மே 14, 1796.
பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.
எட்வர்ட் ஜென்னர் தான் கண்டுபிடித்த பெரியம்மை தடுப்பூசியை பரிசோதிக்க ஜேம்ஸ் பிலிப்ஸ் என்ற 7 வயது சிறுவனைத் தேர்ந்தெடுத்தார்.
மே 14 ம் நாள் அந்த சிறுவனுக்கு பெரியம்மை தடுப்பூசியை செலுத்தினார். அவ்வாறு செலுத்திய முதல் சில நாளில் காய்ச்சல், தலைவலி, பசியின்மை போன்ற சில பிரச்சனைகள் அந்த சிறுவனுக்கு ஏற்பட்டன. என்றாலும் ஏழாம் நாள் அந்த சிறுவன் மிகவும் நலமடைந்தான்.
அதன் பிறகு எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய தடுப்பூசி மருந்தில் சிற்சில மாற்றங்கள் செய்து அதே சிறுவனுக்கு மீண்டும் மீண்டும் செலுத்தினார்.
அதன் பின்னரே முழுமையான வெற்றியடைந்த தடுப்பூசியை உலகுக்கு நல்கினார்.
உலகில் முதல் விமானப்பயணியாக, Charles Furnas என்ற பயணி, விமானத்தை கண்டுபிடித்த, அமெரிக்காவைச் சேர்ந்த Wilbur Wright இயக்க முதல் விமானப்பயணம்செய்த தினம் இன்று.
14 மே 1908.
மே 14.மிருணாள் சென்.
உலகத் தரத்துக்கு இந்தியத் திரைப்படங்களை உயர்த்திய இயக்குநர் மிருணாள் சென் (Mrinal Sen) 1923ம் ஆண்டு மே 14ம் தேதி வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் (தற்போது வங்கதேசம்) பிறந்தார்.
இவரது முதல் திரைப்படமான ராத் போர் வெற்றி அடையவில்லை. பிறகு, இரண்டாவதாக வந்த நீல் அகஷெர் நீச்சே என்ற படம் தான் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. மேலும் பைஷே ஷ்ரவன், புவன் ஷோம் என்ற படங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது.
இவரது ஏக் தின் பிரதிதின், காரிஜ், கல்கத்தா 71, அமர் புவன் ஆகிய திரைப்படங்களும் பிரபலமானவை. பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றதோடு கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளை வென்றன.
2004-ல் சுயசரிதை (Always Being Born) எழுதினார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1998 முதல் 2003 வரை கௌரவ உறுப்பினராக இருந்தார். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
வரலாற்றில் இன்று.
14 மே 2025-புதன்.
1607 : ஜேம்ஸ்டவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
1610 : பிரான்ஸின் மன்னர் நான்காம் ஹென்றி கொல்லப்பட்டார்.
13 -ம் லூயி மன்னராக முடிசூடினார்.
1643 : 13-ம் லூயி இறக்க, அவரது நான்கு வயது மகன் பதினான்காம் லூயி பிரான்ஸின் மன்னரானார்.
1796 : பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.
1800 : அமெரிக்காவின் தலைநகரை பிலடெல்பியாவில் இருந்து வாஷிங்டனுக்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பமானது.
1807 : ஸ்வீடனில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.
1879 : 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.
1900 : கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில்
ஆரம்பமானது.
1911 : தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது.
1939 : பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மதீனா உலகின் முதல், வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
1940 : இரண்டாம் உலகப்போர் :- ராட்டர்டேம் மீது ஜெர்மனி குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
1943 : இரண்டாம் உலகப்போர் :- ஆஸ்திரேலியாவின்
சென்டோர் என்ற மருத்துவக் கப்பல், குயின்ஸ்லாந்துக்கு அருகில் ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் உயிரிழந்தனர்.
1948 : இஸ்ரேல் தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி, தற்காலிக அரசையும் அறிவித்தது.
அரபு நாடுகள் இஸ்ரேலை தாக்கத் தொடங்கின.
இஸ்ரேல் போர் ஆரம்பமானது.
1965 : இலங்கையில் ரோகண விஜயவீர என்பவரால் மக்கள் விடுதலை முன்னணி எனும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1973 : ஸ்கைலாப் என்ற அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1980 : எல் சல்வடோர் உள்நாட்டுப் போரில் ராணுவத்தினரால் 600 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1986 : தமிழ்நாட்டில் மேல்சபை ஒழிக்கப்பட்டது.
1987 : பிஜி தீவில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது.
2004 : பிரேஸில், மனௌசில் விமானம் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 33 பேரும் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்று மே1 4.
1973ஆம் ஆண்டு இதே நாளில்தான் அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப் உருவாக்கப்பட்ட நாள்...
