இது ஒரு மனதை உடைக்கும் புகைப்படம் . இறக்கும் நிலையில் இருக்கும் கரடியின் முன் நான்கு பேர் பெருமையுடன் அமர்ந்திருப்பது ஏதோ ஒரு வெற்றிக் கோப்பை போல - இது ஒரு சாதனை அல்ல, வேதனையானது மட்டுமல்ல கேவலமானது....
ஒரு போதும் விலங்குகள் தனது உணவு தேவையை தாண்டி, அல்லது பாதுகாப்பை தாண்டி வேறு எந்த விலங்கையும் கொள்வதில்லை. மற்ற விலங்குகளை கொன்றுவிட்டு மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்வதில்லை.
மற்ற விலங்குகளை கொன்றுவிட்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், குற்ற உணர்ச்சி இல்லாமல் திரிவதில்லை. ஆறறிவு படைத்த நாகரீகம் படைத்தவர்கள் என்று சொல்லக்கூடிய மனிதர்கள் மட்டுமே கேவலமாக மற்ற விலங்குகளை துன்புறுத்தி கொன்று மகிழ்ச்சி அடைகிறார்கள். சக மனிதர்களையே துன்புறுத்தும், சுரண்டி, ஏமாற்றிப்பிழைக்கும் கேவலமான மனிதர்களிடம் இதைத் தாண்டி வேற என்ன எதிர்பார்க்க முடியும்...
விளையாட்டுக்காக காட்டு விலங்குகளை வேட்டையாடுவது உங்களை தைரியமாகவோ அல்லது சாதனை படைத்தவராகவோ மாற்றாது. இது இயற்கையை அழிக்கிறது, சுற்றுச்சூழல் சமநிலையை சீர்குலைக்கிறது, மேலும் காடுகளில் சுதந்திரமாக வாழத் தகுதியான ஒரு உயிரினத்தின் உயிரைப் பறிக்கிறது.
கரடிகள் இறக்கும்போது அதனுடன் போஸ் கொடுக்காமல், வாழ விடுங்கள் என கெஞ்சி கேட்கத்தான் முடியும்....
No comments:
Post a Comment