சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 9 May 2025

வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 9.

கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தைத் தொடர்ந்த நாள்: மே 9- 1502...

கொலம்பஸ்.

கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்.

கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். இவர் 1502-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி தனது கடைசி பயணத்தை மேற்கொண்டார்.

வரலாற்றில் இன்று மே 9.

விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கியது, அமெரிக்க வானியலாலர் லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு நினைவு நாள் இன்று (மே 9, 1970)...

லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு (லூயிஸ் ஃப்ரீலேண்ட் ஜென்கின்ஸ்) ஜூலை 5, 1888ல் மசாசூசட்டில் உள்ள பிட்சுபர்கில் பிறந்தார். 1911ல் மவுண்டு கோலியோக் கல்லுரியில் பட்டம் பெற்றார். இவர் அதே நிறுவனத்தில் 1917ல் வானியலில் முதுவர் பட்டம் பெற்றார். 1913ல் இருந்து 1915 வரை பிட்சுபர்கில் உள்ள அல்லிகேனி வான்காணகத்தில் பணிபுரிந்தார். பின்னர், இவர் மவுண்டு கோலியோக் கல்லூரியில் 1915 முதல் 1920 வரை பயிற்றுநராக இருந்தார். 

ஜென்கின்சு 1921 ஆம் ஆண்டளவில் ஜப்பானுக்குச் சென்று மகஇர் கிறித்தவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1925ல் மீண்டும் தன் தந்தையார் இறந்தும் அமெரிக்காவுக்கு வந்தார். ஓராண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மீண்டும் வந்து கிமேயில் உள்ள கினமாட்டோ கோகுவென் சிறுமியர் உயர்நிலைப்பள்ளி சேர்ந்தார். ஜென்கின்சு 1932ல் அமெரிக்காவுக்கு வந்து, யேல் பல்கலைக்கழக வான்காணகத்தில் புலவுறுப்பினராகச் சேர்ந்தார். இவர் வானியல் இதழின்(வானியல் இதழ்) இணையாசிரியராக 1942ல் இருந்து 1958 வரை பணியாற்றி உள்ளார். இவர் தன் வாழ்நாளின் கடைசியில் மீண்டும் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளார். 

இவர் அண்மையில் உள்ள விண்மீன்களின் கோணவியல் இடமாறு தோற்றப் பிழை ஆய்வுக்காகப் பெயர் பெற்றவர். இவர் மாறும் விண்மீன்களைப் பற்றியும் ஆய்வு செய்தார். இவர் சூரியனில் இருந்து 10 பார்செக் தொலைவுக்குள் அமைந்த விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கினார். மேலும், யேல் பொலிவுமிகு விண்மீன்களின் வானியல் அட்டவணையையும் திருத்தம் செய்தார். விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கிய லூயிசு பிரிலாந்து ஜென்கின்சு மே 9, 1970ல் தனது 82வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.



வரலாற்றில் இன்று மே.9.

அறிவியல் களத்தில் நோபல் பரிசை வென்ற முதல் அமெரிக்க விஞ்ஞானியான ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் (Albert Abraham Michelson) நினைவு தினம் இன்று...

போலந்து நாட்டின் ஸ்டெரால்னோ என்ற ஊரில் யூதக் குடும்பத்தில் (1852) பிறந்தவர். இவர் பிறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. தந்தையின் வர்த்தகம் காரணமாக, நியூயார்க், வர்ஜீனியா, நெவாடா, சான்பிரான்சிஸ்கோ என பல இடங்களில் வசித்தனர்.

சான்பிரான்சிஸ்கோவில் அத்தை வீட்டில் தங்கி, பள்ளிப் படிப்பை முடித்தார். இவரது அறிவாற்றல், அறிவியல் ஆர்வத்தை உணர்ந்த பள்ளி ஆசிரியர், சோதனைக் கூடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். பின்னர், அவரது ஆலோசனைப்படி அமெரிக்க கடற்படை அகாடமி சிறப்புப் பிரிவில் 4 ஆண்டுகள் பயின்றார்.

அங்கு ஒளியியல், வெப்பவியல், பருவகாலவியல், ஓவியக் கலை பயின்றார். 1873-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2 ஆண்டுகள் இயற்பியல், வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1883-ல் கிளீவ்லேண்டில் கேஸ் ஸ்கூல் ஆஃப் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

பெர்லின், பாரீஸில் பயந்து முதுகலைப் பட்டம் பெற்றார். 1889-ல் கிளார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1892-ல் தொடங்கப்பட்ட சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு தொடங்கப்பட்ட இயற்பியல் துறையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஓய்வு பெறும்வரை பணியாற்றினார்.

அமெரிக்க குடியுரிமை பெற்றார். இயற்பியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். ஒளியின் வேகத்தைக் கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினார். 'குறுக்கீட்டுமானி' (இன்டர்ஃபெரோமீட்டர்) என்ற எளிய கருவியை வடிவமைத்து, ஒளியின் வேகத்தை துல்லியமாகக் கணக்கிட்டார்.

ஒளியின் வேகம் அடிப்படை மாறிலி என்பதை ஆய்வு மூலம் நிறுவினார். குறுக்கீட்டுமானியைக் கொண்டு, 'ஆல்பா ஆரியன்ஸ்' என்ற விண்மீன் விட்டத்தை அளந்து கூறினார். பல்வேறு அறிவியல் இதழ்களில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டன.

பிரபஞ்சம் முழுவதும் திரவ, வாயு நிலைக்கு இடைப்பட்ட 'ஈதர்' என்ற ஊடகம் பரவியுள்ளதாகவும், அதன் வழியாகவே ஒளிச் செல்வதாகவும் அதுவரை ஊடுருவுகிறது. அறிவியலாளர்கள் கருதியது தவறு என்பதை மார்லி என்ற விஞ்ஞானியோடு இணைந்து நிரூபித்தார். இது 'மைக்கேல்சன் - மார்லி ஆய்வு' என்பது புகழ்பெற்றது.

அமெரிக்க இயற்பியல் கழகத் தலைவராக 1900-ல் நியமிக்கப்பட் டார். ஒளியியல், நிறமாலையியல், வானிலை குறித்த இவரது ஆய்வுகளுக்காக 1907-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதன்மூலம் அறிவியல் களத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை பெற்றார்.

மேத்யூகி பதக்கம், காப்ளே பதக்கம், பிராங்க்ளின் நிறுவனத்தின் எலியட் கிரைசன் பதக்கம், தேசிய அறிவியல் கழகத்தின் டிரேப்பர் பதக்கம், ராயல் வானியல் கழகத்தின் தங்கப்பதக்கம் உட்பட பல்வேறு பரிசுகளைப் பெற்றார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.

மவுன்ட் வில்சன் வானியல் ஆய்வு மையத்தில் இணைந்து பணியாற்றினார். இறுதிவரை ஆய்வுகளில் ஈடுபட்டு அறிவியல் களத்தில் மகத்தான பங்களிப்புகளை வழங்கிய ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் 79-வது வயதில் (1931) மறைந்தார்.



 வரலாற்றில் இன்று.மே.9.

பெர்டினாண்ட் மோனார் பிறந்த தினம் இன்று...

பிரான்ஸ் நாட்டின் கண் மருத்துவரான பெர்டினாண்ட் மோனயர் புகழ்பெற்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு அணியப்படும் கண்ணாடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது டையாப்ட்டர் (டையோப்டர்) அல்லது தையோத்தர் என்ற அளவை உருவாக்கியவர்., இதுதவிர, மோனயர் விளக்கப்படம் எனும் பார்வை திறனை அறிய உதவும் எழுத்துக்கள் அடங்கிய படத்தை உருவாக்கியவரும் இவர்தான்.

மே 9,1836 ல் மோனார் பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர், கண் தொடர்பான ஆராய்ச்சி மருத்துவராக வந்தார், இவரின் கண்டுபிடிப்புகள் 140 மேலும் தொடர்ந்து இன்று நவீன உலகத்திலும் அதாவது மோனயர் சார்ட்டை அடிப்படையாக கொண்டே பார்வைதிறன் மற்றும் டையப்ட்டர் எனப்படும் கண்ணாடிஅளவுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஃபெர்டினாண்ட் மோனயர் ஜூலை 11 ,1912இல் தனது 76ஆவது வயதில் காலமானார்.

 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...