விண்ணாய்வகம் (Skylab) அமெரிக்காவின் நாசாவால் ஏவப்பட்ட ஆளில்லாத விண்வெளி ஓடம் ஆகும். 1973 முதல் 1979 விண்வெளி ஓடமாக சுற்றிய இது ஆளில்லாததும் சூரிய ஒளியால் இயக்கம் கொண்டதும் ஆகும். இதன் எடை 77 டன்.[1] இது சனிக்கோள்- ஐந்தாம் வகை ஏவு ஊர்தியால் விண்ணில் ஏவப்பட்டது.
1973-1974 காலகட்டதில் மட்டும் மூன்றுமுறை ஒரு நல்ல செயல் வடிவம் கொண்ட தொகுப்பு விண் ஆய்வகம் (Apollo command/service Module)(CSM) விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
ஒவ்வொரு முறையும் மூன்று நபர்கள் கொண்ட குழுக்கள் முறையே 28, 59 மற்றும் 84 நாட்கள் அங்கு தங்கினார்கள்.
நிலையத் தரவுகள் :
பெயர்: விண்ணாய்வகம் (Skylab)
பயணிகள்: 3 (9 மொத்தம்)
ஏவப்பட்டது: மே 14, 1973
17:30:00 உலக நேரக் குறியீடு (UTC)
ஏவப்பட்ட இடம்: கென்னெடி விண்வெளி மையம்
பூகோள மறுநுழைவு: சூலை 11, 1979
16:37:00 UTC
பெர்த், ஆஸ்திரேலியா அருகில்
நிறை: 169,950 lb (77,088 kg)[1]
w/o CSM
நீளம்: 86.3 feet (26.3 m)
w/o CSM
அகலம்: 55.8 feet (17.0 m)
ஒரு சூரியத் தகட்டுடன்
உயரம்: 24.3 feet (7.4 m)
தொலைநோக்கி ஏற்றத்துடன்
விட்டம்: 21.67 feet (6.6 m)
தற்போதைய கனவளவு: 319.8 m3 (11,290 cu ft)
அமரும் பொருத்தி (docking adapter), காற்றுப்பேழையுடன் (airlock)
Perigee: 269.7 mi (434.0 km)
Apogee: 274.6 mi (441.9 km)
ஒழுக்கு சரிவு: 50°
சுற்றுவட்ட காலம்: 93.4 நிமிடங்கள்
சுற்றுக்கள்/நாள்: 15.4
சுற்றிய நாட்கள்: 2,249 நாட்கள்
Days occupied: 171 நாட்கள்
சுற்றுக்களின் எண்ணிக்கை: 34,981
பயணித்த தூரம்: ~890,000,000 mi (1,400,000,000 கி.மீ.)
Statistics as of பூமிக்குத் திரும்பியது சூலை 11, 1979.
வரலாற்றில் இன்று மே 14.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடியான மருத்துவர் ஜேம்ஸ் டி.ஹார்டி (James D.Hardy) பிறந்த தினம் ...
அமெரிக்காவின் அலபாமா மாநிலம் நெவாலா நகரில் (1918) பிறந்தவர். தந்தை சுண்ணாம்பு ஆலை அதிபர். ஹார்டி, பள்ளி மாணவனாக இருந்தபோது நாட்டில் கடுமை யான பொருளாதார மந்தநிலை நிலவியது.
பணம் சம்பாதிப்பதற்காக தனது 2 சகோதரர்கள், நண்பர்களுடன் சேர்ந்து நடனக் குழு அமைத்தார். மேல்நிலைப் பள்ளியில் கால்பந்து குழுவில் இருந்தார். இந்த அனுபவங்கள்தான் வாழ்க்கையில் வெற்றிக்கான உத்வேகத்தை தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அலபாமா பல்கலைக்கழகத்தில் வேதியியல், உயிரியல், ஜெர்மன் மொழி பயின்று பட்டப் படிப்பை முடித்தார். பென்சில்வேனியா பல்கலையில் சேர்ந்து, மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றார்.
இரண்டாம் உலகப்போரின்போது, அமெரிக்க ராணுவத்துக்கு சேவை செய்ய அழைக்கப்பட்டார். ராணுவ சேவையில் 2 ஆண்டுகள் ஈடுபட்டார். தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகி, மனித குலத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தது அப்போதுதான்.
‘சர்ஜரி அண்ட் தி எண்டோக்ரைன் சிஸ்டம்’ என்ற தனது முதல் மருத்துவ நூலை 1950-ல் எழுதினார். தொடர்ந்து பல மருத்துவ நூல்கள் எழுதினார். மீண்டும் பென்சில்வேனியா பல்கலையில் சேர்ந்து, மனித உடலின் திரவங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். உடலியல் வேதியியலில் 1951-ல் முதுகலைப் பட்டம் பெற்றார்.
டென்னஸி பல்கலையில் அறுவை சிகிச்சை துறை உதவிப் பேராசிரியராகவும் அறுவை சிகிச்சை ஆராய்ச்சிக்கான இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளில் அறுவை சிகிச்சை துறை தலைவரானார். 1955-ல் தொடங்கப்பட்ட மிசிசிபி பல்கலை மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை துறை தலைவராகப் பதவியேற்று, 1987 வரை பணிபுரிந்தார்.
