
பின்னாளில் முகலாயர் ஆட்சி செய்த காலத்தில் நீதிமன்றமாக இம்மாளிகை செயல்பட்டிருக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனியும், ஆங்கிலேயர்களும் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இம்மாளிகை டிஸ்ட்ரிக்ட் முன்சீப் கோர்ட்டாகவும், ஒரு பகுதி தாலுகா அலுவலகமாகவும் செயல்பட்டிருக்கிறது. 1921ல் தேசிய நினைவு சின்னமாக மாற்றப்பட்டிருக்கிறது.
பார்ப்பதற்கு மிக அழகாக கட்டப்பட்டிருந்தாலும் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணம் இந்தியர்களுக்கு 25 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 300 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் குறைவாக நிர்ணயம் செய்து, காட்சிப்பொருட்கள் நிறைய இருந்தால்,ஏராளமான மக்கள் வர வாய்ப்பிருக்கும் என தோன்றுகிறது.
நீதிமன்றம் இருந்ததற்கான சாட்சி கூண்டு
சிதிலமடைந்த சுவர் ஓவியங்கள்...
மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் மன்னர் பதவி ஏற்றதன் நினைவாக போர்க்கைதிகளால் உருவாக்கப்பட்ட நினைவுத்தூன். 1.1.1803












அருமை.
ReplyDelete