நவீன வாகன வருகைக்கு முன் மனிதர்கள் பயணம் செய்ய விலங்குகளையும், விலங்குகள் பூட்டிய வண்டிகளையும், தேர்களையும் பயன்படுத்தியதை நாம் அறிவோம்.
ஆனால் மனிதனை மனிதன் சுமக்கின்ற அவலம் மிக நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது.
முதியோர், ஊனமுற்றோர், வாகனத்தில் பயணம் செய்யுமளவிற்கு உடல் நலம் இல்லாதவர்கள் பயணம் செய்வதற்கு பல்லக்கை பயன்படுத்தினால் அதில் நியாயம் இருக்கிறது. எப்படி எல்லாம் பல்லக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள் பாருங்கள்.
பனாரஸில் நான்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் 1860 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு பெண்ணை சுமந்து செல்லும் பல்லக்கை சுமந்து செல்கின்றனர்.
1876 ஆம் ஆண்டு ஆல்வார் மகாராஜாவின் அரச பல்லக்கு அதன் தாங்கிகளுடன்.
ஆங்கிலேய பெண்ணின் சவாரியை தோளில் சுமக்கும் நான்கு இந்திய ஆண்கள்..இந்தியாவில், 1900 ஆம் ஆண்டு, ஒரு பிரிட்டிஷ் பன்றியை மன்னிக்கவும், வணிகரை முதுகில் சுமந்து செல்லும் பெண்.
இதுதான் வெள்ளைக்காரனின் பெருமை போலும்...
கோவாவில் 19 ஆம் நூற்றாண்டு பாதிரியின் பயணம்.






No comments:
Post a Comment