பெண்களாவது புதுமை படைப்பதாவது என
மார்கரெட் ஈ. நைட் (ஃபிப்ரவரி 14, 1838 – அக்டோபர் 12, 1914) ஓர் அமெரிக்கப் பெண் புதுமைப்புனைவாளர். இவர் "19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புதுமைப்பினைவாளர்" ஆவார்.
இயந்திரவியலில்இவர் ஜேம்சு நைட் என்பவருக்கும் அண்ணா டீல் என்பவருக்கும் மைனில் உள்ள யார்க்கில் பிறந்தார். மார்கரெட் சிறுமியாக இருந்தபோதே ஜேம்சு நைட் இறந்துவிட்டார். 12ஆம் அகவை வரை இவர் பள்ளிக்குச் சென்றார். பிறகு 12ஆம் அகவையில் இருந்து 1856 வரை ஒரு பருத்தியாலையில் பணிபுரிந்தார். இவர் 1868இல் மசாசூசட்டில் உள்ள சுப்பிரிங்ஃபீல்டில் வாழ்ந்தபோது ஆராய்ச்சி புதுமை மனப்பான்மை கொண்ட தொழிற்சாலை ஊழியரான மார்கரெட் நைட், தட்டையான அடிப்பகுதி கொண்ட காகிதப் பைகளை மடித்து ஓட்டுவதை தானியக்கமாக்க ஒரு இயந்திரத்தை உருவாக்க விரும்பினார். .
இன்று கடைகளில் பெருவழக்கில் உள்ள பழுப்புநிறத் தாள்பைகளைச் செய்யும், அதாவது தாளை மடித்தொட்டி நேரடியாகப் தட்டைப் பைகளைச் செய்யும், எந்திரத்தைப் புனைந்தார்.
நைட் இந்த எந்திரத்துக்கான மரப்படிமத்தை உருவாக்கினார். இது 19 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு. ஆனால் உரிமத்திற்கு விண்ணப்பிக்க நன்கு வேலைசெய்யும் இரும்புப் படிமம் ஒன்றைச் செய்ய விரும்பினார். நைட் இரும்பு எந்திரப்படிமத்தைச் செய்த பணிப்பட்டறையின் சொந்தக்காரரான சார்லசு அன்னான் இவரது வடிவமைப்பைத் திருடி அதற்கு உரிமம் பெற்றார்.
நைட் ஒரு வழக்கைத் தொடுத்தார். இவ்வளவு சிக்கலான சாதனத்தை ஒரு பெண் வடிவமைத்திருக்க முடியாது என்று சார்லஸ் அன்னான் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருப்பினும், நைட் துனிவாக எதிர் கொள்ள தயாராக இருந்தார். அவர் தனது கண்டுபிடிப்பை விரிவான வரைபடங்களுடன் கவனமாக ஆவணப்படுத்தினார். மேலும் கொலம்பியா காகிதப் பை நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்திலிருந்து சாட்சியங்களைச் சேகரித்தார்.
அவரது முழுமையான தயாரிப்பின் பயனாக 1871 இல் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றார், அவரது காப்புரிமையைப் பெற்றார்.
இவருக்கு வழக்கு முடிந்து 1871இல் உரிமம் வழங்கப்பட்டது
ஜவுளித் தறிகளுக்கான பாதுகாப்பு சாதனத்தை உருவாக்கியது 12 வயதிலிருந்தே அவரது கண்டுபிடிப்பு மனப்பான்மை தெளிவாகத் தெரிந்தது.
நைட்டின் இயந்திரம் காகிதப் பைத் தொழிலில் புரட்சியை ஏற்படுத்தியது, உறுதியான மளிகைப் பைகள் பரவலாகக் கிடைக்கச் செய்தது. பின்னர் அவர் தனது பைகளை உற்பத்தி செய்ய கிழக்கு காகிதப் பை நிறுவனத்தை இணைந்து நிறுவினார்.
அவரது கதை அவரது புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.
No comments:
Post a Comment