வரலாற்றில் இன்று.
11 மே 2025-ஞாயிறு.
868 : டைமண்ட் சூத்திரா வாங்சே என்பவரால் சீனாவில் அச்சிடப்பட்டது.
இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப்பழமையான
அச்சு நூலாகும்.
912 : அலெக்சாண்டர் பைசண்டைன் பேரரசராக முடிசூடினார்.
1310 : பிரான்ஸின் நான்காம் பிலிப் மன்னர் 54 பேரை சமய மறுப்பிற்காக உயிருடன் எரித்தார்.
1502 : கொலம்பஸ் தனது கடைசி கடற்பயணத்தை அமெரிக்க கண்டம் நோக்கி ஆரம்பித்தார்.
1796 : இங்கிலாந்தில் யார்க் எனும் இடத்தில் முதல் மனநோயாளி விடுதி திறந்துவைக்கப்பட்டது.
1812 : லண்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஸ்பென்சர் பெர்செவல், ஜான் பெல்லிங்கம் என்பவனால் கொல்லப்பட்டார்.
1833 : பிரிட்டனின் பயணிகள் படகு நியூபவுண்ட்லாந்து
தீவுக்கரையில் பனி மலையின் மீது மோதி மூழ்கியதில் 265 பேர் உயிரிழந்தனர்.
1857 : சிப்பாய்க் கிளர்ச்சி :- இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரிட்டிஷாரிடம் இருந்து கைப்பற்றினர்.
1858 : மினசோட்டா அமெரிக்காவின் 32-வது மாநிலமாக அனுமதிக்கப்பட்டது.
1905 : ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
1910 : மொன்டானாவில் பனிப்பாறை தேசியப் பூங்கா நிறுவப்பட்டது.
1918 : துருக்கி - பின்லாந்து சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது.
1924 : மெர்சிடிஸ் - பென்ஸ் நிறுவனம், காட்லிப் டைம்லர் மற்றும் கார்ல்பென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
1943 : இரண்டாம் உலகப் போர் :- அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றின.
1945 : இரண்டாம் உலகப்போர் :- ஒகினாவா கரையில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் மீது ஜப்பான் ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 346 பேர் கொல்லப்பட்டனர்.
1949 : சயாம் தனது பெயரை தாய்லாந்து என இரண்டாவது முறையாக மாற்றிக்கொண்டது.
1953 : டெக்சாஸில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
1962 : இந்தியாவின் ஜனாதிபதியாக டாக்டர்
எஸ். ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985 : இங்கிலாந்தின் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற தீவிபத்தில் 56 பார்வையாளர்கள் உயிரிழந்தனர்.
1987 : பஞ்சாபில் கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.
முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை மேரிலாந்தில் நடத்தப்பட்டது.
1988 : சென்னையில் பிர்லா கோளரங்கம் திறந்து வைக்கப்பட்டது.
1995 : 170 நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
1996 : மியாமியில் இருந்து புறப்பட்ட விமானம் தீப்பிடித்து விழுந்ததில் அதிலிருந்த 110 பேர்களும் உயிரிழந்தனர்.
1998 : இந்தியா பொக்ரானில் மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.
2013 : துருக்கியில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
2016 : பாக்தாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுவெடிப்பில் 103 பேர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment