சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 4 May 2025

தவ நடிக பூபதி பி யு சின்னப்பா.

 







தவ நடிக பூபதி பி யு சின்னப்பா அவர்கள் பிறந்த தினம் இன்று.. தமிழ் திரைப்பட வரலாற்றில் மிக உன்னதமான, உயரிய இடத்தை பெற்று இருந்தவர்.. பி யு சின்னப்பா அவர்கள்.. மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய சாதனையாளர்.. முதலில் இரட்டை வேடம் 3 வேடம் என்று நடித்து புகழ்பெற்றவர்.. புதுக்கோட்டை உலகநாத பிள்ளை சின்னப்பா அவர்கள்  மே 5 1916 அன்று புதுக்கோட்டையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்து இசையில் ஆர்வம் கொண்டவர். நாடக சபையில் சேர்ந்து பயிற்சி பெற்று புகழ்பெற்றார். பிற்காலத்தில் உடற்பயிற்சி, சிலம்பம், வாள் வீச்சு, குஸ்தி என்று பல கலைகள் கற்று திரைப்படங்களில் பல சாதனைகள் புரிந்தவர். மிகக் குறைந்த காலமே(35 வருடங்கள்) வாழ்ந்தாலும் 25 படங்களில் நடித்து பெரும்பாலான வெற்றி படங்களை கொடுத்தவர்.. தானே பாடி, ஆடி சண்டைகள் போட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து பெரிய சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே தமிழில் முதன் முதலாக இரட்டை வேடம் (உத்தமபுத்திரன்) மூன்று வேடம் (மங்கையர்க்கரசி ) 10 வருடம் (ஜகதலப் பிரதாபன்) என்றெல்லாம் மாபெரும் சாதனைகளை புரிந்தவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலே கதர் சட்டை அணிந்து வலம் வந்தவர். பாரதியார் பாடல்களை திரைப்படங்களில் மேடைகளில் எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் பயப்படாமல் பாடி நடித்தவர். 35 வயதிலேயே அகால மரணம் அடைந்து தமிழ் திரைப்பட ரசிகர்களை தவிக்க விட்டு சென்றார். அண்ணாருடைய பிறந்தநாள் இன்று.

பிறப்பு 5.5. 1916

மறைவு 23.9.1951


நடித்த திரைப்படங்கள் 


ராஜமோகன் (1937)

சந்திரகாந்தா (1937)

அனாதைப் பெண் (1938)

பஞ்சாப் கேசரி (1938)

யயாதி (1938)

மாத்ரு பூமி (1939)

உத்தம புத்திரன் (1940)

ஆர்யமாலா (1941)

தயாளன் (1941)

தர்மவீரன் (1941)

கண்ணகி (1942)

மனோன்மணி (1942)

பிருத்விராஜன் (1942)

குபேர குசேலா (1943)

ஹரிச்சந்திரா (1944)

ஜகதலப் பிரதாபன் (1944)

மகாமாயா (1944)

அர்த்தநாரி (1946)

துளசி ஜலந்தர் (1947)

பங்கஜவல்லி (1947)

கிருஷ்ண பக்தி (1949)

மங்கையர்க்கரசி (1949)

ரத்னகுமார் (1949)

சுதர்சன் (1951)

வனசுந்தரி (1951)








2 comments:

  1. A great man to keep in mind always

    ReplyDelete
  2. Agreat man to be remembered always

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...