அங்கு இவரது தலைமையில் உறுப்பு மாற்று ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்தன. இதையடுத்து, பல விலங்குகளிடம் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சைகளை செய்தனர். முதன்முதலாக 1963-ல் மனித நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, விலங்கிடம் இருந்து மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை, 1964-ல் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை வெற்றிகரமாக மேற் கொண்டார்.
விலங்கிடம் இருந்து மனிதனுக்கு மேற்கொண்ட இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி பெற்றாலும், சம்பந்தப்பட்ட நபர் 90 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். இது சர்ச்சைகளைக் கிளப்பினாலும் இவரது முனைப்பால், மனித இதய மாற்று அறுவை சிகிச்சை துறை வளர்ச்சியடைய வழிவகுத்தது.
அறுவை சிகிச்சை குறித்து பல நூல்களை எழுதினார். அறுவை சிகிச்சைகள் குறித்த தகவல்களை வெளியிடும் இதழின் ஆசிரியராகவும் பல்வேறு அறுவை சிகிச்சை அமைப்புகளில் உறுப்பினராகவும் செயல்பட்டார். அமெரிக்காவில் உள்ள சுமார் 3 டஜன் மருத்துவக் கல்லூரிகளிலும் வெளிநாடுகளில் பல பல்கலைகள், கல்லூரிகளிலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
20-ம் நூற்றாண்டின் முக்கிய மருத்துவக் கண்டுபிடிப்பாளரும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் முன்னோடியுமான ஜேம்ஸ் ஹார்டி 85-வது வயதில் (2003) மறைந்தார்.
வரலாற்றில் இன்று மே 14.
இந்தியத் திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய இயக்குநர் மிருணாள் சென் (Mrinal Sen) பிறந்த தினம் இன்று...
வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் (தற்போது வங்கதேசம்) 1923-ல் பிறந்தார். தந்தை வழக்கறிஞர். விடுதலைப் போராட்ட வீரர்களை விடுவிக்கும் வழக்குகளிலேயே அதிகம் ஆஜரான தால், சுமாரான வருமானம்தான் கிடைத்தது. கொல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார் மிருணாள் சென்.
படித்து முடித்தவுடன் மருந்துப் பொருள் விற்பனைப் பிரதிநிதி வேலை கிடைத்தது. அதில் அதிக நாள் நீடிக்கவில்லை. சினிமா குறித்து பல புத்தகங்களைப் படித்தார். திரைப்பட விமர்சனங்கள் எழுதிவந்தார்.
கல்கத்தா ஃபிலிம் ஸ்டுடியோவில் ஆடியோ தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். 1950 முதல் முழுநேர திரைப்படப் பணிகளில் இறங்கினார்.
கம்யூனிசமும் சினிமாவும் இவரது இரண்டு கண்கள். தனது ஆரம்பகால திரைப்படங்களில் கம்யூனிசக் கொள்கைகளை வெளிப்படுத்தினார். இவரது முதல் திரைப்படமான ‘ராத் போர்’ வெற்றி அடையவில்லை. 2-வது திரைப்படமான ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. 3-வது திரைப்படம் ‘பைஷே ஷ்ரவன்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, இவருக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது.
நடுத்தர மக்களின் குடும்பப் பிரச்சினைகளை சித்தரிக்கும் படங்களை அடுத்தடுத்து எடுத்தார். குறைந்த செலவில் எடுக்கப்பட்டு 1969-ல் வந்த ‘புவன் ஷோம்’ இவரை திரை உலகின் முக்கிய அடையாளமாக மாற்றியது.
இவரது ‘ஏக் தின் பிரதிதின்’, ‘காரிஜ்’, ‘கல்கத்தா 71’ திரைப்படங்கள் பிரபலமானவை. 80 வயதில் இவர் இயக்கிய ‘அமர் புவன்’ திரைப்படம் மீண்டும் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
இவரது பல திரைப்படங்கள் கொல்கத்தாவை கதைக்களமாகக் கொண்டவை. அவரது படங்களில் கொல்கத்தா நகரமும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். தான் படித்த கதைகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான படங்களை உருவாக்கினார். ஏறக்குறைய 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் 4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய 4 மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றதோடு கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதைகளை வென்றன.
2004-ல் சுயசரிதை (‘ஆல்வேஸ் பீயிங் பார்ன்’) எழுதினார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1998 முதல் 2003 வரை கவுரவ உறுப்பினராக இருந்தார். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன.
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த அடையாளமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள மிருணாள் சென் கொல்கத்தாவில் வசித்து வந்த நிலையில்
டிசம்பர்30தேதி(2018)அன்று
உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
No comments:
Post a Comment